Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்தவரா? இந்த உடற்பயிற்சியை தினமும் செஞ்சா சீக்கிரம் குணமாவீங்க...
குடலிறக்கம் என்பது அடி வயிற்று பகுதியில் உள்ள தசை அல்லது உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தால் அதிக வலியை உணரக்கூடிய ஒரு பிரச்சனையாகும். அறுவை சிகிச்சையால் குடலிறக்கம் சரியானாலும் கவனமாக இருக்க வேண்டும்.
குடலிறக்கம் என்பது அடி வயிற்று பகுதியில் உள்ள தசை அல்லது உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தால் அதிக வலியை உணரக்கூடிய ஒரு பிரச்சனையாகும். பொதுவாக, இது கடுமையான உடல் உழைப்பு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. இதனை நீண்ட நாட்களுக்கு கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகவும் தீவிரமடையக்கூடும். இந்த பிரச்சனையை மருந்து உட்கொள்வதன் மூலமாகவும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவும் சரி செய்ய முடியும். இருப்பினும், பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமாகவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

அப்படி செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம், குடலிறக்கம் சரியானாலும் கூட, அதற்கு பின்பு தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பிற உடல் நல கேடுகள் ஏற்பட்டுவிடும். அறுவை சிகிச்சைக்கு பின்பு, முழு நேர ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அதன்மூலமாக தான், உடல் முழுவதுமாக குணமாகி பூரண நலம் பெற முடியும். மனதளவிலும் அழுத்தம் எதுவும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டால் மட்டுமே, பின்விளைவுகள் எதுவும் நேராமல் தவிர்க்க முடியும்.

அறுவை சிகிச்சைக்கு பின்பு தவிர்க்க வேண்டிய செயல்கள்:
* வேகமாக நடக்கக் கூடாது
* பளு தூக்கக் கூடாது
* ஓட்டப்பந்தயம், நீச்சல் போன்ற தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்கவும்
அறுவை சிகிச்சை செய்து 2 வாரங்களுக்கு பிறகு நீங்கள் உங்களது இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்பிடலாம். அப்போது கூட, சிறிது சிறிதாக வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதிக அழுத்தத்தை உடலுக்கு ஒரே அடியாக கொடுக்காமல் சிறிது சிறிதாக கொடுத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. கவனமாக இருந்தும், ஏதாவது மாற்றத்தால் அவதிப்பட்டால் எந்த காலதாமதமும் இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகிட வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நல மேம்பாட்டிற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்:
பொதுவாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு, அதிகப்படியான உடற்பயிற்சியை தவிர்க்கவும். அதுவே, சிறு உடற்பயிற்சிகளை செய்வதன் மூலன் விரைந்து உடல்நலம் தேருவதை நீங்களே பார்க்கலாம். அப்படி செய்ய வேண்டிய சிறு உடற்பயிற்சிகளை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்...

தியானம்
அறுவை சிகிச்சை பிறகு, சிறிது வலியை நீங்கள் உணர நேரிடலாம். அப்படிப்பட்ட சூழலில், தியானம் செய்வதன் மூலம் நீங்கள் வலி ஏற்படுவதை தடுத்திடலாம். மூச்சை நன்கு உள்வாங்கி மெதுவாக வெளியே விட்டு தியானத்தை செய்வதால், இரத்த ஓட்டம் சீராகும். அதனால், வலி உண்டாக்கும் காரணிகள் நீங்கிவிடும்.
* நன்கு நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, மூச்சை நன்கு உள்ளிழுத்து விடவும்.
* தினமும், 15-20 நிமிடங்களுக்கு இதனை தொடர்ந்து செய்யவும்.

நடைபயிற்சி
குடலிறக்க அறுவை சிகிச்சை செய்த பின்பு, 2 நாட்களுக்கு எந்தவொரு உடல் உழைப்பும் கூடவே கூடாது. எனவே, சில நாட்கள் கழித்து மருத்துவரை சந்தித்த பின்பு, பொறுமையாக நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
எந்தவொரு பதற்றமும் இல்லாமல், மெதுவாக நீங்களே நடக்க ஆரம்பிக்கவும். இதன் மூலம், இரத்த ஓட்டம் சீராகி, நோய் தொற்று போன்ற பிற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்திடலாம். குடலின் இயக்கம் விரைந்து சீராகவும் இது உதவும்.

கால்களுக்கான உடற்பயிற்சி
விரைவான உடல்நல முன்னேற்றத்திற்கு கால்களுக்கு வலு சேர்ப்பது நல்ல பலனளிக்கும். முதலில் ஒன்று முதல் இரண்டு முறை என உடற்பயிற்சியை ஆரம்பித்து, பின்பு மெதுவாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் அதிகமாக செய்துவிட கூடாது. கால்களுக்கு கொடுக்கப்படும் அசைவின் மூலமாக, இரத்த ஓட்டம் சீராகி, இரத்த கட்டு போன்றவை ஏற்படுவதை தடுத்திடலாம்.

கணுக்கால்களுக்கு உடற்பயிற்சி
* உங்களது கணுக்கால்களை மடித்து 10-15 வினாடிகளுக்கு அப்படியே உட்காரவும். பின் பழைய நிலைக்கு திரும்பவும்.
* இதனை 10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மூட்டுகளுக்கு உடற்பயிற்சி
* முதுகு கீழே படும்படி படுத்துக் கொண்டு, முதலில் இடது காலின் பாதம் தரையைத் தொடுமாறு மடக்கி, பின் முழங்காலை மேல் நோக்கி மெதுவாக மடக்க வேண்டும்.
* இதே நிலையில் சில வினாடிகள் வைத்துவிட்டு, பிறகு கால்களை நீட்டவும்.
* இதேபோன்று, வலது காலுக்கும் தொடர்ந்து செய்யவும்.

அடிவயிற்றிற்கான உடற்பயிற்சி
மறுபடியும் குடலிறக்கம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், தசைகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். எனவே, வயிற்றிற்கான உடற்பயிற்சியை செய்ய தவறாதீர்கள்...

வயிற்றை இழுப்பது
* படத்தில் காட்டப்பட்டவாறு தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மடிக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்து, தலையைத் தூக்கி முன்னோக்கி கொண்டு வரவும்.
* இந்நிலையில் மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிவிடவும்.
* இதே நிலையில் சில வினாடிகள் இருந்துவிட்டு பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.

இடுப்புக்கான உடற்பயிற்சி
* தரையில் கீழே படுத்துக்கொண்டு, முழங்கால்களை மடித்து கொள்ளவும்.
* கைகள் இரண்டையும், உடலை ஒட்டியவாறு தரையில் வைக்கவும்.
* இப்போது, வயிறு பகுதி தசைகளை இறுக்கிக் கொண்டு, மேல்நோக்கி உடலை தூக்க வேண்டும்.
* இதே நிலையில் இருந்து விட்டு, பின்னல் இயல்பு நிலைக்கு திரும்பவும்.



Click it and Unblock the Notifications











