Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உண்மையில் பழங்கள் உடல் எடையை அதிகரிக்குமா அல்லது குறைக்குமா?
பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கின்றன. அதனால் அவை உடலுக்கு சக்தியைத் தருகின்றன. அதே சமயம் பழங்கள் உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதற்கு எந்த வகையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கலாம் என்பதில் பலருக்கு அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது. பொதுவாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தங்களின் உணவு பட்டியலில் இருந்து துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகள் போன்றவற்றை விலக்கி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனெனில் இந்த வகையான உணவுகள் உடல் எடையை அதிகரிக்கக் கூடியவை. எனவே அதற்குப் பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் உடல் எடையை பெருமளவில் குறைக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

பழங்கள் மற்றும் உடல் எடை
அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள், பழங்கள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று நம்புகின்றனர். ஏனெனில் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. மேலும் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏனெனில் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கின்றன. அதனால் அவை உடலுக்கு சக்தியைத் தருகின்றன. அதே சமயம் பழங்கள் உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
பொதுவாக எல்லா பழங்களுமே இனிப்பாக இருக்கின்றன. அதற்கு காரணம் பழங்களில் இருக்கும் இயற்கையான சர்க்கரை (ஃப்ரூக்டோஸ்) ஆகும் (இனிமேல் இதை பழச்சர்க்கரை என்று இங்கு அழைக்கலாம்). அதோடு பழங்களில் செயற்கையான சர்க்கரையும் இருக்கின்றது. இவ்வாறு பழங்களில் சர்க்கரை இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்குமா என்ற கேள்வி தானாகவே எழுகிறது.

பழச்சர்க்கரை உடல் எடையை அதிகரிக்குமா?
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பழங்களை சாப்பிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சக்தியையும் தரும் என்பதே. இந்நிலையில் பழங்களில் இருக்கும் பழச்சர்க்கரை உடல் எடையை அதிகரிக்க வைக்காதா என்ற கேள்வி எழுவது இயல்பே.
ஆனால் பழங்களில் உள்ள பழச்சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கச் செய்வதில்லை என்றே பல ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் பழச்சர்க்கரைக்கும், செயற்கை சர்க்கரைக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

ஆய்வுகள் கூறுவது என்ன?
உடல் எடை அதிகரிப்பதற்கும், பழங்களில் இருக்கும் பழச்சர்க்கரைக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி பல ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். அவற்றில் ஒரு ஆய்வு, பழங்கள் உடல் எடையை அதிகரிப்பதில்லை, மாறாக உடல் எடையை குறைப்பதற்கு உதவி செய்கின்றன என்று கூறுகிறது. மேலும் பழங்களை அதிகமாக உண்பவர்கள் நல்ல உடல் தகுதியுடன், ஒல்லியாக மற்றும் அழகாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் மெட்டபாலிசம் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வுக்கு 107 குண்டான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இதில் ஒரு குழுவினருக்கு பழத்திலிருந்து கிடைக்கும் பழச்சர்க்கரை 20 கிராம் தினமும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மற்ற குழுவினருக்கு 50 முதல் 70 கிராம் வரை தினமும் வழங்கப்பட்டது. இறுதியில் அதிகமாக பழச்சர்க்கரை உண்டவர்கள் மற்ற குறைவாக உண்டவர்களை விட 48 விழுக்காடு விரைவாக தங்கள் உடல் எடையைக் குறைத்ததாக அறிஞர்கள் கண்டறிந்தனர்.

பழச்சர்க்கரை உடல் எடையை அதிகரிக்காது - ஏன்?
பழச்சர்க்கரை உடல் எடையை அதிகரிப்பதில்லை. ஏனெனில் பழச்சர்க்கரையில் ஃபைபர் மற்றும் மக்னீசியம் ஆகியவை இருக்கின்றன. அவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கின்றன.
பழங்களில் நார்ச்சத்து இருப்பதால், அவை செரிமானமாவதற்கு அதிக நேரம் தேவைப்படும். மேலும் பழங்களை செரிக்க வைப்பதற்கு உடல் அதிகமான சக்தியை செலவழிக்க வேண்டும். பழங்கள் சாப்பிடும் போது எவ்வளவு அதிமாக கலோரிகள் உடம்புக்கு கிடைக்கின்றதோ, அதே அளவிற்கு அந்த பழங்களை செரிக்க வைக்க உடம்பு அதிக கலோரிகளை செலவழிக்க வேண்டும். அவ்வாறு அதிகமான கலோரிகள் செலவாவதால் உடல் எடை அதிகரிப்பதில்லை.
மேலும் பழங்களில் நார்ச்சத்து இருப்பதால், அதில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலந்து மெதுவாக கரைந்து விடுகின்றது. அதனால் பழங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் அதிகரிப்பதில்லை, அதுபோல் உடல் பருமனையும் அதிகரிப்பதில்லை. எனவே இனிமேல் உடல் எடை அதிகரித்துவிடும் என்ற கவலை இல்லாமல் பழங்களை அனைவரும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











