டர்ர்ர்.. விட்டா கப்பு அடிக்குதா? இதோ அதைத் தடுக்கும் எளிய வழிகள்!

வாய்வு வெளியேற்றம் என்பது மனித உடலில் நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வு. சில சமயங்களில் உணவுகளை உண்பது அல்லது திரவங்களைப் பருகுவதன் மூலம் அதிகப்படியான காற்றை விழுங்க வழிவகுத்து, வாய்வு தொல்லையை சந்திக்க வை

வாய்வு வெளியேற்றம் என்பது மனித உடலில் நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வு. சில சமயங்களில் உணவுகளை உண்பது அல்லது திரவங்களைப் பருகுவதன் மூலம் அதிகப்படியான காற்றை விழுங்க வழிவகுத்து, வாய்வு தொல்லையை சந்திக்க வைக்கும். ஒருவருக்கு வாய்வுத் தொல்லை அடிக்கடி ஏற்பட்டால், அது சில உடல் கோளாறுகளான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது சில குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

Home Remedies For Smelly Fart That Are Sure To Give Relief

பெரும்பாலானோர் இந்த வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றம் மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான சில இயற்கை தீர்வுகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

அஜீரண கோளாறு என்றதுமே அதை சரிசெய்ய நம்மில் பலருக்கு நினைவிற்கு வருவது இஞ்சி. அஜீரண கோளாறு இருந்தால், வெளியேற்றும் வாய்வு கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், எப்பேற்பட்ட செரிமான பிரச்சனையும் சரியாகும். அதோடு இது எளிதில் தயாரிக்கக்கூடிய ஒன்றும் கூட. அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அதில் சிறிது துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

வழி #2

வழி #2

மதியம் வயிறு நிறைய உணவு உண்ட பின், செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் செரிமான செயல்பாடு சீராக நடைபெற்று, அஜீரண கோளாறு நீங்குவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றமும் தடுக்கப்படும்.

வழி #3

வழி #3

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் வீட்டின் சமையலறையில் உள்ள பெருங்காய பொடியை சுடுநீரில் கலந்து குடியுங்கள். இல்லாவிட்டால், பெருங்காய பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தொப்புளைச் சுற்றி தடவி உலர விடுங்கள்.

வழி #4

வழி #4

ஓமம் செரிமானத்திற்கு உதவும் பொருள். அதோடு ஓமம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. அதற்கு 1/2 டீஸ்பூன் ஓமத்தை நீரில் போட்டு கலந்து, குடியுங்கள். இல்லாவிட்டால், சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள்.

வழி #5

வழி #5

அஜீரண பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும் மற்றொரு பிரபலமான இயற்கை வைத்தியம் தான் சீரக நீர். வயிற்று அசௌகரியத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற சீரக தண்ணீரைக் குடிப்பது நல்லது. அதற்கு ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி குடிக்க, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றம் தடுக்கப்படுவதோடு, அஜீரண பிரச்சனையும் நீங்கும்.

வழி #6

வழி #6

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள குறிப்பிட்ட செரிமான நொதிகள், செரிமானத்திற்கு உதவுகிறது. அதோடு துர்நாற்றமிக்க வாய்வு வெளியேற்றத்தையும் தடுக்கிறது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

வழி #7

வழி #7

செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் மற்றொரு பொருள் தான் பட்டை. ஒரு ஸ்பூன் பட்டை பொடியை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனையால் சந்திக்கும் அசௌகரியங்கள் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வழி #8

வழி #8

சோம்பு அனைத்துவிதமான செரிமான பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதனால் தான் உணவு உண்ட பின் சோம்பை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதோடு சோம்பு கடுமையான துர்நாற்றத்துடன் வாய்வு வெளியேறுவதையும் தடுக்கக்கூடியது. எனவே நீங்கள் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்தால், சிறிது சோம்பை தட்டி, ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து வடிகட்டி குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வழி #9

வழி #9

கொத்தமல்லி போன்று காணப்படும் ஒரு வகையான மூலிகை தான் பார்ஸ்லி. இது பெரும்பாலான உணவுகளின் மீது ப்ளேவருக்காக சேர்க்கப்படுகிறது. அதோடு பார்ஸ்லி செரிமானத்திற்கும் நல்லது. மேலும் இது ஒருவரது பசியின்மையைப் போக்கும், சிறுநீரைப் பெருக்கும் மற்றும் உணவு எளிதில் செரிமானமாக உதவும். வாய்வுத் தொல்லையால் மிகவும் அவஸ்தைப்படுபவர்கள், சிறிது பார்ஸ்லியை நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஓரளவு குளிர்ந்த பின் வடிகட்டி குடிக்க , உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion