Latest Updates
-
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்ககிட்ட இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க... ஏன்னா இது நல்லதுக்கு பதிலா தீங்கை ஏற்படுத்துமாம்!
நிறைய பழக்கங்கள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கை உண்டாக்குகின்றன. கீழே அந்த பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களும் அதை தினமும் பின்பற்றி வருகிறீர்கள் என்றால் உடனே அதை தவிர்த்திடுங்கள்.
ஒருவரின் ஆரோக்கியத்தில் உணவுகள் மட்டுமின்றி, அவரின் பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இன்று உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு பழக்கவழக்கங்கள் மக்களால் தினசரி பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் சில பழக்கவழக்கங்கள் நமக்கு நன்மை விளைவிப்பதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உதாரணமாக, சைக்கிளிங் செய்வது, மௌத் வாஷ் பயன்படுத்துவது போன்றவை நன்மைக்கு பதிலாக தீங்கை உண்டாக்குகின்றன. இதுப்போன்று நிறைய பழக்கங்கள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கை உண்டாக்குகின்றன. கீழே அந்த பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களும் அதை தினமும் பின்பற்றி வருகிறீர்கள் என்றால் உடனே அதை தவிர்த்திடுங்கள்.

சைக்கிள் ஓட்டுவது
பலருக்கு தினமும் சைக்கிள் ஓட்டும் பழக்கம் இருக்கும். தினமும் சைக்கிள் ஓட்டுவதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கலாம். ஆனால் ஆய்வு ஒன்றில் அளவுக்கு அதிகமாக சைக்கிள் ஓட்டுவது எலும்புகளின் வலிமைக்கு நல்லதல்ல. சொல்லப்போனால் அது எலும்புகளை சேதப்படுத்தி வலுவிழக்க செய்வதாக தெரிய வந்துள்ளது.

மௌத் வாஷ்
இன்று நிறைய பேர் தங்கள் வாய் துர்நாற்றத்தை தடுப்பதற்காக டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவது மட்டுமின்றி, மௌத் வாஷ் கொண்டும் வாயை சுத்தம் செய்கிறார்கள். ஆனால் சில மௌத் வாஷில் உள்ள கெமிக்கல்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுன்றி, வாய் வறட்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக வாய் துர்நாற்றம் நீங்காமல் அப்படியே இருக்கும். எனவே இனிமேல் மௌத் வாஷ் வாங்கும் போது, அதில் மெந்தால் அல்லது ஃப்ளோரைடு உள்ள தெரபடிக் மௌத் வாஷ் வாங்கி பயன்படுத்துங்கள்.

பீன்ஸ்களை சாப்பிடுவது
இயற்கையாகவே பீன்ஸ்களில் பைட்டேஸ்ட் என்ற கால்சியம் உற்பத்தியின் வழியில் நிற்கும் ஒரு அமிலம் உள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், கால்சியத்தை உறிஞ்ச உதவும் உணவுகளை உண்ண வேண்டும். ஆனால் பீன்ஸ் சாப்பிட்டால், அது கால்சியத்தை உறிஞ்ச விடாமல் தடுத்து, எலும்புகளை பலவீனமாக்கும். உடலில் போதுமான கால்சியம் இல்லாவிட்டால், அது பற்களை பலவீனமாக்கும். அதற்காக பீன்ஸ் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஏனெனில் அவையும் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றிமையாதது. ஆனால் பீன்ஸ்களை சமைத்து சாப்பிடும் முன், குறைந்தது 2-3 மணிநேரமாவது ஊற வைக்க வேண்டும்.

பசலை கீரை சாப்பிடுவது
பசலைக்கீரையில் கால்சியம் உள்ளது. ஆனால் இதில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இது கால்சியம் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும். எனவே பசைல்கரை சாப்பிடுவதாக இருந்தால், அதை வெறுமனே தனியாக சாப்பிடாமல், கால்சியம் நிறைந்த பிற உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பசலைக்கீரைய சீஸ் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

இறுக்கமான ஆடைகளை அணிவது
தற்போதைய காலத்திற்கு ஏற்ப ஆடைகளை அணிவது நன்றாக தான் இருக்கும். ஆனால் தற்போது ட்ரெண்டில் இருக்கும் டைட் ஜீன்ஸ், டைட்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருப்பது நல்லதல்ல. ஏனெனில் இந்த மாதிரியான ஆடைகள் பெண்களுக்கு அதிக வியர்வையை ஏற்படுத்தி ஈஸ்ட் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். மேலும் இறுக்கமான ஆடைகளை அணிவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் சற்று தளர்வான மற்றும் இரத்த ஓட்டத்தை அனுமதிக்கும் ஆடைகளை அணியுங்கள்.



Click it and Unblock the Notifications