Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
இரவு தூங்கும் முன் இத ஒரு டம்ளர் குடிச்சா, கொரோனா வராத அளவு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதத்தில் பல பானங்கள் உள்ளன. அதில் ஒன்று திரிபலா. மூன்று மூலிகைகளின் கலவை தான் திரிபலா. இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் முக்கிய மருத்துவப் பொருளாக பயன்படுகிறது
கொரோனா வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. உலகளவில் தற்போது நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வைரஸை அழிக்க இன்னும் மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்றாலும், மக்கள் பலரும் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் வாழ வேண்டியுள்ளது.
இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, சமூக விலகல், சுகாதாரத்துடன் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்வதும் தான். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களில் இருந்து விலகி இருக்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதத்தில் பல பானங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் திரிபலா. மூன்று மூலிகைகளின் கலவை தான் திரிபலா. இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் முக்கிய மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திரிபலாவில் உள்ள மூன்று மூலிகைகள்
திரிபலா என்பது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் அடங்கியது தான் திரிபலா. இந்த மூன்று மூலிகைகளுமே பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதனால் தான் ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க திரிபலா பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த, தலைமுடி, நகங்கள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தான்றிக்காயின் மருத்துவ குணங்கள்
தான்றிக்காய், பல்வேறு சத்துக்களை உள்ளக்கிய மூலிகைப் பொருள். இதில் பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகம் உள்ளது. இந்த மூலிகைப் பொருள் இரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்கவும், எலும்புகளை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவி புரியும்.

கடுக்காய்
கடுக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிரம்பியுள்ளன. இது செரிமானத்திற்கும், உடல் எடை குறைக்கவும், தொண்டை புண், அலர்ஜி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை சரிசெய்யக்கூடியது.

டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* திரிபலா பவுடர் - 1 டீஸ்பூன்
(அல்லது)
* தண்ணீர் - 1 கப்
* நெல்லிக்காய் - 1
* கடுக்காய் - 1
* தான்றிக்காய் - 1

தயாரிக்கும் முறை:
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றுமே நாட்டு மருந்துக் கடையில் உலர்ந்த வடிவிலும், திரிபலா பொடியாகவும் கிடைக்கும்.
செய்முறை 1:
ஒரு பாத்திரத்தில் 1 கப் சுடுநீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடி சேர்த்து 2 நிமிடம் கழித்து குடிக்கவும்.
செய்முறை 2:
ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போட வேண்டும். நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து, 2-3 நிமிடம் கழித்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
விருப்பமிருந்தால், அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

திரிபலா டீயின் நன்மைகள்
* திரிபலா டீ, உடலில் கோலிசிஸ்டோகினின்களை சுரக்க உதவி புரிந்து, விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கிறது.
* இது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் நோய் உண்டாக்கும் கிருமிகளை நீக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* செரிமானம் தொடர்பான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், திரிபலா டீ குடலியக்கத்தை சீராக்க உதவும்.
* ஈறு அழற்சி, ஈறு நோய்கள் மற்றும் வாய் புண் போன்ற பல் பிரச்சனைகளுக்கு திரிபலா டீ நல்ல தீர்வளிக்கும்.
* பெண்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் போது திரிபலா டீயைக் குடித்தால், விரைவில் சரியாகும்.

திரிபலா டீயை எப்போது குடிப்பது நல்லது?
திரிபலா டீயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு வேண்டுமானாலும் திரிபலா டீயைக் குடிக்கலாம். இதனால் திரிபலாவில் உள்ள முழு சத்துக்களும் உடலுக்கு கிடைத்து, உடல் பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.



Click it and Unblock the Notifications
