Just In
- 5 hrs ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- 10 hrs ago
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- 11 hrs ago
இன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
Don't Miss
- News
பெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்
- Movies
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
- Sports
என்ன ஆட்டமா காட்டுறீங்க? வீரர்களுக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி.. கதறிய ஆஸி. வெளியான ரகசியம்!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Finance
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நல்லது என்று நாம் நினைத்து மேற்கொள்ளும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள்!
தற்காலத்தில் ஆங்கில மருத்துவத்தை அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது என்றே கூறலாம். அதாவது, சளி, இருமல், செரிமான பிரச்சனை, பல் வலி போன்ற சில சிறு பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியங்களை பார்த்து கொள்வதை மக்கள் விரும்புகின்றனர். எதற்கெடுத்தாலும், மருத்துவரை அணுகி, மருந்தகத்தை அணுகி மாத்திரை வாங்கி சாப்பிடுவது குறைந்து வருகிறது என்பது பாராட்டத்தக்க விஷயம் தான். இருந்தாலும், கூட வீட்டு வைத்திய முறைகளிலும் அனைத்தையுமே நம்பி செய்து விடக் கூடாது. வீட்டு வைத்திய முறைகளில் சில பாதுகாப்பது என்றாலும், அவற்றிலும் கூட சில ஆபத்துக்கள் இருக்க தான் செய்கின்றன.
எனவே, எந்தவொரு வீட்டு வைத்திய முறையை செய்வதற்கு முன்பும் சில பரிசோதனை மேற்கொள்வதே நல்லது. அந்த வகையில், எந்தெந்த வீட்டு வைத்திய முறைகள் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...
MOST READ: குதிகால் ரொம்ப வலிக்குதா? இதோ அதற்கான சில கை வைத்தியங்கள்!

தீக்காயத்தின் மேல் எண்ணெய் அல்லது வெண்ணெய்
சமையல் அறையில் வேலை செய்யும் போதோ அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பத்திலோ சிறு தீக்காயம் ஏற்பட்டு விட்டால் உடனே பதறக்கூடாது. முக்கியமாக தீக்காயத்தின் மேல் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவக் கூடாது. மாறாக உடனடியாக காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் ஒரு 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இதன் மூலம், சரும எரிச்சல் தணிந்து, காயம் விரைந்து ஆறி, மேற்கொண்டு காயம் பெரிதாகாமல் தடுத்திட உதவும். சாதாரண குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டுமே தவிர, ஐஸ் வாட்டரை உபயோகிக்கக் கூடாது. மிகவும் குளிர்ந்த நீரை காயத்தின் மீது ஊற்றும் போது, காயம் ஆறுவது மிகவும் தாமதமாகி, காயம் மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

பருக்களை போக்க பற்பசை
பற்பசையுடன் சேர்த்து சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் பருக்கள் அல்லது புண்களை போக்கிடலாம். ஆனால், பற்பசையுடன் சேர்த்து பிற ஏதேனும் பொருட்களை சேர்த்து உபயோகிப்பது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்திவிடும், குறிப்பாக உதட்டில் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்திற்கு, ஆல்கஹால், மென்தால் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொருட்களை பற்பசையுடன் சேர்த்து உபயோகித்தால் அவை உதவுவதற்கு பதிலாக சரும எரிச்சலை தூண்டிவிடும்.

தொண்டை புண்ணிற்கு மவுத்வாஸ் கொண்டு கொப்பளிப்பது
தொண்டை புண் என்பது வைரஸ் தொற்று அல்லது வேறு ஏதேனும் சாதாரண காய்ச்சல் அல்லது சளி போன்றவற்றால் உண்டாகக்கூடும். அதுபோன்ற பிரச்சனைக்கு, மவுத்வாஸ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது சரியான தீர்வாக அமையாது. தொண்டை புண்ணால், தொண்டையில் வீக்கம் ஏற்படக்கூடும். அதுபோன்ற தருணங்களில் மவுத்வாஸ் உபயோகிப்பது மேலும் பிரச்சனையை அதிகமாக்கிவிடும். இதுபோன்ற தருணங்களில், எந்த வேலையும் செய்யாமல் சிறிது ஓய்வெடுத்து, அதிக அளவு நீரை உட்கொண்டு வந்தாலே போதுமானதாக இருக்கும்.

மருக்களை கத்தி கொண்டு அகற்றுவது
மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி) காரணமாக உங்கள் தோலின் மேற்புறத்தில் மருக்கள் வளர்க்கக்கூடும். அதுபோன்ற மருக்களை, கத்தரிக்கோல், கத்தி அல்லது பிற ஏதேனும் கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி நீங்களே அகற்றுவது என்பது தொற்றுநோயை மேற்கொண்டு அதிகரிக்க செய்துவிடும். மருக்களை அகற்ற வேறு சில பாதுகாப்பான வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, மருக்களை போக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை 2: 1 என்ற விகிதத்தில் கலக்கவும். வினிகர் கரைசலை சிறிது பஞ்சு உருண்டையில் நனைத்து மருவின் மீது வைக்கவும். பின்னர் டேப் அல்லது துணி கொண்டு கட்டி மூடிகொள்ளவும். ஓர் இரவு முழுவதும் இப்படி வைத்திருக்க வேண்டும்.

பல் வலி சிகிச்சைக்கு விஸ்கியைப் பயன்படுத்துதல்
இந்த வீட்டு வைத்திய முறை சிலரை பெரிதும் உற்சாகப்படுத்தக்கூடும். ஆனால், விஸ்கியில் மிகக் குறைந்த அளவிலான மயக்க குணங்கள் இருப்பதால் இது பயனுள்ளதாக இருக்கவே இருக்காது. இந்த சிகிச்சையை முயற்சிப்பது எவ்வித நேரடி சேதத்தையும் செய்யாது என்றாலும் கூட, சரியான சிகிச்சையைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படக்கூடும். இதனால், வலியும் மோசமாகக்கூடும்.

பிரசவத்தை தூண்டுவதற்கு விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்வது
ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் சில மருத்துவச்சிகளால் கடந்த காலத்தில் பிரசவத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணெயில் ரிகினோலிக் அமிலம் உள்ளது. இது ஒரு வலுவான மலமிளக்கிய விளைவைக் கொண்டுள்ளது. இதனால் தான் மலச்சிக்கலை நீக்குவதற்கும், குடல் பரிசோதனை அல்லது அறுவை சிகிச்சைக்கு முன்பு குடலை சுத்தப்படுத்துவதற்கும் விளக்கெண்ணெய் சில நேரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், விளக்கெண்ணெய் பிரசவத்தை தூண்ட உதவும் என்ற கூற்றை ஆதரிக்க எந்தவொரு வலுவான ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மை.