For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் மத்தியில் பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.. இதை எப்படி சமாளிப்பது?

|

பன்றிக் காய்ச்சல் என்ற இந்த நோய் இன்ப்ளூயென்ஸா என்ற வைரஸ் மூலம் பன்றிகளிடமிருந்து பரவுகிறது. இந்த நோயை ஸ்வைன் ப்ளூ என்றும் கூறுவார்கள். இந்த நோய் ஒரு தொற்று நோயாக ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடியது. சமீபத்தில் நம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆறு நீதிபதிகள் இந்த பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர். இதனால் பல வழக்கு விசாரணைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

25 பிப்ரவரி 2020 அன்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் என்பவர் உச்சநீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பாதிப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுடன் ஒரு சந்திப்பு கூட்டம் நடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த கொடிய வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகளை நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பெற வலியுறுத்தப்படுகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தேசிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் (என்.சி.டி.சி) வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டிலேயே மொத்தம் 884 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக 172 வழக்குகளும், டெல்லியில் 152 வழக்குகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா மற்றும் தெலுங்கானா முறையே 151 மற்றும் 148 வழக்குகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

இன்புளுயன்சா என்ற வைரஸ் பாதிக்கப்பட்ட பன்றிகளிடமிருந்து சுவாச நோயானது மனிதருக்கு பரப்புகிறது. பன்றி இறைச்சியை சாப்பிட்டவர்களுக்கு கூட இது பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் வழியாக இந்த H1N1 என்ற வைரஸ் பரவி வருகிறது.

குறிப்பாக நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்கள், நாள்பட்ட நோய் உடையவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களை இந்த நோய் தாக்குகிறது.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும்.

* சளி

* காய்ச்சல்

* இருமல்

* மூக்கு ஒழுகுதல்

* தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை புண் தோன்றும்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கலாம். அதே மாதிரி பாதிக்கப்பட்ட நபர் ஆன்டி-வைரல் மருந்துகளான ஜனாமிவிர் மற்றும் பெரமிவிர் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தடுப்பு ஊசிகள்

தடுப்பு ஊசிகள்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலின் முதல் தடுப்பூசி, வக்ஸிஃப்ளூ-எஸ் என அழைக்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இந்த தடுப்பூசியை ஜூன் 3, 2015 அன்று அஹமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலா நிறுவனத்தால் 300 ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது. அதே போல் 5 ஜூன் 2015 ல் நாசோவாக் என்ற தடுப்பூசி கண்டறியப்பட்டது. இது குறைவான பக்க விளைவுகளுடன் 200 ரூபாய் செலவில் வந்தது மக்களுக்கு உதவியாக அமைந்தது.

இன்ப்ளூயென்ஸா வைரஸின் நான்கு தீவிர நிலைகளான A (இரண்டு), B (இரண்டு) என்ற நான்கு நிலைகளையும் குணப்படுத்தும் நோக்கத்தோடு வந்தது தான் ஸ்ட்ரெய்ன் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி 'ஃப்ளூக்வாட்ரி என்பது. இது ஒரு ஊசிக்கு 1400 செலவாகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

தடுப்பு நடவடிக்கைகள்

* முதலில் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்

* இது சுவாசம் வழியாக பரவுவதால் வாய் முகமூடிகளை அணிந்து செல்லுங்கள்.

* தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்களை நீர்ச்சத்தோடு வைத்திருக்க உதவும்.

* சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.

* சிக்கன் மற்றும் பன்றி இறைச்சிகளை சமைக்கும் போது 70 டிகிரி வெப்பநிலையில் வைத்து சமையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Prevent Swine Flu

Swine flu is back. Here is how you can prevent this deadly disease. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more