Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
ஆப்பிள் சீடர் வினிகர் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணமாக்கும் என்பது உண்மையா? எப்படி சாப்பிடணும்?
இன்று பல ஆண்கள் படுக்கையில் சந்திக்கும் ஓர் பிரச்சனையால் விறைப்புத்தன்மை கோளாறு உள்ளது. இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை ஆப்பிள் சீடர் வினிகர் சரிசெய்ய உதவுமா?
இன்று பல ஆண்கள் படுக்கையில் சந்திக்கும் ஓர் பிரச்சனையால் விறைப்புத்தன்மை கோளாறு உள்ளது. இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை ஆப்பிள் சீடர் வினிகர் சரிசெய்ய உதவுமா? ஆனால் இதுக்குறித்த சில கட்டுக்கதைகள் உலா வருகின்றன மற்றும் பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்கின்றனர். அதேப் போல் பல ஆண்களும் ஆப்பிள் சீடர் வினிகர் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்வதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் இது உண்மையா? அல்லது வெறும் கட்டுக்கதையா? சரி, இதற்கான விடை இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். இப்போது விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய ஆப்பிள் சீடர் வினிகர் உதவுமா என்பது குறித்து காண்போம். அதோடு ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வதால் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் காண்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள்களில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது பல சமையல், சாலட்டுகள் மற்றும் உறுகாய்களில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இது பல வீட்டு வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது உண்மையில் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்துமா? இந்த நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையானது பல்வேறு காரணங்களால் ஏற்படும். அதில் சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், காயங்கள், மன அழுத்தம், மன இறுக்கம், இதய நோய், உடல் பருமன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆப்பிள் சீடர் வினிகர் எப்படி உதவுகிறது?
ஆப்பிள் சீடர் வினிகர் விறைப்புத்தன்மை பிரச்சனையை நேரடியாக குணப்படுத்த உதவும் என்பதற்கான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லை. இருப்பினும், சிலர் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஆப்பிள் சீடர் வினிகரை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் ஆப்பிள் சீடர் வினிகர் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான காரணிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது தான்.

நம்பிக்கை எவ்வாறு வந்தது?
பொதுவாக ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், இதய பிரச்சனைகளைத் தடுக்கும் மற்றும் உடல் பருமனடைவதைத் தடுக்க உதவும். இந்த மூன்றுமே விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாகும். இந்த மூன்றையும் ஆப்பிள் சீடர் வினிகர் மூலம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். இதனாலேயே ஆண்களிடம் ஆப்பிள் சீடர் வினிகர் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம்.

சர்க்கரை நோய் காரணமெனில்,
டைப்-2 சர்க்கரை நோய், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால், இது ஓரளவு உதவி புரியலாம். ஒருவேளை உடல் பருமன் காரணமாக இருந்தால், ஆப்பிள் சீடர் வினிகர் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவி புரியும்.

கொலஸ்ட்ரால் காரணமெனில்,
விறைப்புத்தன்மை பிரச்சனைக்குப் பின் இதய பிரச்சனை முக்கிய காரணம் என்றால், ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த கொழுப்பு அளவைக் சிறிது குறைக்க உதவும். இதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

எச்சரிக்கை
ஆப்பிள் சீடர் வினிகர் உடல் பருமன், சர்க்கரை நோய் அல்லது இதய பிரச்சனைகளை சரிசெய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது ஒரு நிவாரணி போலவே செயல்படுகிறது மற்றும் இது ஓரளவிற்கே உதவக்கூடும். எனவே அதை முழுமையாக நம்புவது எதற்கும் உதவாது. மேலும், நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்ள விரும்பினால், மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக எக்காரணம் கொண்டும் நீங்கள் அன்றாடம் எடுக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை:
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, தினமும் இரண்டு வேளை குடியுங்கள். இல்லாவிட்டால், ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் உட்கொள்ளும் சாலட்டுகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சீடர் வினிகரை எடுக்காதீர்கள். ஏனெனில் அதில் அமிலம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு 1-2 டீஸ்பூன் அளவுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அது உங்கள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயை சேதப்படுத்திவிடும்.



Click it and Unblock the Notifications
