Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
தலைவலி தாங்கமுடியலையா? 5 நிமிடத்தில் நிவாரணம் பெற இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...
உங்களுக்கு தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடாமல், முதலில் கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். ஒருசில கை வைத்தியங்கள் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பனி அதிகம் பொழிகிறது என்றே கூற வேண்டும். பொதுவாக பனி அதிகம் பொழியும் போது நிறைய பேர் அடிக்கடி தலைவலியை அனுபவிப்பதுண்டு. பொதுவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக குளிர்காலத்தில் நமது மூளையில் உள்ள செரடோனின் போன்ற கெமிக்கல்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், அது தலைவலியை உண்டாக்குகிறது.

எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் தலைவலியை மட்டும் ஒருவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தலைவலியானது அந்த அளவில் சகித்துக் கொள்ள முடியாத அளவில் இருக்கும்.

எப்போதெல்லாம் ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது?
உடலுக்கு தினமும் போதுமான அளவு ஓய்வு கிடைக்க வேண்டும். அவ்வாறு ஓய்வு கிடைக்காமல், அதிக மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமில்லாமை போன்றவை ஒருவருக்கு தலைவலியை வரத்தூண்டும். இது தவிர, குளிர்ச்சியான காலநிலையும் தலைவலி வருவதற்கு முக்கிய காரணாமகும். ஜர்னல் ஆஃப் ஹெட்ஏக் பெயினின் படி, குறைந்த வெப்பநிலைக்கும், அடிக்கடி தலைவலி வருவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. அதனால் தான் குளிர்காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
குளிர்காலத்தில் தலைவலி வந்தால், அதற்கு அடிக்கடி மாத்திரை போடுவது நல்லதல்ல. எனவே உங்களுக்கு தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடாமல், முதலில் கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். ஒருசில கை வைத்தியங்கள் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இப்போது அந்த மாதிரியான தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் சில கை வைத்தியங்களைத் தான் பார்க்கப் போகிறோம்.

இஞ்சி
தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க இஞ்சி பெரிதும் உதவி புரியும். அதுவும் இஞ்சியானது வலியைக் குறைப்பது மட்டுமின்றி, செரிமான செயல்முறையை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு இஞ்சி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து தலையில் தடவலாம் அல்லது இஞ்சி டீ தயாரித்தும் குடிக்கலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க இஞ்சி சாறுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

காப்ஃபைன்
சளியால் தலைவலியை அனுபவிப்பவரானால், வெதுவெதுப்பான பானங்களைக் குடிக்க முயல வேண்டும். பெரும்பாலும் தலைவலிக்கும் போது காபி அல்லது டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் காபி அல்லது டீயில் உள்ள காப்ஃபைன் மன அழுத்தத்தைக் குறைத்து, மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்து, தலைவலியைக் குறைக்கிறது.

பட்டை
தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்க உதவும் மற்றொரு சமையலறை பொருள் தான் பட்டை. அதற்கு பட்டையை அரைத்து பொடி செய்து, அந்த பட்டை பொடியை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு
மசாலா பொருட்களுள் ஒன்றான கிராம்பில் வலி நிவாரண பண்புகள் உள்ளன. உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், சிறிது கிராம்பை எடுத்து தட்டி அதை ஒரு கைக்குட்டையில் வைத்து, அடிக்கடி அதை நுகர்ந்து பாருங்கள். இதனால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு கடுமையான தலைவலி என்றால், 2 துளி கிராம்பு எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயை நெற்றியில் தடவி மசாஜ் செய்தால், தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications