For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?...அப்ப இத பண்ணுங்க…!

பருவ வயதை அடைந்த பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான பிரச்சினை யோனியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம்.

|

பருவ வயதை அடைந்த பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான பிரச்சினை யோனியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம். பெண்களின் பிறப்புறுப்பில் ஒரு தெளிவான வெள்ளை நிற திரவம் உருவாக்கி வெளியேறும். இது யோனி வெளியேற்றம் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சியில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அதன் நிலைத்தன்மையும் வண்ணமும் இருக்கும்.

Home Remedies to Get Rid Of Vaginal Discharge Odor

இந்த வெளியேற்றம் பொதுவாக வாசனையற்றது அல்லது மங்கலான வாசனையைக் கொண்டிருக்கும். இது எரிச்சல் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், உயவு அளிக்கவும், யோனி ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இருப்பினும், துர்நாற்றம் வீசும் யோனி வெளியேற்றம் உங்களுக்கு கவலை அளிக்கலாம். கூச்சம் காரணமாக இதை யாரிடம் எந்த பெண்களும் கேட்க மாட்டார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோனி துர்நாற்றம் அறிகுறிகள்

யோனி துர்நாற்றம் அறிகுறிகள்

பெண்களின் தனிப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் யோனி துர்நாற்றத்திற்கான அறிகுறிகள் பெண்களிடையே வேறுபடுகின்றன. அவற்றில் பொதுவானவைகள் இங்கே காணலாம்.

* அதிகப்படியான வெள்ளை வெளியேற்றம்

* வெளியேற்றத்தின்போது துர்நாற்றம்

* உலோக வாசனை வெளியேற்றம்

* அடர்த்தியான, வெள்ளை வெளியேற்றம்

* மீன் துர்நாற்றம்

* பச்சை அல்லது மஞ்சள் வெளியேற்றம்

* யோனியில் அரிப்பு அல்லது வலி

* அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலி

* உடலுறவின் போது வலி

MOST READ: பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்... ஷாக் ஆகாதீங்க...!

யோனி நாற்றத்திற்கு என்ன காரணம்?

யோனி நாற்றத்திற்கு என்ன காரணம்?

தடிமனான, வெள்ளை வெளியேற்றத்தின் விளைவாக யோனி ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. கிளமிடியா, கோனோரியா மற்றும் ட்ரைக்கோமோனியாசிஸ் போன்ற பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளால் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் வெளியேற்றத்தை ஒரு துர்நாற்றத்துடன் ஏற்படுத்துகின்றன. இதில், இடுப்பு பகுதியில் வலி கூட இருக்கலாம். பாக்டீரியா தொற்றின் காரணமாக மீன் துர்நாற்றம் வீசுகிறது.

கர்ப்பம், தாய்ப்பால் அல்லது மாதவிடாய் காரணமாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு யோனியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மிகவும் திடமான மற்றும் இறுக்கமான ஆடைகளை உங்களின் பிறப்புறுப்பு பகுதியில் அணிவதை தவிர்க்க வேண்டும். அவை எரிச்சல் மற்றும் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் தனிப்பட்ட பாகங்கள் சுவாசிக்க வேண்டியிருப்பதால் பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்.

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெயில் மூன்று முதல் நான்கு துளிகள் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் கழுவ வேண்டும். ஆலிவ் எண்ணெயில் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெயையும் கலந்த கலவையில் ஒரு டம்பனை நனைத்து உங்கள் யோனிப்பகுதியில் டம்பனை செருகலாம். ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்யலாம். தேயிலை மர எண்ணெய்யை தண்ணீரில் கலந்து தினமும் அல்லது வாரத்திற்கு பல முறை யோனிப்பகுதியில் கழுவ வேண்டும். தேயிலை மர எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் ஆகும். இது துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் மற்றும் தொற்றுநோயைத் தடுக்கும்.

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

அன்னாசி பழம் உங்கள் யோனி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் துர்நாற்றத்தை போக்குகிறது என்றும் கூறப்படுகிறது. நீங்கள் வழக்கமாக உண்ணும் உணவில் அன்னாசி மற்றும் அன்னாசி பழச்சாறு சேர்க்க வேண்டும். அன்னாசி பழத்தை நீங்கள் அடிக்கடி உண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் அன்னாசி பழச்சாறு ஒரு சில நாட்களுக்கு குடிக்கலாம். அன்னாசிப்பழத்தின் அதிக சர்க்கரை மற்றும் அதிக நொதி உள்ளடக்கம் உங்கள் யோனி சுரப்புகளின் வாசனையை மேம்படுத்துகிறது.

MOST READ: வீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க...!

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கேக்குகள் மற்றும் ரொட்டி ரெசிபிகளில் மட்டுமே பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. யோனியில் இருந்து வீசும் துர்நாற்றத்தை விரைவாக அகற்ற இந்த சோதனை முறை எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

உங்கள் குளியல் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, கீழ் உடல் பகுதியை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கப் பேக்கிங் சோடாவை 2 கப் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் பயன்படுத்தலாம். அல்லது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவையும் சேர்த்து குடிக்கலாம்.

பலன்கள்

பலன்கள்

உடலின் pH அளவு மோசமாக இருக்கும்போது யோனி வாசனை தீவிரமடைகிறது. பேக்கிங் சோடா உங்கள் pH அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இதனால் அதிகப்படியான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கட்டுப்படுத்துகிறது. இது தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் யோனி துர்நாற்றத்தை வாசனையை உடனடியாக நீக்குகிறது.

வினிகர்

வினிகர்

யோனியிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் சக்திவாய்ந்த தீர்வு வினிகர். உங்கள் குளியல் நீரில் இரண்டு கப் வினிகரை கலந்து அதில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 8 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஒரு டீஸ்புன் வினிகரை ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து அதை துணியில் நனைத்து யோனிப்பகுதியில் பயன்படுத்தலாம். துர்நாற்றம் வீசும் வரை நீங்கள் தினமும் இவ்வாறு செய்யலாம்.

MOST READ: நீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா?

பலன்கள்

பலன்கள்

வினிகர் யோனியில் மீன் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இது இயற்கையில் அமிலமானது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் ஏற்றப்படுகிறது, இது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. ஒரு சிலருக்கு வினிகரினால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். அவர்கள் வினிகர் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

பூண்டு

பூண்டு

யோனி துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிப்பதில் பூண்டின் ஆற்றலைப் பற்றி பலர் கேள்வி பட்டியிருக்கக்கூடும். அதிகப்படியான யோனி துர்நாற்றத்திலிருந்து விடுபட இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். பூண்டின் தோலை உரித்து 5 அல்லது 6 பல்லை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு முழம் அளவுள்ள நூலை கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை யோனி பகுதியில் உள்ளே வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்துவிட வேண்டும்.

பலன்கள்

பலன்கள்

தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பூண்டு பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. பரவலான பாக்டீரியாக்களுக்கு எதிரான செயல்பாடு பூண்டினுள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. துர்நாற்றம் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. பூண்டு மற்றும் கிராம்பிலிருந்து உள்ளூர்மயமாக்கப்பட்ட எரிப்பை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக அதை அகற்றவும்.

MOST READ: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்...!

தயிர்

தயிர்

யோனி நாற்றத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது தயிர். யோனியின் இயல்பான pH ஐ மீட்டெடுக்க ஒரு நாளைக்கு இரண்டு கப் தயிரை சாப்பிடுங்கள். தயிரில் டம்பனை நனைத்து மெதுவாக யோனி பகுதிக்குள் வைக்கலாம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அதை அகற்றி வெந்நீரிலால் அப்பகுதியை துடைக்கலாம்.

பலன்கள்

பலன்கள்

ஒரு வலுவான யோனி நாற்றம் ஈஸ்ட் தொற்றுநோயைக் குறிக்கும். தயிரில் உள்ள நல்ல புரோபயாடிக் பாக்டீரியா தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நாற்றத்தை குறைக்கவும் உதவும். தயிரின் அமில தன்மை யோனி pH ஐ மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

மேலும் அதில் உள்ள லாக்டோபாகிலஸ் பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும். உங்கள் யோனியிலிருந்து மீன் துர்நாற்றத்தை அகற்ற இது பயனுள்ள முறையாகும். தயிர் தினமும் தயிரை பெண்கள் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள புரோபயோடிக்குகள் யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies to Get Rid Of Vaginal Discharge Odor

Here are the home remedies to get rid of vaginal discharge odor.
Story first published: Wednesday, December 4, 2019, 16:43 [IST]
Desktop Bottom Promotion