For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? இதோ அதற்கான சில பாட்டி வைத்தியங்கள்!

|

ஒருவருக்கு வாய்வு பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது மிகவும் வேதனையான அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் இது வயிற்று பிடிப்புகள், வீக்கம், வயிறு கனமாக இருப்பது மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். வாய்வு பிரச்சனையானது ஒருவரது செரிமான மண்டலத்தின் அதிகப்படியான வாயு சேகரிக்கப்படும் நிலையாகும். ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க, முதலில் அது எதனால் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

ஒருவரது செரிமான அமைப்பில் இரண்டு வழிகளில் வாயு சேர வாய்ப்புள்ளது. அதில் ஒன்று சாப்பிடும் போது அல்லது குடிக்கும் போது, ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் உடலினுள் நுழைந்து ஏற்படலாம். மற்றொன்று மற்றும் முக்கியமானது உண்ணும் உணவு ஜீரணிக்கப்படும் போது வயிற்றில் ஹைட்ரஜன், மீத்தேன் அல்லது கார்பன் டைஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்பட்டு சேகரிக்கப்படலாம். இத்தகைய வாயு சரியாக வெளியேற்றப்படாவிட்டால் அல்லது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

MOST READ: நுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயு பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

வாயு பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

சில சமயங்களில் நாம் உண்ணும் சில உணவுகளாலும் வாய்வு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான பீன்ஸ், முட்டைக்கோஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகள் அல்லது சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்றவை வயிற்றால் எளிதில் ஜீரணிக்கப்படுவதில்லை. இந்த உணவுகள் செரிமானத்திற்கு உதவி புரியும் ஏராளமான பாக்டீரியாக்களுடன் பெருங்குடல் வழியாக செல்வதால், குடல் பகுதியில் வாயுக்கள் வெளியிடப்பட்டு, அசௌகரியத்தை உண்டாக்குகின்றன.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வாய்வு பிரச்சனையை சரிசெய்ய நம் வீட்டின் சமையலறையிலேயே சில பொருட்கள் உள்ளன. அவை வாயு பிடிப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதிலும் ஆயுத பூஜை அன்று வீட்டில் செய்யப்படும் சுண்டலை அதிகமாக சாப்பிட்டு, நிறைய பேர் வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை சற்று பயனுள்ளதாக இருக்கும்.

ஓமம்

ஓமம்

ஓம விதைகளில் தைமோல் என்னும் பொருள் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவி புரியும் அமிலத்தை சுரக்கிறது. எனவே உண்ணும் உணவுகளால் வாய்வு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடியுங்கள்.

சீரக நீர்

சீரக நீர்

சீரக நீர் வாய்வு பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு சிறப்பான பானம். சீரக விதைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய், உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டிவிட்டு, உணவுகள் நன்றாக செரிமானமாக உதவுகிறது மற்றும் அதிகப்படியான வாயு உருவாவதையும் தடுக்கிறது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சீரக விதைகளை 2 கப் நீரில் போட்டு 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, உணவு உண்ட பின் குடியுங்கள்.

பெருங்காயம்

பெருங்காயம்

1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வாயு பிரச்சனை உடனடியாக நீங்கும். ஏனெனில் பெருங்காயம் அதிகப்படியான வாயுவை உற்பத்தி செய்யக்கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு வாயு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது.

இஞ்சி

இஞ்சி

ஒரு டீஸ்பூன் நற்பதமான துருவிய இஞ்சியை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, உணவு உண்ட பின் சாப்பிட்டால் வாயு பிரச்சனையே ஏற்படாது. இன்னும் எளிமையான ஒரு தீர்வு வேண்டுமானால், இஞ்சி டீ போட்டு குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் பேக்கிங் பவுடர்

எலுமிச்சை ஜூஸ் மற்றும் பேக்கிங் பவுடர்

உடலில் உள்ள அதிகப்படியான வாயுவைக் குறைக்க ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் நீரில் கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், வாயு தொல்லை ஏற்படாது.

திரிபலா

திரிபலா

மூலிகை கடைகளில் விற்கப்படும் திரிபலா பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும். திரிபலா பொடியை சேர்க்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகளவு இருக்கிறது. அதிகமாக எடுத்தால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for Gas That Are Sure to Give Relief

The good thing is that you can reach out to a lot of kitchen ingredients to get rid of gas trouble naturally. Here are the five best home remedies for gas that work without fail.