For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை எல்லாரும் வெறுத்து ஒதுக்குறாங்களா ? இந்த தப்பு தான் செஞ்சிருப்பீங்க

|

வாழ்க்கையில் நிராகரிப்பைச் சந்திக்காத மனிதர்கள் யாரும் இருந்துவிட முடியாது. நீங்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நிராகரிப்பைச் சந்திருப்போம். அந்த நிராகரிப்பு உங்களை கூறுபோட்டது போல மிகவும் காயப்படுத்தி இருக்கும். ஒரு மனிதராக இங்கு எல்லோரும் ஒருவரையொருவர் நேசிக்கப்படுவதையும், ஏற்றுக்கொள்ளப்படுவதையும் விரும்புகிறோம். வாழ்வதற்கு தேவையான முக்கியமான காரணிகளில் சமூகமாக இருப்பது என்பது இன்றியமையாததாக இருக்கிறது. ஏனெனில் தனியாக வாழ்வது பற்றி நாம் யோசித்தது கூட இல்லை.

Rejection

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிராகரிப்பு என்பது நீங்கள் மனிதர்களுடன் எவ்வளவு தூரம் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. நேருக்கு நேர் நிராகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வு கூட பரவாயில்லை. ஆனால் நமக்கு பிடித்ததை முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடும் போது குறைந்த லைக்குகளை பெற்றுவிட்டோம் என்பதற்காக நிராகரிக்கப்படுகிறோம் என்று எண்ணுவதெல்லாம் நீங்கள் சமூகத்துடன் உங்களை இன்னும் அதிகமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் நிதர்சனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களை நீங்களே தாக்கிக் கொள்ளாதீர்கள்

உங்களை நீங்களே தாக்கிக் கொள்ளாதீர்கள்

உங்களை நீங்களே தாக்கிக் கொள்வது போல் உங்களை நீங்களே குறைக் கூறிக் கொள்கிறீர்கள், குற்ற உணர்வோடு சுற்றித் திரிவீர்கள், அதிகமான பொறுப்புகள் இருப்பதாக உணர்ந்துக் கொள்வீர்கள், இறுதியாக நம்பிக்கையை இழந்து வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதுவீர்கள். ஆனால் காதல் விசயத்தில் நிராகரிக்கப்படுவது என்பது வேறு. அந்த தருணங்கள் நடைபெறுவதற்கு தக்க காரணங்கள் இருக்கும். சில சமயங்களில் அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். சில கால வலிகளைக் கொடுத்தாலும் அது சரிசெய்துக் கொள்ளக் கூடிய ஒன்று தான். ஆனால் அதைத் தாண்டி நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள் என கற்பனை செய்துக் கொண்டு இருப்பவர்கள் நிராகரிப்பில் இருந்து எவ்வாறு விடுபட்டு நேர்மறையான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழிகளைப் பார்ப்போம்.

நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்:

#1 பயம்

#1 பயம்

நீங்கள் நினைத்தவர்கள் நீங்கள் நினைத்தபடி உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என எண்ணி நாம் நிராகரிக்கப்படுகிறோம் என்கிற பய உணர்வு உங்களுக்குள் ஏற்படுகிறது.

ஏதாவது ஒரு தருணத்தில் நீ எனக்கு வேண்டாம் என்று உங்கள் அன்புக்குறியவர்கள் சொல்கிறார்கள் என்றால் அது நிச்சயம் உங்கள் இதயத்தைக் குத்திக் கிழிப்பது போன்ற உணர்வைத் தரும். நிதானமாக சிந்தியுங்கள் உங்கள் அன்புக்குரியவர்களிடம் அந்த வார்த்தை வருகிறது என்றால் என்ன நடந்திருக்கும். உங்களை அவர் நிராகரிக்கப்படுவதாக தொடர்ந்து வற்புறுத்தியிருப்பீர்கள். உடனே உங்கள் அன்புக்குறிவரோ நீங்கள் அவருடன் வாழ விருப்பமின்றி நிராகரிப்பதாக நினைத்து தங்களை பிடிக்கவில்லை என்று உரக்கச் சொல்லுவார்.

இங்கு இருவருக்குமான கசப்பான சம்பவம் நடந்திருக்கும் அந்தச் சமயத்தில் ஒருவருக்கொருவரான உரையாடலை குறைத்துவிட்டு உங்கள் கற்பனை சக்திக்கு இடமளித்திருப்பீர்கள். எதிர்மறையான சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு நிராகரிக்கப்படுவதாக பய உணர்வை ஏற்படுத்தியிருக்கும் . இதற்கான ஒரே தீர்வு உங்கள் உரையாடலை புதுப்பியுங்கள். மனதில் எந்த சிந்தனைகள் இல்லாமல் புதிதாக வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுங்கள்.

#2 பிறரைப் போல் தானும் கவனம் பெற வேண்டும் என நினைப்பது

#2 பிறரைப் போல் தானும் கவனம் பெற வேண்டும் என நினைப்பது

நண்பர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவன் பேசும் போது மட்டும் அனைவரின் கவனமும் இருக்கிறது. ஆனால் நீங்கள் பேசும் போது அனைவருடைய கவனமும் சிதறுகிறது என்று நினைத்து நீங்கள் நிராகரிக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள். எல்லோருடைய தேவைகளை அறிந்து எப்படி பேசினால் நம் நண்பர்கள் கேட்பார்கள் என ஒவ்வொருவரைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து நீங்கள் பொறாமைப்பட்டவர் பேசியிருப்பார். அவனைப் போல் தான் பேசுவதையும் உங்கள் நண்பர்கள் கேட்க வேண்டும் என்பதை தவிர நண்பர்களுடன் உள்ளார்ந்த கலந்துரையாடலை விரும்பாத போது உங்களின் பாட்சா அங்கே பலிக்காமல் போகிறது. அப்போது அவர்களின் கவனத்தைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாக பேச ஆரம்பிப்பீர்கள். அது பொய்யென தெரியும் போது உங்களின் தன்மதிப்பை இழப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமான இடைவெளியை அது மிகப் பெரியதாக்கும்.

