For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி கொட்டாவி விடுறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..

கொட்டாவி வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

|

பொதுவாக உடல் மிகுந்த களைப்புடன் இருந்தால் கொட்டாவி வரும். இது உடலின் ஒரு வகையான செயல்முறை. பெரும்பாலான நேரங்களில் புத்தகம் படிக்கும் போது அல்லது மற்றவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் போது கொட்டாவி வரும். இது தவிர ஒருவருக்கு கொட்டாவி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் சில பிரச்சனைகள் இருந்தாலும், கொட்டாவி வரக்கூடும். ஆய்வுகளினிக் படி, ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்காத போது அல்லது மன அழுத்தம் மற்றும் களைப்பு இருந்தாலும், அடிக்கடி கொட்டாவி வரும்.

Excessive Yawning Can Be A Sign Of These Health Problems

கொட்டாவி விடும் நேரத்தில், சிலர் மூச்சுத்திணறலை உணரலாம். மேலும் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் அவதிப்படலாம். கொட்டாவியானது சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் இருக்கலாம். இருப்பினும், கொட்டாவி வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்போது ஒருவருக்கு அடிக்கடி கொட்டாவி வருவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்க பிரச்சனைகள்

தூக்க பிரச்சனைகள்

பொதுவாக தூக்கம் வந்தால் கொட்டாவி வரும். உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக கொட்டாவி வருகிறதா? அப்படியானால் நீங்கள் தினமும் போதுமான அளவு தூக்கத்தைப் பெறுவதில்லை என்று அர்த்தம். எனவே தினமும் போதுமான அளவு தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மனதில் கவலை அதிகம் இருந்தால், அது அடிக்கடி கொட்டாவி வரத் தூண்டுகிறது. இது தவிர மன கவலையானது இதய பிரச்சனைகள், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. எனவே கவலையுடன் வாழ்ந்தால், கொட்டாவி அதிகம் வரும். இதைத் தவிர்க்க மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மருந்துகள்

மருந்துகள்

தற்போதைய உலகில் தினமும் மருந்துகளை எடுப்போர் ஏராளம். இப்படி அதிக மருந்து மாத்திரைகளை எடுப்பதால், கொட்டாவி அதிகம் வரலாம். மருந்துகளில் ஆண்டிஹிஸ்டமின்கள், வலி நிவாரணிகள் போன்றவற்றை எடுப்பது கொட்டாவியை மட்டுமின்றி, குமட்டலையும் ஏற்படுத்தும்.

இதய நோய்

இதய நோய்

அதிகப்படியான கொட்டாவி வேகஸ் நரம்பின் காரணமாக இருக்கலாம். இந்த நரம்பானது மூளையில் இருந்து இதயம் மற்றும் வயிற்று பகுதிக்கு செல்கிறது. ஆய்வுகளின் படி, அதிகப்படியான கொட்டாசி இதயத்தைச் சுற்றி இரத்தப் போக்கு அல்லது மாரடைப்பு ஆகியவற்றின் காரணமாகவும் இருக்கலாம். எனவே அடிக்கடி கொட்டாவி வந்தால், அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடாமல், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து பாருங்கள்.

பக்கவாதம்

பக்கவாதம்

ஏற்கனவே பக்கவாதம் வந்தவர்களுக்கு கொட்டாவி அதிகம் வரக்கூடும். ஏனெனில் கொட்டாவியானது உடல் மற்றும் மூளையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Excessive Yawning Can Be A Sign Of These Health Problems

Excessive yawning or frequent yawning can also be side effects of any medicine. However, there may be other reasons for this which are as follows.
Story first published: Thursday, June 30, 2022, 15:11 [IST]
Desktop Bottom Promotion