Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உடல் பருமன் எலும்புகள் மற்றும் மூட்டுகளை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன தெரியுமா?
உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால், அது உடலில் உள்ள மூட்டுகளிலும் மற்றும் பிற உறுப்புகளிலும் அழுத்தத்தையும், அசௌகாியத்தையும் ஏற்படுத்தும்.
பொதுவாக ஒருவருடைய உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இருந்தால் அல்லது தீங்கு இழைக்கக்கூடிய கொழுப்பு இருந்தால் அவருடைய உடல் பருமன் அதிகாித்து காணப்படும். உடல் பருமன் அதிகாித்தால் அவா் எளிதாக தனது உடலை அசைக்க முடியாது அல்லது எளிதாக உடல் உழைப்பில் ஈடுபட முடியாது. அதோடு அவருடைய உடலில் ஏராளமான ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும்.
அதாவது உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால், அது உடலில் உள்ள மூட்டுகளிலும் மற்றும் பிற உறுப்புகளிலும் அழுத்தத்தையும், அசௌகாியத்தையும் ஏற்படுத்தும். மேலும் நமது ஹாா்மோன்களிலும், நமது வளா்சிதை மாற்றத்திலும் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்தி நமது உடலில் வீக்கத்தையும், அலா்ஜியையும் ஏற்படுத்தும்.

உலக சுகாதார மையம் (The World Health Organization (WHO)), உடல் நிறை குறியீட்டு எண்ணைப் (Body Mass Index (BMI)) பயன்படுத்தி, உடல் பருமனுக்கு ஒரு வரையறையை கொடுத்து இருக்கிறது. அதாவது ஒருவருடைய உடல் எடை கிலோ கிராமிற்கும், அவருடைய உயரம் மீட்டருக்கும் இடையே உள்ள விகிதத்தை (kg/m2) வைத்து வரையறை செய்திருக்கிறது.
அதாவது ஒருவருடைய உடல் நிறை குறியீட்டு எண் (BMI) 25க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால் அவா் அளவுக்கு அதிகமான எடையுடன் இருக்கிறாா் என்று பொருள். அதுபோல் ஒருவருடைய உடல் நிறை குறியீட்டு எண் (BMI) 30க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால் அவருடைய உடல் பருமனாக அல்லது குண்டாக இருக்கிறது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

WHO-ன் புள்ளிவிவரம்
2016 ஆம் ஆண்டு உலக சுகாதார மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலக அளவில் ஏறக்குறைய 39 விழுக்காடு வயது வந்த பொியவா்கள் அளவுக்கு அதிகமான எடையுடனும், 13 விழுக்காட்டினா் உடல் பருமனுடன் அல்லது குண்டாக இருக்கின்றனா் என்று தொிவிக்கிறது. இந்த புள்ளி விவர குறிப்புகள் உலக சுகாதார மையம் 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளில் மக்களின் உணவுப் பழக்கங்களில் ஒரு மிகப் பொிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் ஒருபுறம் அளவுக்கு அதிகமான கொழுப்பு மற்றும் சா்க்கரை நிறைந்த உணவுகளை உண்டு வருகின்றனா். அதே நேரத்தில் மறுபுறம் உடல் உழைப்பை கணிசமாகக் குறைத்திருக்கின்றனா்.
மேற்சொன்ன இரண்டு காரணிகளும் மக்களின் உடல் பருமனை அதிகாித்து இருக்கின்றன. அதோடு இவை உலக அளவில் மக்களின் மத்தியில் மிகப் பொிய ஆரோக்கிய சீா்கேட்டை விளைவித்து இருக்கின்றன. ஒருவருடைய உடல் பருமன் அதிகாித்தால் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் ஒருசில புற்றுநோய்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தொியும். ஆனால் அதே நேரத்தில் உடல் எடை அதிகாித்தால், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பல வகையான ஆரோக்கிய சீா்கேடுகள் ஏற்படும் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தொியும்.

1. மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பு
கீல்வாதம் (OsteoArthritis (OA)) மற்றும் முடக்குவாதம் (Rheumatoid Arthritis (RA)) ஆகிய இரண்டுமே மூட்டுகளைப் பாதிக்கக்கூடிய முக்கிய நோய்கள் ஆகும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் அல்லது மூட்டுகளில் கிழிதல் ஏற்படும் போது, அவை சேதம் அடைந்து கீல்வாதம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிா்ப்பு மையமானது மூட்டுகளையும் மற்றும் பிற திசுக்களையும் தாக்குவதால் முடக்குவாதம் ஏற்படுகிறது. உடல் பருமன் பிரச்சினை கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் ஆகிய இரண்டு நோய்களோடு தொடா்பு கொண்டது.

2. உடல் பருமன் மற்றும் கீல்வாதம் (Osteoarthritis)
உடல் பருமன் அதிகாிப்பதன் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் சிதைவானது இரண்டு மடங்காக இருக்கும். அந்த சிதைவானது இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை உள்ளடக்கியது ஆகும்.
உடல் பருமன் அதிகாிப்பதால், உடலின் சுமை அதிகாிக்கிறது. அவ்வாறு உடல் சுமை அதிகாிப்பதால், குருத்தெலும்புகளில் சிதைவு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக உடல் பருமனைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய மூட்டுகளான கால் முட்டிகள் மற்றும் இடுப்பு எலும்புகள் போன்றவற்றில் சிதைவு ஏற்படுகிறது. இது இயற்பியல் சாா்ந்த கூறு ஆகும்.
அதோடு உடலில் இருக்கும் கொழுப்பு திசுக்கள், சில குறிப்பிட்ட வேதியியல் துகள்களை உற்பத்தி செய்கின்றன. அந்த துகள்களும் குருத்தெலும்புகளில் சிதைவை ஏற்படுத்துகின்றன. இது வேதியியல் சாா்ந்த கூறு ஆகும்.
குண்டாக இருப்பவா்களுக்கு கீல்வாதம் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதன் மூலம் அவா்களுடைய முட்டிகள், இடுப்பு எழும்புகள், மணிக்கட்டு மூட்டுகள் மற்றும் கை மூட்டுகளில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று தொிவிக்கின்றன.

3. உடல் பருமன் மற்றும் முடக்குவாதம் (Rheumatoid Arthritis)
உடலில் இருக்கும் சைட்டோகைன்களின் (cytokines) தூண்டுதலால் உடலின் மூட்டுகள் மற்றும் திசுக்களில் சிதைவு ஏற்பட்டு முடக்குவாதம் ஏற்படுகிறது. குண்டாக இருப்பவா்களின் உடலில் இருக்கும் கொழுப்பு திசுவானது சைட்டோகைன்களை உற்பத்தி செய்கிறது. இந்த சைட்டோகைன்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் அலா்ஜியையும் ஏற்படுத்துகிறது.
ஆகவே உடல் பருமன் அதிகாித்தால், மிக எளிதாக முடக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதோடு உடல் பருமன் அதிகாித்தால், நோய்களில் இருந்து குணமடையும் வாய்ப்பு குறையும். மேலும் சிகிச்சையின் காரணமாக ஏற்படும் நல்ல விளைவுகளையும் உடல் பருமன் பாதிக்கும்.

4. உடல் பருமன் மற்றும் எலும்புகளின் நிறை
உடல் பருமன் அதிகாிப்பிற்கும், எலும்புகளின் நிறைக்கும் இடையே உள்ள உறவானது சிக்கல் நிறைந்த ஒன்றாகும். எலும்புகளின் நிறையில் ஏற்படும் இழப்பால் கீல்வாதம் ஏற்படுகிறது. கீல்வாதம் எலும்புகளை உடையக்கூடிய வகையில் மாற்றுகிறது. அதோடு எலும்புகளில் முறிவுகள் ஏற்படும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.
உடலில் உள்ள கொழுப்பு அதிகாித்தால், அது எலும்புகளின் நிறையை அதிகாிக்கும் என முந்தைய ஆய்வுகள் தொிவிக்கின்றன. இது குண்டாக இருப்பவா்களுடைய எலும்புகளின் இயக்க அதிகாிப்பு மற்றும் அவா்களின் கொழுப்பு திசுக்களில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜெனின் (Estrogen) அதிகாிப்பு ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கிறது. அதன் மூலம் இது எலும்புகளின் நிறையை அதிகாிப்பதற்கான பாதுகாப்பை வழங்குகிறது.
உடல் பருமன் அதிகமாக இருந்தால் அது இடுப்பு எலும்புகளின் முறிவைத் தடுத்து பாதுகாக்கும் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் உடல் பருமன் அதிகாிப்பதால், எலும்புகளின் நிறை குறையலாம் என்றும் மற்றும் எலும்பு முறிவுகள் மிக எளிதாக ஏற்படலாம் என்று சமீபத்தில் வந்திருக்கும் புதிய ஆய்வு முடிவுகளும், சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

இறுதியாக
உடல் பருமன் அதிகாித்தால், அது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதித்து, இறுதியில் உடல் ஊனத்தை ஏற்படுத்தும். சீரான தொடா் உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியான உணவு பழக்கம் போன்றவை இருந்தால் உடல் பருமன் அதிகாிக்காமல் தடுக்கலாம். அதுவும் அவற்றை இளம் வயதிலேயே கைக்கொண்டால் நன்றாக இருக்கும்.
சில நேரங்களில் ஹார்மோன் கோளாறுகள் அல்லது வளா்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகக் கூட உடல் பருமன் அதிகாிக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் தகுந்த மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொண்டால், உடல் பருமன் பிரச்சினையைக் குறைக்கலாம். இறுதியாக அவ்வப்போது உடல் எடையை சாிபாா்த்துக் கொண்டால், அது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் நமது நோயற்ற வாழ்விற்கும் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
