For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூச்சுத்திணறல் பிரச்சனையை சரி பண்ண உதவும் வீட்டு வைத்தியம் என்னென்ன தெரியுமா?

இஞ்சி தேநீர் உங்களை அமைதிப்படுத்த உதவும். இது சுவாச நோய்த்தொற்றை ஆற்ற உதவுகிறது. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலில் வீக்கத்தைக் குறைக்க சிறந்தவை.

|

பெரும்பாலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்படும். தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அது நம்முடைய சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் மிகவும் சங்கடமான அனுபவம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தினமும் யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது உங்கள் மூச்சு திணறல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

Home Remedies For Shortness Of Breath in Tamil

மேலும், படிக்கட்டு ஏறுதல், குளிர்ந்த வானிலை, அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் அதிக எடை இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் மூச்சுதிணறல் நிகழலாம். இது ஒரு தற்காலிக அல்லது தீவிரமான நிலையாக இருக்கலாம். இது உங்களுக்கு எப்போதாவது நடந்தால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் இங்கே. ஆனால், மூச்சுத்திணறல் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். மூச்சுத் திணறலுக்கு சிகிச்சையளிக்க உதவும் வீட்டு வைத்தியம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சி தேநீர் உங்களை அமைதிப்படுத்த உதவும். இது சுவாச நோய்த்தொற்றை ஆற்ற உதவுகிறது. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலில் வீக்கத்தைக் குறைக்க சிறந்தவை. மேலும், நீங்கள் எப்போதாவது அழுத்தமாக இருந்தால், நீங்கள் இஞ்சி டீயை முயற்சி செய்யலாம்.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க நீங்க சாப்பிட வேண்டிய வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா?

பிளாக் காபி

பிளாக் காபி

பிளாக் காபி காற்றுப்பாதைகளில் உள்ள தசைகளில் உள்ள இறுக்கத்தைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மூச்சுத் திணறலில் இருந்து மீள உதவுகிறது.

சுவரின் ஆதரவுடன் நிற்கவும்

சுவரின் ஆதரவுடன் நிற்கவும்

சுவரின் ஆதரவுடன் நில்லுங்கள். உங்கள் இடுப்பு பகுதி சுவரின் மீது ஓய்வெடுக்கட்டும். உங்கள் கால்களை சற்று அகலமாக வைக்கவும். உங்கள் தோள்களைத் தளர்த்தி, சற்று முன்னோக்கி சாய்ந்து, உங்கள் கைகள் உங்களுக்கு முன்னால் தொங்க விடவும்.

MOST READ: இயற்கையாகவே உங்க உடலில் கொலஸ்ட்ரால் அளவ குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

குவிந்த உதடு சுவாச பயிற்சி

குவிந்த உதடு சுவாச பயிற்சி

குவிந்த உதடு சுவாசப் பயிற்சி ஆழமாக சுவாசிக்க உதவுகிறது. இங்கே நீங்கள் எவ்வாறு உடற்பயிற்சி செய்யலாம். உங்கள் முதுகை நேராக வைத்து, தாமரை நிலையில் தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் உதட்டை குவித்து ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து 4-5 விநாடிகள் காத்திருக்கவும். பின்னர், 4 விநாடிகள் சுவாசிக்கவும். இதை 10-15 முறை செய்யவும்.

நாற்காலியில் முன்னால் உட்கார்ந்து ஓய்வெடுங்கள்

நாற்காலியில் முன்னால் உட்கார்ந்து ஓய்வெடுங்கள்

உட்கார்ந்திருக்கும்போது ஓய்வெடுப்பது உங்கள் சுவாசத்தை நிதானமாகவும் மேம்படுத்தவும் உதவும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து உங்கள் கால்களை தரையில் தட்டையாக வைக்கவும். இப்போது சிறிது முன்னோக்கி சாய்ந்து முழங்கைகளை முழங்காலில் வைத்து ஓய்வெடுக்கவும். உங்கள் கன்னம் பிடித்து உங்கள் கழுத்து மற்றும் தோள்களை தளர்த்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Shortness Of Breath in Tamil

Here are the list of home remedies to treat shortness of breath in tamil.
Story first published: Thursday, May 27, 2021, 13:20 [IST]
Desktop Bottom Promotion