#3 மனதில் கோட்டை கட்டுவது

#3 மனதில் கோட்டை கட்டுவது

உங்கள் நெருங்கியவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக நெடுந்தூரம் பயணிக்கிறீர்கள். நீண்ட காலம் பேச்சைத் தவிர்க்கிறீர்கள். அப்படிப்பட்ட சூழலில் உங்கள் நெருங்கியவர்கள் உங்களிடம் பேசாமல் இருப்பதை எண்ணி தினம் தினம் நொந்து போவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் உங்கள் நெருங்கியவர்கள் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். அந்த சமயத்தில் தான் உழைத்தது போது நெருங்கியவர்களுடன் நேரத்தை செலவிடலாம் என ஆசையாக வருவீர்கள். மிகப் பெரிய அடியைச் சந்தித்த எவரும் மீண்டும் அதற்காக காத்திருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் கொஞ்சி குழாவியதைப் போல் இருக்க வேண்டும் என்ற உணர்வு சுக்கு நூறாகிப் போகும். உங்கள் நிராகரிப்பதாக நினைப்பீர்கள்.

நிராகரிப்பிலிருந்து வெளிவருவதற்கான யோசனைகள்:

நிராகரிப்பிலிருந்து வெளிவருவதற்கான யோசனைகள்:

எதற்கும் கொஞ்ச கால பொறுத்திருங்கள்

நீங்கள் உண்மையாக நிராகரிக்கப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்களின் இருப்பை அவர் தேடும் போது நீங்கள் இல்லாமல் இருந்திருப்பீர்கள். அந்த அனுபவம் யார் மீதும் அக்கறை எடுக்க வேண்டாம் என்ற அளவுக்கு அவர்களை தள்ளியிருக்கும் எனவே கொஞ்ச காலம் பொறுத்திருந்து பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கையை அளியுங்கள்.

வாழ்வின் மீதியை தொலைத்து விடாதீர்கள்

வாழ்வின் மீதியை தொலைத்து விடாதீர்கள்

யாரோ ஒருவர் உங்களை நிராகரித்துவிட்டார் என்பதற்காக உங்கள் வாழ்க்கை முடிவதில்லை. உங்களுக்காக குறைந்த பட்சம் ஒருவராவது இருப்பார் அவருக்காகவாவது வாழுங்கள். உங்களுக்கென்ற அதீத திறமைகள் இருக்கும். அது உங்களுக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் அது நாட்டு மக்களுக்குத் தேவையானதாகக் கூட மாறலாம். நாம் பிறருக்குப் பயன்படுகிறோம் என்று வரும்போது உண்மையான அன்பின் எல்லைகளை அப்போது தான் காண்பீர்கள்.

உள்விமர்சனங்களுக்கு குட் பை சொல்லுங்கள்

உள்விமர்சனங்களுக்கு குட் பை சொல்லுங்கள்

உங்களை நீங்களே விமர்சனம் செய்துக் கொள்வது தான் உங்களை வாழ்வின் அடுத்தப்படிநிலைக்கு எடுத்துச் செல்லும். ஆனால் அளவுக்கு அதிகமாக விமரசனங்களை வைக்கும் போது அது உங்களை தாழ்வு மனப்பான்மை எனும் பாதாளாத்திற்கு கொண்டு செல்லும். உள்விமர்சனங்கள் வாழ்வின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர உங்களை அழுத்திக் கொள்வதற்காக இருக்கக் கூடாது.

எல்லாத்துக்கும் நீங்கள் காரணம் இல்லை

எல்லாத்துக்கும் நீங்கள் காரணம் இல்லை

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் தான் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் . பெருந்தன்மையாக ஒட்டுமொத்த தவறுக்கும் தான் தான் காரணம் முதலில் சொல்லும் போது நன்றாக இருக்கும். அதையே அவர்கள் உங்களிடத்தில் திருப்பி சொல்லும் போது அது உங்களுக்கு பெரிய தவறாகத் தெரியும். எனவே செய்யாதத் தவறுக்கு பொறுப்பேற்காதீர்கள்.

எல்லாம் சில காலம் தான்

எல்லாம் சில காலம் தான்

உங்கள் வாழ்க்கையில் நிலையாக இருப்பவர்கள் உங்களை நிராகரித்தால் நீங்கள் கவலைப்படுங்கள். இன்று வந்துவிட்டு நாளைச் செல்பவர்களுக்காக ஒருபோதும் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். ஏன் உங்கள் ஆற்றலை கொஞ்சம் கூட விரயம் செய்யாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health மூளை
English summary

How to Overcome the Fear of Rejection and Improve Self Esteem

Rejection in today's digital age depends on how far you are connected to humans. Even the feeling of being rejected face-to-face is okay. But when you feel that we are being rejected for having gotten less likes when posting on social networks, including the facebook, Instagram, it is obvious that you have to socialize yourself more.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more