For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பித்தப்பையில் நோய் ஏற்பட இந்த உணவுகள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பித்தப்பையின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த பித்தப்பையின் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அமைகிறது.

|

நமது கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு பாலமாக செயல்படுவது தான் பித்தப்பை. இந்த பித்தப்பை தான் செரிமான அமைப்பின் மிக முக்கியமான பகுதியாகும். பித்தப்பை என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய சாக் (இது கல்லீரலின் கீழ் உள்ளது). இது பார்ப்பதற்கு ஒரு சிறிய பேரிக்காய் போன்று காணப்படும்.

Gallbladder Disease: Are Bad Eating Habits To Be Blamed?

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பித்தப்பையின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த பித்தப்பையின் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அமைகிறது. எனவே தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதைப் பற்றி கீழே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்த நீர்க்கட்டி

பித்த நீர்க்கட்டி

இந்த பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன. இந்த பித்தக்கற்கள் சில நேரங்களில் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் முதுகுவலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பித்தப்பை கற்களை சில நேரங்களில் மருந்துகளால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

பித்தப்பை அழற்சி

பித்தப்பை அழற்சி

கோலிசிஸ்டிடிஸ் என்பது பித்தப்பை அழற்சி எனப்படுகிறது. நம் பித்தப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இது பித்தப்பை நோய்த்தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. கோலிசிஸ்டிடிஸ் கடுமையான வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்று நீண்ட காலமாக நீடித்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.

பித்தப்பை புற்றுநோய்

பித்தப்பை புற்றுநோய்

பித்தப்பை புற்றுநோயும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பித்தப்பை கற்கள் போன்று இருந்தாலும், முதுகு மற்றும் அடி வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகும். அறிகுறிகள் தாமதமாக இருந்தால் பிறகு சிகிச்சை செய்வது கடினமாகி விடும்.

பித்தப்பை கணைய அழற்சி

பித்தப்பை கணைய அழற்சி

இது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும். செரிமான நொதிகள் சிறுகுடலுக்குள் வெளியேறி செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு கணையத்தை சேதப்படுத்தத் தொடங்குகின்றன. பித்தப்பை கணைய அழற்சி குடல் குழாய்களை அடைக்கிறது. கணையத்தை இரத்த ஓட்டம் இல்லாமல் உலர்த்தி விடுகிறது. இது கணையத்தின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது (இது ஒரு தீவிர நிலை).

இந்த மாதிரியான உணவுகள் வேண்டாம்

இந்த மாதிரியான உணவுகள் வேண்டாம்

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உங்கள் உணவைப் பொறுத்தது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே உணவை தங்கள் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் பித்தப்பை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பேக்கிங் உணவுகள்

பேக்கிங் உணவுகள்

நீங்கள் பித்தப்பை பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மஃபின்கள், குக்கீகள், கப் கேக்குகள் மற்றும் பிற வேக வைத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிகளவு டிரான்ஸ் கொழுப்புகள் பித்தப்பையில் கொழுப்பை சரியாக செயலாக்க இயலாமல் வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை பிரச்சினை இருப்பவர்கள் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

குறிப்பு : பித்தப்பை பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்களுக்கு இது தேவையில்லை.

காபி

காபி

பித்தப்பை சுருங்கிப் போவதற்கு காபி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை உண்ணும் போது அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இனிப்புகள் வேண்டாம்

இனிப்புகள் வேண்டாம்

அதிக சர்க்கரை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கடினமாக்குகிறது. இதனால் இதய நோய்கள், சிறுநீர்ப்பையில் கற்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இனிப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gallbladder Disease: Are Bad Eating Habits To Be Blamed?

Do you know? You may have to face several diseases of gallbladder due to unhealthy eating habits!
Desktop Bottom Promotion