Just In
- 3 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறையால் சில சிக்கல்கள் உண்டாகலாம்...
- 16 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 18 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 23 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
Don't Miss
- News
தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
- Movies
பிசினஸ் வுமனாக மாறிய ராஷ்மிகா.. திடீரென முதலீடு செய்ய என்ன காரணம்?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
- Sports
ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!
- Finance
ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தும் ஜி7 நாடுகள்.. என்ன ஆகும்?
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பழத்தின் பூ உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாம்!
கோடைகாலம் என்றாலே மாம்பழ சீசன் என்பது அனைவருக்கும் தெரியும். அனைவருக்கும் மிக பிடித்த பழங்களில் மாம்பழமும் ஒன்று. மாம்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. மாம்பழங்கள் மட்டுமல்லாது இலைகள், பட்டைகள் மற்றும் பூக்கள் போன்ற பல்வேறு பாகங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மருத்துவ மரமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? மாம்பழங்கள் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படுகின்றன. முக்கியமாக அவற்றின் இனிமையான வாசனை மற்றும் சுவையான சுவை காரணமாக அதிகமாக சாப்பிடப்படுகிறது. இதனால் தான் மாம்பழத்தை முக்கனிகளில் ஒன்று என்றழைக்கிறோம்.
இருப்பினும், மா மரங்களின் பூக்கள் மனித உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன என்பது பலருக்குத் தெரியாது. வெள்ளை-சிவப்பு அல்லது மஞ்சள்-பச்சை மாம்பழங்கள் பருவம் முழுவதும் கிடைக்காது என்றாலும், முடிந்தவரை அவற்றை உட்கொள்வது நல்லது. இக்கட்டுரையில் மா பூவின் நன்மைகள் பற்றி விரிவாக காணலாம்.

மாம்பழ பூக்களில் உள்ள சத்துக்கள்
மாம்பழ பூக்களில் உள்ள சில முக்கிய பாலிபினால்களில் காலிக் அமிலம், குர்செடின், மாங்கிஃபெரின் மற்றும் எலாஜிக் அமிலம், அலனைன், த்ரோயோனைன் மற்றும் டிரிப்டோபான் போன்ற அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. மாம்பழ பூக்களில் உள்ள மற்ற அத்தியாவசிய செயலில் உள்ள சேர்மங்களில் டைஹைட்ரோகாலிக் அமிலம் மற்றும் எத்தில், மீத்தில், என்-பென்டைல், என்-ப்ரோபில், என்-ஆக்டைல் 4-பீனைல் மற்றும் 6-பீனைல்-என்-ஹெக்ஸைல் காலேட் ஆகியவை அடங்கும். இவை லினலூல், எலிமீன், ஹுமுலீன் மற்றும் பலவற்றைக் கொண்ட முக்கியமான எண்ணெயையும் தருகின்றன. மேற்கூறியவை ஃபீனாலிக் கலவைகள் ஆகும், அவை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் உதவுகிறது.

அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கிறது
அரிக்கும் தோலழற்சி என்பது ஒரு தோல் நிலை பிரச்சனை. இது சருமத்தை சிவப்பாக மாற்றி அரிப்பு உணர்வை தருகிறது. சில ஆயுர்வேத ஆய்வுகள், சர்க்கரை மற்றும் தண்ணீருடன் மாம்பழ பூவின் வேகவைத்த கரைசலை சாப்பிடுவது, அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகளைப் போக்க உதவும் என்று கூறுகின்றன.

வாய் புண்களை குணப்படுத்தும்
மா பூவின் கஷாயத்தை அல்சர் முகவராகப் பயன்படுத்தலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மா பூவின் கஷாயத்தை ஒரு கிளாஸ் என்ற அளவில் வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாம். நச்சுத்தன்மையின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று விலங்குகளை வைத்து மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. மாம்பழ பூக்கள் இரைப்பை மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அவற்றின் சிகிச்சைக்கு உதவும்.

பல்வலிக்கு உதவுகிறது
மாம்பழ பூவில் உள்ள காலேட் கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது ஈறுகளின் வீக்கத்தால் ஏற்படும் வலியைப் போக்கவும், பல்வலியை குறைக்கவும் உதவும். மாம்பழ பூவை போட்டு வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால், பல்வலி நீங்கி, பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவலாம்
மா மரத்தின் பல்வேறு பாகங்கள், மா பூக்கள் உட்பட, நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட மாங்கிஃபெரின் என்ற அத்தியாவசிய கலவை உள்ளது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களின் சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கு மாங்கிஃபெரின் ஒரு சிறந்த தீர்வாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் மாம்பழப் பூக்களை உலர்த்தி அரைத்து பொடி செய்து சாப்பிட வேண்டும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
ஆயுர்வேதத்தின்படி, மாம்பழ பூக்கள் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது மற்றும் செரிமான செயல்பாட்டை நிர்வகிக்க உதவுகிறது. இதனால், இது நெஞ்செரிச்சல் மற்றும் நாள்பட்ட வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் தொடர்பான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, மாம்பழ பூ தண்ணீர் கலந்த கலவையை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

பிற ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழம் மற்றும் மாதுளைப் பூக்களின் கலவையை தண்ணீர் மற்றும் பசும்பால் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மூன்று நாட்களுக்குள் சளி நீங்கும்.
மாம்பழப் பூக்களால் தயாரிக்கப்படும் தேநீர், அதிக அளவு டானின்களால் மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
மாம்பழப் பொடியை சீரகப் பொடியுடன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

நோய்களை தடுக்கும்
காய்ந்த மா பூக்களை கொசு விரட்டியாக பயன்படுத்தி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மா பூக்கள் ஹீமாடினிக் (இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது) மற்றும் ஸ்டைப்டிக் (காயத்தை ஆற்றும்) மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாம்பழம் கோடை காலத்தில் மூக்கில் இருந்து ரத்தம் வருவதை நிறுத்த உதவும்.

மாம்பழ பூக்களை எப்படி சாப்பிடுவது?
மாம்பழ பூக்களை வேகவைப்பதே சிறந்த வழிகளில் ஒன்று. பூக்களை ஒரே இரவில் ஊறவைத்து, சரியாகப் பிழிந்த பிறகு காலையில் உட்கொள்ளலாம். மாம்பழ பூக்கள் உண்ணக்கூடியவை என்றாலும், சிலருக்கு அவை ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரிப்பு அல்லது சொறி போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை நீங்கள் கண்டால், அதனை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இறுதி குறிப்பு
மா பூக்கள் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இது மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதன் மருந்தளவு மற்றும் பக்க விளைவுகள் பற்றி மேலும் அறிய, நுகர்வுக்கு முன் ஒரு மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.