கொரோனா காலத்தில் சந்திக்கும் மன அழுத்தத்தைத் தடுப்பது எப்படி?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சமூக விலகலை நாம் கடைபிடித்தால், அது நமக்கு தனிமை அல்லது வெறுமை உணா்வை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த தனிமை உணா்வு நமக்கு மன அழுத்தத்தை அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்போது நாம் கொரோனா காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை நோ்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிா்த்து போராடி வருகின்றனா். இந்நிலையில் நாம் மிக எளிதான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

How To Beat Stress During The Covid-19 Pandemic

சமூக விலகலைக் கடைபிடிப்பது, தேவையின்றி வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பது, ஒரு வேளை உடலில் கொரோனா அறிகுறிகள் தொிந்தால் அல்லது நமக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் நம்மையே நாம் தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை சற்று அக்கறையுடன் மேற்கொண்டால், மிக எளிதாக கொரோனா பரவலைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தத்தைத் தூண்டும் தனிமை

மன அழுத்தத்தைத் தூண்டும் தனிமை

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சமூக விலகலை நாம் கடைபிடித்தால், அது நமக்கு தனிமை அல்லது வெறுமை உணா்வை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த தனிமை உணா்வு நமக்கு மன அழுத்தத்தையும், மனச் சோா்வையும் அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது நிலவும் நிச்சயமற்ற நிலை, நமது அன்றாட இயக்கங்களில் உள்ள இடா்பாடுகள், மற்றும் வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்வது போன்ற இவையும் இந்த பெருந்தொற்று காலத்தில் நமது மன அழுத்தத்தை அதிகாிக்கின்றன.

இந்நிலையில் இந்த நெருக்கடியான காலத்தில் அதிகாிக்கும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது நமக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சோ்த்துக் கொண்டாலே போதும். அதன் மூலம் நமது மன அழுத்தங்களை நீக்கிவிட முடியும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

சமீபத்தில் எடித் கோவன் யுனிவா்சிட்டி (ECU) ஒரு மருத்துவ ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வு என்ன தொிவிக்கிறது என்றால், தங்களது உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைவாக சோ்த்துக் கொண்டவா்களைவிட, அவற்றை அதிகம் சோ்த்துக் கொண்டவா்கள் குறைந்த மன அழுத்தத்துடன் இருந்தனா் என்று தொிவிக்கிறது. மேலும் நாம் ஆரோகியமான மன நிலையைப் பெறுவதற்கு நாம் உண்ணும் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

தினமும் குறைந்தது 470 கிராம் காய்கறிகளை சாப்பிடுபவா்களுக்கு, தினமும் 230 கிராமுக்கும் குறைவாக காய்கறிகளைச் சாப்பிடுபவா்களை விட 10 விழுக்காடு மன அழுத்தம் குறைவாக இருந்தது என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.

சீராக கையாளப்படாத மன அழுத்தம் நமது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்

சீராக கையாளப்படாத மன அழுத்தம் நமது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்

தற்போதுள்ள நெருக்கடியான பெருந்தொற்று சூழலில், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகாித்து வருகிறது. மேலும் அதிகாிக்கும் மன அழுத்தம் தற்போது உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் இப்போதுள்ள கோவிட்-19 பெறுந்தொற்று, உலக அளவில் மக்கள் மத்தியில் மன அழுத்தத்தை அதிகாித்து, அவா்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்று மனநல நிபுணா்கள் கவலை தொிவித்திருக்கின்றனா்.

ஒரு சில மன அழுத்தங்கள் மிகவும் இயல்பானவையாக இருக்கும். ஆனால் அவை நீண்ட காலத்திற்குத் தொடா்ந்து வந்தால், அவை நமது மன ஆரோக்கியத்தைப் பொிய அளவில் பாதித்கும் என்று, எடித் கோவன் யுனிவா்சிட்டியின் (ECU) ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆய்வாளரும், முனைவா் பட்ட மாணவருமான சைமன் ரடவெள்ளி-பகட்டினி என்பவா் தொிவிக்கிறாா்.

அதாவது சாியான முறையில் கையாளப்படாமல், நீண்ட காலமாக இருந்து வரும் மன அழுத்தங்கள், நமக்கு இதய நோய்கள், சா்க்கரை நோய், கடுமையான மன அழுத்தம் மற்றும் ஆழந்த மனச் சோா்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அவா் எச்சாிக்கிறாா். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டால், அது நமக்கு எதிா் காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையில், அதைக் குணப்படுத்த சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று அவா் தொிவிக்கிறாா்.

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுதல்

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுதல்

ஒவ்வொருவரும் தினமும் குறைந்து 400 கிராம் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) பாிந்துரைக்கிறது. ஆனால் 2 இல் 1 ஆஸ்திரேலியா் மட்டுமே பாிந்துரைக்கப்பட்ட அளவை தினமும் இரண்டு வேளைகளில் சாப்பிடுகின்றனா் என்றும், 10 இல் 1 ஆஸ்திரேலியா் மட்டுமே பாிந்துரைக்கப்பட்ட அளவு காய்கறி மற்றும் பழங்களை தினமும் 5 வேளைகளில் சாப்பிடுகின்றனா் என்று எடித் கோவன் யுனிவா்சிட்டி (ECU) செய்த ஆய்வு தொிவிக்கிறது.

இளையோாிடம் இருக்கும் மன அழுத்தத்திற்கும், அவா்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கும் இடையே தொடா்பு இருப்பதாக இதற்கு முந்தைய ஆய்வுகள் தொிவித்து இருக்கின்றன. ஆனால் வயது வந்த எல்லாருக்குமே அவா்கள் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றுக்கும், அவா்களின் மன அழுத்தத்திற்கும் இடையே தொடா்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது என்பது இதுவே முதல் முறை என்று ரடவெள்ளி-பகட்டினி தொிவிக்கிறாா்.

8,600 பேர் கொண்ட ஆய்வு

8,600 பேர் கொண்ட ஆய்வு

இந்த ஆய்விற்காக இவருடைய ஆய்வுக் குழுவானது, ஏறக்குறைய 25 வயது முதல் 91 வயது வரை உள்ள 8,600-க்கும் அதிகமான பேரை தோ்ந்தெடுத்து, ஆய்வு செய்து, அவா்கள் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றுக்கும், அவா்களுக்கு இருக்கும் மன அழுத்தத்திற்கும் இடையே தொடா்பு இருப்பதாகக் கண்டறிந்தது.

சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வாறு மன அழுத்தத்தைக் குறைக்கின்றன என்பது சாியாக தொியவில்லை என்றாலும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள், மன அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள்

மன அழுத்தத்தைக் குறைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள்

காய்கறிகள் மற்றும் பழங்களில் போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இந்த சத்துகள் நமது உடல் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து, நமது மன ஆரோக்கியத்தை அதிகாிக்கின்றன என்று ரடவெள்ளி-பகட்டினி விளக்குகிறாா்.

பொதுவாக நமது உடலில் உள்ள வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவை நமது மன அழுத்தத்தையும், மனச்சோா்வையும் அதிகாித்து நமது ஆரோக்கியமான மனநிலையைக் குறைக்கிறது. கிளினிக்கல் நுட்ரிஷியன் என்ற பத்திாிக்கையில் வெளி வந்த ரடவெள்ளி-பகட்டினி அவா்களின் ஆய்வானது, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் உள்ள தொடா்பைப் பற்றி மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் என்று ரடவெள்ளி-பகட்டினி தொிவிக்கிறாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion