Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கோடைகாலத்தில் இந்த பொருட்களை சாப்பிடுவது உங்களை பல நோய்களுக்கு ஆளாக்குமாம்... ஜாக்கிரதையா இருங்க...!
கோடைகாலம் மீண்டும் வந்துவிட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டு இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோடைகாலம் மீண்டும் வந்துவிட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டு இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே வடஇந்தியாவில் வெயிலின் தாக்கத்தால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பெரும்பாலான மக்கள் ஜில்லென்ற பொருட்களை நாடி செல்கின்றனர்.

கோடை வரும்போது கூடவே சில நோய்களையும் கூட்டி வருகிறது. குளிர்காலத்தில் சளி, நிமோனியா மற்றும் காய்ச்சலால் அதிக நபர்கள் பாதிப்படுபவது போல, அதே போல் கோடைக் காலத்திலும் கூட, சில குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகள் மக்களைத் தாக்கும். நீர்ச்சத்து குறைபாடு, உஷ்ணப் பக்கவாதம், தலைவலி போன்ற உபாதைகள் பொதுவாக கோடைக்காலத்தில் மக்களிடையே காணப்படும். உடல் வெப்பத்தை அதிகரிப்பதன் மூலமும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலமும் இந்த உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்கும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

க்ரில் செய்யப்பட்ட இறைச்சி
கோடைகால இரவுகளில் உங்கள் கூரைகளில் உங்கள் நண்பர்களுடன் பார்பிக்யூ இரவுகளைக் சாப்பிடுவது மகிழ்ச்சியாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த இறைச்சி அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது மற்றும் வெளியில் ஏற்கனவே வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, இந்த கலவையானது க்ரில் செய்யப்பட்ட இறைச்சி புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஐஸ்க்ரீம்
கோடைக்காலத்தில், வெப்பத்தைத் தணிக்க, பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மிகவும் பிரபலமான தின்பண்டங்களில் ஐஸ்க்ரீம் ஒன்றாகும். ஐஸ்க்ரீம்களின் அற்புதமான சுவை மற்றும் குளிர்ச்சியான விளைவு கோடைகாலத்தை விரும்பத்தக்கதாக ஆக்குகிறது. இருப்பினும், ஐஸ்கிரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆல்கஹால்
கோடைகாலத்தில் ஜில்லென்று ஐஸ்கட்டிகளுடன் மது அருந்துவது ம்=வேடிக்கையானதாகத் தோன்றலாம். இருப்பினும், ஆல்கஹால் ஒன்று அல்லது இரண்டு பானங்கள் மூலம் உங்கள் உடல் வெப்பநிலையை உடனடியாக அதிகரிக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுபானம் கோடைக்காலத்தில் நீரழிவை மோசமாக்கும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

மாம்பழம்
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த பருவகால பழம் கோடை காலத்தில் அதிகமாக வளர்க்கப்படுகிறது மற்றும் மக்கள் அவற்றை விரும்புகிறார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால், மாம்பழங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் மற்றும் வயிற்றுப்போக்கு, அசௌகரியம், தலைவலி போன்ற பல விரும்பத்தகாத அறிகுறிகளையும், குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களையும் உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

பால் பொருட்கள்
கோடையில் பால் பொருட்களும் நோய்களை உண்டாக்கும் என்பதால், அதைஅதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். வெளியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, உங்கள் உடல் வெப்பமும் அதிகமாக இருக்கும், மேலும் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள், உடல் சூடு காரணமாக வயிற்றில் அசாதாரண நொதித்தல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

வறுத்த உணவுகள்
எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த பொருட்கள்போன்றவை கோடைகாலத்தில் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன, அவை கோடையில் மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் மக்களுக்கு பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். எண்ணெய் உணவுகள் கோடை காலத்தில் சாப்பிடும்போது மோசமாக இருக்கும், ஏனெனில் அவை உடல் சூட்டை அதிகரிக்கச் செய்து, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும், இலவச இணைப்பாக வேறுசில நோய்களையும்
உண்டாக்கும்.

உலர் பழங்கள்
பேரீச்சம்பழம், திராட்சை, ஆப்ரிகாட் போன்ற உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை, ஏனெனில் அவை சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இருப்பினும், கோடையில் நீங்கள் அவற்றின் நுகர்வை குறைப்பது நல்லது. ஏனெனில் உலர் பழங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடும், மேலும் வெளியில் வெப்பநிலை ஏற்கனவே அதிகமாக இருக்கும் போது இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சில மசாலா பொருட்கள்
ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்ற மசாலாப் பொருட்கள், உங்கள் உணவுகளை ருசியாகவும் வாசனையாகவும் மாற்றும். இருப்பினும், கோடையில் உங்கள் உணவுகளில் அதிக மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது உங்கள் உடலின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும், மேலும் இவை நீரிழப்பு மற்றும் நோய்வாய்ப்பட்டதாக உங்களை உணர வைக்கலாம்.



Click it and Unblock the Notifications











