For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குதிகால் ரொம்ப வலிக்குதா? இதோ அதற்கான சில கை வைத்தியங்கள்!

|

இன்று குதிகால் வலியால் ஏராளமானார் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உலகில் சுமார் 10 மில்லியன் மக்கள் குதிகால் வலியால் கஷ்டப்படுகின்றனர். குதிகால் வலி பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் என்றாலும், இது குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடும். ஒருவருக்கு குதிகால் வலி பல காரணங்களால் ஏற்படலாம். அதில் ஒன்று 'ஹீல் ஸ்பர்'.

குதிகால் மற்றும் பாதத்தின் வளைவுக்கு இடையில் குதிகால் எலும்பின் அடிப்பகுதியில் கால்சியம் தேங்க ஆரம்பிக்கும் போது ஹீல் ஸ்பர்ஸ் (Heel Spurs) என்னும் பாதத்தில் வளரும் 'முளை' போன்ற எலும்பு உண்டாகிறது. பாதத்தில் உள்ள எலும்புகளிலேயே குதிகால் எலும்பு (Heel Bone/Calcaneal) தான் பெரியது. இது தான் நடக்கும் போது உடல் தடுமாறாமல் உடலைத் தாங்குகிறது. பாத தசைகள் மற்றும் தசைநார்கள் மீதான அதிகப்படியான அழுத்தம், பாத தசை நீட்சி மற்றும் குதிகால் எலும்பை உள்ளடக்கிய சவ்வு பகுதி தொடர்ச்சியாக கிழிவது போன்றவை ஹீல் ஸ்பர் பிரச்சனைக்கான சில முக்கிய காரணங்கள் ஆகும்.

MOST READ: நுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது?

யாருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது?

ஹீல் ஸ்பர் பிரச்சனையானது தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்த பாத வளைவுகளைக் கொண்டவர்கள் மற்றும் அதிகமாக ரன்னிங் செய்பவர்கள் மற்றும் குதிப்பவர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதேப் போல் ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிபவர்ளுக்கும் ஹீல் ஸ்பர் பிரச்சனை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

ஆபத்துக் காரணிகள்

ஆபத்துக் காரணிகள்

ஹீல் ஸ்பர் பிரச்சனையை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் சில ஆபத்துக் காரணிகளாவன:

* வெறும் காலுடன் கடினமான மேற்பரப்பில் நடப்பது

* கடினமான மேற்பரப்பில் ரன்னிங், ஜாக்கிங் செய்வது

* பொருத்தமில்லாத அல்லது மோசமான காலணிகளை அணிவது

* இறுக்கமான காஃப் தசைகள்

* உடல் பருமன்

* வயது

* சர்க்கரை நோய்

அறிகுறிகள்

அறிகுறிகள்

வழக்கமாக ஹீல் ஸ்பர் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சில நேரங்களில் காலின் பின்புறத்தில் குதிகால் வலியை சந்திக்கலாம். குறிப்பாக நடக்கும் போது, ஜாக்கிங் செய்யும் போது அல்லது ரன்னிங் மேற்கொள்ளும் போது வலியை சந்திக்கலாம். அதோடு குதிகாலில் வீக்கம் ஏற்படலாம்.

ஹீல் ஸ்பர் பிரச்சனையை ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், குறிப்பிட்ட சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை வைத்தியங்களின் மூலம் எளிதில் சரிசெய்யலாம். கீழே ஹீல் ஸ்பரால் ஏற்படும் குதிகால் வலியைப் போக்க உதவும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

குதிகால் வலிக்கு ஆப்பிள் சீடர் வினிகர் நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு ஒரு துணியை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, நீங்கள் அணியும் காலணியில் வைத்து அணியுங்கள். நாள் முழுவதும் அந்த துணி ஈரமாக இருக்க வேண்டும். இப்படி இந்த சிகிச்சையை குறைந்தது ஒரு வாரம் மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அந்த வாளியில் பாதங்களை 5-10 நிமிடம் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை என 1-2 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

ஐஸ் பேக்

ஐஸ் பேக்

ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி, அதை ப்ரீசரில் வைத்து நன்கு உறைய வையுங்கள். பின் அந்த பாட்டிலை எடுத்து வலியுள்ள குதிகாலுக்கு அடியில்10-15 நிமிடம் வைத்து உருட்டுங்கள். இந்த சிகிச்சையை நீங்கள் எப்போதெல்லாம் குதிகாலில் வலியை உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் வையுங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை ஹீல் ஸ்பர் உள்ள இடத்தின் மீது தடவி பேண்டேஜ் கொண்டு சுற்றிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

ஒரு வாளியில் பாதங்கள் மூழ்கும் அளவில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதிக்கப்பட்ட குதிகாலை வைத்து, 10-15 நிமிடம் ஊற வைக்கவும். பின் மென்மையாக குதிகாலில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பின் குதிகாலில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்ய விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, சில மணிநேரம் ஊற வையுங்கள். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Painful Heel Spur

What is Heel spurs? Here are some home remedies to get rid of painful heel spur or abnormal calcium deposits. Read on...