நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும் தெரியுமா?

மலச்சிக்கல் பிரச்சனை ஒருசில உணவுகளை உண்பதன் மூலம் ஏற்படலாம். எனவே எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அவற்றைத் தவிர்த்தால், மலச்சிக்கலைத் தவிர்ப்பதோடு, பைல்ஸ் அபாயத்தில் இருந்தும் விடுபடலாம்.

பைல்ஸ் என்னும் மூல நோய் ஒருவலிமிக்க கொடிய பிரச்சனை. இந்த பைல்ஸ் மலச்சிக்கலுடன் நெருங்கிய தொடர்புடையது. எப்படியெனில் இந்த பிரச்சனையானது ஆசனவாய் பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படுகிறது. பொதுவாக மலம் இறுக்கமடைந்து அதை வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து வலியுடன் கூடிய இரத்தப் போக்கை உண்டாக்கும். சொல்லப்போனால் பைல்ஸ் பிரச்சனைக்கு முதன்மையான காரணமே மலச்சிக்கல் தான்.

Foods That Can Cause Piles In Tamil

எனவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், அதுவே மூல நோயை வரவழைத்துவிடும். மலச்சிக்கல் பிரச்சனை ஒருசில உணவுகளை உண்பதன் மூலம் ஏற்படலாம். எனவே எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அவற்றைத் தவிர்த்தால், மலச்சிக்கலைத் தவிர்ப்பதோடு, பைல்ஸ் அபாயத்தில் இருந்தும் விடுபடலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ளுட்டன் உணவுகள்

க்ளுட்டன் உணவுகள்

க்ளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். கோதுமை, பார்லி மற்றும் பிற தானியங்களில் உள்ள புரோட்டீன் தான் க்ளுட்டன். க்ளுட்டன் உணவுகள் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோயை உண்டாக்குகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்தை தீவிரமாக பாதித்து, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே க்ளுட்டன் உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், உடனே இந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

வறுத்த மற்றும் ஜங்க் உணவுகள்

வறுத்த மற்றும் ஜங்க் உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அது பைல்ஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள் உடலில் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இது தவிர, இந்த வகையான உணவுகள் இரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கி, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இந்த மாதிரியான உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள் அல்லது அளவாக சாப்பிடுங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் இந்த இறைச்சியை சாப்பிட்டால், அது பைல்ஸ் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் இதில் கொழுப்பு ஏராளமான அளவில் உள்ளது. இதன் விளைவாக உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாமல் போகும். உண்ணும் உணவுகள் சரியாக ஜீரணமாகாமல் இருந்தால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்றுவது சிரமமாகிவிடும். எனவே உங்களுக்கு ஏற்கனவே பைல்ஸ் பிரச்சனை இரந்தால், மாட்டிறைச்சியை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது நிலைமையை மோசமாக்கிவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

மது அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்குமே தெரியும். குறிப்பாக மது அருந்துவது உடல் வறட்சிக்கு வழிவகுக்கும். உடல் வறட்சியானது மலச்சிக்கல் போன்ற மோசமான பிரச்சனையை உண்டாக்கி, பைல்ஸ் போன்ற கொடிய நோய்க்கு வழிவகுக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் சிலருக்கு மாட்டுப் பால் மற்றும் பாலால் ஆன பொருட்களை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால், உடனே இவற்றைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் மாட்டுப் பாலில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை உண்டாக்கும். இத்தகைய பிரச்சனையைக் கொண்டவர்கள் பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion