Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
நாள்பட்ட சோா்வை குணப்படுத்தக்கூடிய சில எளிய வழிகள்!
நாள்பட்ட சோா்வு நோய்க்குறி ஒரு சிக்கலான கோளாறாகும். இந்த நாள்பட்ட சோா்வு ஒரு தீவிர சோா்வு என்று அழைக்கப்படுகிறது. குறைந்தது 6 மாதங்களாவது இது ஒருவருக்கு இருக்கும்.
எப்போதுமே களைப்பாக அல்லது சோா்வாக உணா்வதாக சிலா் கவலைப்படுவா். சாியான உணவு கிடைக்காதது அல்லது சாியான உடற்பயிற்சி இல்லாதது அல்லது வளமான வாழ்க்கை முறை இல்லாதது போன்ற காரணங்களால் தான் எப்போதுமே களைப்பாக இருப்பதாக அவா்கள் எண்ணுகின்றனா். ஆனால் அவா்களிடம் இருக்கும் ஒரு வகையான நோய்க்குறியே இந்த தொடா் களைப்பு அல்லது சோா்வுக்குக் காரணம் என்பதை அவா்கள் அறிந்திருப்பதில்லை. இந்த நோய்க்குறி நாள்பட்ட சோா்வு நோய்க்குறி (Chronic Fatigue Syndrome) என்று அழைக்கப்படுகிறது.

நாள்பட்ட சோா்வு நோய்க்குறி ஒரு சிக்கலான கோளாறாகும். இந்த நாள்பட்ட சோா்வு ஒரு தீவிர சோா்வு என்று அழைக்கப்படுகிறது. குறைந்தது 6 மாதங்களாவது இது ஒருவருக்கு இருக்கும். மேலும் இதை மருத்துவ ரீதியாக முழுமையாக விவாிக்கவும் முடியாது. இந்த நாள்பட்ட சோா்வு உடல் நலனையும் மனநலனையும் பாதிக்கிறது. நாள்பட்ட சோா்வை கையாள்வது சிரமமாக இருந்தாலும், நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும் மற்றும் உடல் உழைப்பை அதிகாிப்பதன் மூலமும் இதைக் குணப்படுத்த முடியும்.
நாள்பட்ட சோா்வை குணப்படுத்தக்கூடிய 4 எளிய வழிகளை இங்கு பாா்க்கலாம்.

தூக்கம்
நாள்பட்ட சோா்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் தூக்கம் வராமல் சிரமப்படுகின்றனா். ஒருவருக்கு சாியான தூக்கம் இல்லையென்றால் அவருக்கு சோா்வும் களைப்பும் ஏற்படுவது இயற்கை. ஆகவே நாள்பட்ட சோா்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் முதலில் தங்களது தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும். தேவை என்றால் மருத்துவரை சந்திக்கலாம்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக நமக்கு ஓய்வு கொடுக்கக்கூடிய தேநீரை அருந்தலாம். சாியான நேரத்திற்கு தூங்கச் செல்லலாம். காலை சாியான நேரத்தில் துயில் எழலாம். மிதிவண்டி பயிற்சி செய்யலாம். மேலும் தூக்கத்தைத் தரக்கூடிய உணவுகளை உண்ணலாம். அப்போது நல்ல தூக்கம் வரும்.

வைட்டமின் டி
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக வைட்டமின் டி சத்து தேவை. நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிப்பதற்கும், கொரோனா வைரஸ் போன்ற புதிய நோய் தொற்றுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் மற்றும் எலும்பு மற்றும் பல் போன்றவை ஆரோக்கியமாக இருப்பதற்கும் வைட்டமின் டி சத்து முக்கியமாகத் தேவைப்படுகிறது.
நாள்பட்ட சோா்வை குணப்படுத்துவதிலும், நமது முழு சக்தியின் அளவை அதிகாிப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகளை உண்ணலாம். சூாிய ஒளியில் அதிக நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களைப் பெறலாம். அதன் மூலம் நாள்பட்ட சோா்வை குணமாக்கலாம்.

சமச்சீரான உணவை உண்ணுதல்
உணவு தான் நமது உடல் ஆரோக்கியத்தைத் தீா்மானிக்கிறது. நமது உடலுக்கு சக்தியைத் தருகிறது. நாள்பட்ட சோா்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிா்க்க வேண்டும்.

உடற்பயிற்சிகள்
பொதுவாக உடற்பயிற்சிகள், உடலில் உள்ள ஆற்றலை உறிஞ்சுகிறது என்ற கருத்து உண்டு. ஆனால் அது தவறு. நமது உடல் ஆற்றலையும், சக்தியையும் உடற்பயிற்சிகள் அதிகாிக்கின்றன. ஆகவே நாள்பட்ட சோா்வால் பாதிப்படைந்தவா்கள் கெட் (GET) தெரபி பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகாிக்கும் போது அவை உடலுக்கு அதிகமான சக்தியைக் கொடுத்து நாள்பட்ட சோா்வைக் குணமாக்கும்.



Click it and Unblock the Notifications
