For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! பிறப்புறுப்பில் புண் இருந்தா அசால்ட்டா விடாதீங்க... இல்லன்னா கொடிய புற்றுநோய் வந்துடும்...

டோனோவனோசிஸ் என்பது பாலியல் ரீதியாக பரவும் பிறப்புறுப்பு புண் நோயாகும். இது க்ளெப்செல்லா கிரானுலோமாடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

|

டோனோவனோசிஸ் என்பது பாலியல் ரீதியாக பரவும் பிறப்புறுப்பு புண் நோயாகும். இது க்ளெப்செல்லா கிரானுலோமாடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. டோனோவனோசிஸ் இடுப்பு அல்லது குதப் பகுதியைச் சுற்றியுள்ள தோலைப் பாதிக்கிறது.

Donovanosis: Causes, Symptoms, Precautions and Treatment

இதனால் அந்தப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு அங்குள்ள சருமத்தை அழிக்கிறது. டோனோவனோசிஸ் எச்.ஐ.வி பரவுவதற்கான ஆபத்தான காரணியாக உள்ளது. இருப்பினும் இந்த நோயை சில ஆன்டிபயாடிக் மருதுகள் மூலம் குணப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள் என்னென்ன?

அறிகுறிகள் என்னென்ன?

நோய்த்தொற்றுக்கு பிறகு ஆரம்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வலியற்ற புண்கள் காணப்படுகின்றன. கட்டிகள் பிறப்புறுப்பு அல்லது ஆசனவாய் பகுதியைச் சுற்றி உருவாகின்றன. இந்த புண்கள் அப்படியே பரவி பரவி சருமத்தை அழிக்கும் ஒரு சிவப்பு சதைப்பகுதி கட்டியை உருவாக்குகிறது. இதனால் பிறப்புறுப்பு பகுதியில் வேதனையும் கெட்ட துர்நாற்றமும் உண்டாகிறது.

இது எவ்வாறு பரவுகிறது?

இது எவ்வாறு பரவுகிறது?

டோனோவனோசிஸ் பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவக் கூடும். இதன் அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 1-4 வாரங்களிலேயே ஏற்படும். ஆனால் கட்டிகள் போன்றவை உருவாக ஒரு வருடங்கள் வரைக் கூட ஆகலாம். மிகக் கடுமையான அளவில் தான் மக்கள் தோல் தொடர்பு மூலம் பாதிக்கப்படுகிறார்கள். மற்ற நேரங்களில் உடலுறவு மூலமாகவே தொற்று ஏற்படுகிறது.

இந்த நோயால் ஆபத்து யாருக்கு?

இந்த நோயால் ஆபத்து யாருக்கு?

ஆஸ்திரேலியாவில், வடக்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர சமூகங்களில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகளுக்கு வெளியே இந்த நோய் பாதிப்பு இருப்பது தெரியவில்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சிறிய எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. டோனோவனோசிஸ் ஆபாயத்தில் உள்ளவர்கள் என்று பார்த்தால் உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், குறிப்பாக பப்புவா நியூ கினியா, மத்திய அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்னிந்தியாவின் பகுதிகள் போன்ற நாடுகளில் இருப்பவர்களிடம் அதிகளவு காணப்படுகிறது. இங்கு வசிக்கும் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு இந்த பாக்டீரியா உடலுறவு மூலம் பரவ வாய்ப்புள்ளது.

இந்த நோயை எவ்வாறு தடுக்கலாம்?

இந்த நோயை எவ்வாறு தடுக்கலாம்?

* பிறப்புறுப்பு புண்கள் இருப்பவருடன் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம்.

* உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகள் அணிவது நல்லது. இதன் மூலம் உடலுறவு சம்பந்தமான நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்.

* நீங்கள் டோனோவனோசிஸ் பரவும் நாடுகளுக்கு செல்ல வேண்டி இருந்தால் கொஞ்சம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள்.

நோயைக் கண்டறிவது எப்படி?

நோயைக் கண்டறிவது எப்படி?

டோனோவனோசிஸை கண்டறிய பிறப்புறுப்பு பகுதியில் உள்ள புண்களில் இருந்து மாதிரியை சேகரித்து பால்வினை தொற்று இருக்கிறதா என்பதை இரத்த மாதிரிகள் மூலம் பரிசோதிப்பார்கள்.

எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

டோனோவனோசிஸ் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டே நீங்கள் வந்தால் சில நாட்களில் புண்கள் குணமாகிவிடும். தொற்று நோய்க்கான காலஅளவு மற்றும் நோய்த்தொற்றின் நிலையை பொறுத்து சில வாரங்களுக்கு நீங்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புண்களில் வலி இருந்தால் நீங்கள் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே நோய் முழுமையாக குணமாக உங்க மருத்துவர்களை நாடுங்கள்.

ஆபத்து எப்போது?

ஆபத்து எப்போது?

டோனோவனோசிஸை நீங்கள் கண்டுக்காமல் விட்டு விட்டால் புண்கள் அதிகமாகி பிறப்புறுப்பின் பெரிய பகுதியை அழிக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால டோனோவனோசிஸ் பிறப்புறுப்பு புற்றுநோயை கூட உண்டாக்க வாய்ப்புள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள்:

தடுப்பு நடவடிக்கைகள்:

* நீங்களும் உங்கள் துணையும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

* நீங்களும் உங்க துணையும் சிகிச்சை பெறும் வரை பாதுகாப்பற்ற உடலுறவை தவிருங்கள்.

* டோனோவனோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் என்.எஸ்.டபிள்யூ ஹெல்த் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்புகள் ரகசியமானவையாக வைக்கப்படும். இதன் மூலம் நோய் பரவுதலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Donovanosis: Causes, Symptoms, Precautions and Treatment

Donovanosis is a known risk factor for the transmission of HIV; however, the disease is readily cured with antibiotics. Read on...
Desktop Bottom Promotion