Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யும் போது பலரும் செய்யும் சில தவறுகள்!
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் நெகிழ்ந்து தளர்வடைகிறது. ஆனால் இதனை சரியான முறையில் செய்ய வேண்டும் . இல்லையேல் உடலில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடும்.
உடலையும் தசை மண்டலங்களையும் தளர்த்த உதவும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி (Stretching Exercise ) உடற்பயிற்சியின் அடிப்படை ஆகும். ஸ்ட்ரெட்சிங் பயிற்சியால் தசைகள் திறக்கப்பட்டு, உடற்பயிற்சியின் போது காயங்கள் தடுக்கப்படும். பலர் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியில் உள்ள பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு அதனை மட்டுமே ஒரு முக்கிய பயிற்சியாக செய்ய வேண்டுமென்று நினைக்கின்றனர்.

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் நெகிழ்ந்து தளர்வடைகிறது. ஆனால் இதனை சரியான முறையில் செய்ய வேண்டும் . இல்லையேல் உடலில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடும். ஸ்ட்ரெட்சிங் பயிற்சியில் செய்யக்கூடிய தவறுகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதனை தவிர்ப்பது நல்லது.

வார்ம் அப் செய்யாமல் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யக்கூடாது
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் வார்ம் அப் செய்வதற்கான முக்கியத்துவம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது போலவே ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதற்கு முன்னர் வார்ம் அப் செய்வதும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வார்ம் அப் செய்வதால் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிக்கு தசைகள் தயாராகிறது, இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகள் பயிற்சிக்கு ஏற்றதாக மாறுகிறது.
நேரடியாக ஸ்ட்ரெட்சிங் பயிற்சிக்கு இறங்குவதற்கு முன்னர் வேகமாக நடப்பது, அல்லது பின்னால் நடப்பது , ஜாகிங் செய்வது போன்ற வார்ம் அப் பயிற்சிகளை செய்யலாம். இதனால் தசைகள் லேசாகி , ஸ்ட்ரெட்சிங் பயிற்சியின் போது காயம் ஏற்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.

ஒழுங்கற்ற ஸ்ட்ரெட்சிங் பயிற்சி நுட்பத்தை பயிற்சி செய்ய வேண்டாம்
உங்களுக்கு எத்தனை வகை ஸ்ட்ரெட்சிங் பயிற்சி பற்றி தெரியும் ? பலரும் அறியாத விஷயம் என்னவென்றால் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி இரண்டு விதமாக செய்யப்படுகிறது. உடலின் கட்டுக்கோப்பிற்கு ஏற்ற வகையில் அபாயத்தை குறைக்கும் வகையில் இதன் வகைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த இரண்டு வகைகள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.
ஸ்டாடிக் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி:
ஒரு குறிப்பிட்ட தசையை அல்லது பகுதியை நீட்டிப்பதற்காக, அந்த பகுதி நீளும் வரை ஒரு அங்க நிலையில் இருப்பது ஸ்டாடிக் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியாகும். வேகமாக குணமடைவதற்கு இந்த பயிற்சி மிகவும் ஏற்றது. மேலும் தசைகள் சோர்வடைவதை இந்த பயிற்சி குறைக்கிறது. உடற்பயிற்சிக்கு பின் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
டைனமிக் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி:
ஒரு குறிப்பிட்ட அங்க நிலையில் இல்லாமல் இயக்கத்தில் இருக்கும் போது பின்பற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி இதுவாகும். உங்கள் உடற்பயிற்சியின் போது சில வகை இயக்க நிலையுடன் தொடர்புடையது டைனமிக் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி. ஆகவே உடற்பயிற்சிக்கு முன் இந்த பயிற்சியை மேற்கொள்வதால் தசைகள் மற்றும் மூட்டுகள் பயிற்சிக்கு தயார் நிலையில் இருக்க உதவும்.

அதிகமாக நீட்டுவது
நீங்கள் எந்த அளவு வேண்டுமானாலும் ஒரு பகுதியை நீட்டிக்கலாம் என்று நினைத்தால் அது தவறு ! ஸ்ட்ரெட்சிங் பயிற்சி என்பது உடலை நெகிழ்த்துவதற்காக என்பதால் மக்கள் பொதுவாக உடலை அதிகம் நீட்டிக்க நினைக்கின்றனர். ஆனால் அதிக நீட்சி தசைகளை கிழித்து வலியை உண்டாக்கும். ஆகவே தசைகளை மென்மையாக கையாள்வது நல்லது. தசைகள் இறுக்கமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், ஒரே பயிற்சியை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யலாம். ஆனால் உடலை ஒரு அளவிற்கு மேல் அழுத்தக் கூடாது. உங்கள் உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்க விரும்பினால் அதன் சாதக பாதக நிலைகளை பற்றி ஆராய்ந்து கொள்வது நல்லது.

பவுன்சிங் பயிற்சி
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யும் போது பவுன்சிங் செய்வதால் தசைகள் இழுக்கப்படலாம். பொதுவாக பவுன்சிங் செய்யும் போது தசைகள் இறுக்கமடைகின்றன. காயத்தை தவிர்ப்பதற்காக இது நிகழ்கிறது. ஸ்ட்ரெட்சிங் பயிற்சியின் போது பவுன்சிங் செய்வதால் குழப்பமான இயக்கம் ஊக்குவிக்கப்பட்டு தசைகள் இழுக்கப்படுகின்றன. பவுன்சிங் செய்வதற்கு மாற்றாக டைனமிக் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை முயற்சிக்கலாம்.

அடிக்கடி ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யாமல் இருப்பது
தசைகளின் நெகிழ்வுத்திறனை மேம்படுத்தவும், மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கவும் ஒவ்வொருவரும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை மேற்கொள்ளலாம். இன்னும் சொல்ல வேண்டுமானால் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி என்பது தசைகளுக்கு எண்ணெய் விடுவது போல, அவற்றை நெகிழ்வுடன் வைத்து இயக்கத்தில் இருக்க உதவும். ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை அடிக்கடி செய்யாமல் இருப்பதால் அசௌகரியம் மற்றும் இறுக்கம் ஏற்பட்டு அவ்வப்போது வலியை உண்டாக்கலாம். ஆகவே ஸ்ட்ரெட்சிங் பயிற்சி அவசியம் தேவை.

காயப்பட்ட தசைகளை நீட்டுவது
காயம் ஏற்பட்ட தசைகளை குணப்படுத்த ஸ்ட்ரெட்சிங் பயிற்சி உதவும் என்று நீங்கள் நம்புவதை கைவிடுங்கள். மாறாக, இது அந்த நிலையை மேலும் மோசமாக மாற்றும். காயம் ஏற்பட்ட தசைகளுக்கு ஓய்வு மிகவும் அவசியம். இதனால் தானாகவே அது சரியாகும்.
மேலே கூறியவை அனைத்தும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி தொடர்பாக மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் ஆகும். இந்த தவறுகள் காரணமாக நீங்கள் நினைத்த விளைவுகளை அடைய முடியாமல் போகும். ஆகவே இந்த தவறுகளை குறித்துக் கொண்டு உங்கள் உடற்பயிற்சியில் இந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதால் நீங்கள் நினைத்த விளைவுகளை உங்களால் அடைய முடியும்.



Click it and Unblock the Notifications