Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க...
வாழைப்பூவைக் கொண்டு பல வகையான உணவுகளைத் தயாரிக்கலாம். ஆனால் வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான்.
நம் அனைவருக்குமே வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியும். ஆனால் வாழைப்பூவை சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரியாது. சொல்லப்போனால் வாழைப்பூவில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏனெனில் வாழைப்பூவில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதே வேளையில் வாழைப்பூ ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இது பல அழகு பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர, வாழைப்பூவைக் கொண்டு பல வகையான உணவுகளைத் தயாரிக்கலாம். ஆனால் வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான். என்னது வாழைப்பூ கசாயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், வாழைப்பூவைக் கொண்டு கசாயம் தயாரிக்கலாம். இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி. இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கர்ப்பப்பையின் ஆரோக்கியம் மேம்படும்
வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நீங்கள் ஏதேனும் கர்ப்பப்பை பிரச்சனையைக் கொண்டவராயின், இந்த வாழைப்பூ கசாயத்தை அடிக்கடி தயாரித்து குடித்து வாருங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும்
வாழைப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. அதுவும் வாழைப்பூ கசாயத்தை தொடர்ந்து குடித்து வந்தால், புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவி புரியும்.

மன ஆரோக்கியம் மேம்படும்
வாழைப்பூ மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது. வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் குறைத்து, மன இறுக்க பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். ஆகவே உங்களுக்கு மனநிலை அடிக்கடி சரியில்லாமல் போனால், ஒரு டம்ளர் வாழைப்பூ கசாயத்தைக் குடியுங்கள்.

செரிமானம் மேம்படும்
வாழைப்பூ கசாயமானது வயிற்றில் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இந்த கசாயம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுவித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி?
முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும். வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்.



Click it and Unblock the Notifications
