Latest Updates
-
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா?
தீபாவளி பண்டிகையின் போது உங்கள் நுரையீரலை பாதுகாக்கணுமா? அப்ப இத செய்யுங்க...
இந்த தீபாவளியில் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருங்க உதவக்கூடிய சில குறிப்புகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்...
தீப திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. வீட்டு அலங்காரம் முதல் என்ன பலகாரம் செய்யலாம் என்பது வரை அனைவரும் திட்டமிட தொடங்கியிருப்போம். அதேபோல், நண்பர்கள், உறவினர்கள் வருகைக்காகவும், ஒன்றாக இணைந்து தீபாவளியை கொண்டாடவும் ஆவலாக காத்திருப்போம். அப்படிப்பட்ட, கோலாகல பண்டிகையான தீபாவளி தினத்தன்று தான், பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றதாகவும், இராவணனைக் கொன்ற பிறகு ராமர் அயோத்திக்கு சென்ற தினமாகவும், வாமனன் பலியை தோற்கடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தினத்தை, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும், அறியாமைக்கு எதிரான அறிவின் வெற்றியாகவும், தீமைக்கு எதிரான நன்மையாகவும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் உண்டு, பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக குடும்பத்துடன் கொண்டாடுவர். மக்களின் மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, பட்டாசு என்பது மட்டும் மகிழ்ச்சியைத் தாண்டி மாசு என்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. பட்டாசு நிறைய வெடிப்பதால் அன்றைய தினம் நாடு முழுவதும் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். இதனால் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் பெரும் பிரச்சனையாக இருக்கக்கூடும். சுவாச பிரச்சனை இல்லாதவர்களுக்கு கூட இந்த பட்டாசு மாசு சில பிரச்சனை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த தீபாவளியில் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருங்க உதவக்கூடிய சில குறிப்புகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்...
ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பட்டாசு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் நச்சுப் புகை காரணமாக, காற்றில் உள்ள துகள்களின் உள்ளடக்கம் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறுகிறது. இது ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இப்போது தீபாவளியின் போது காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை குறித்து காண்போம்.

குறிப்பு 1
வீட்டிற்குள் விளக்கு ஏற்றுவதைத் தவிர்ப்பதன் மூலம் வீட்டின் உட்புற காற்று மாசுபாட்டைத் தடுக்கலாம்.

குறிப்பு 2
எல்.ஈ.டி விளக்குகள், மாசு துகள்களை வெளியிடுவதில்லை என்பதால், அவற்றை ஒளி ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம். சுற்றுச்சூழல் நட்பாக இருக்கக்கூடிய விளக்குகளை, உங்கள் வீடுகளை ஒளிரச் செய்ய பயன்படுத்தவும். இருப்பினும், அதிகப்படியான வெளிச்சம் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதை மறவாதீர்கள்.

குறிப்பு 3
தீபாவளியுடன் தொடர்புடைய காற்று மாசுபாட்டைக் குறைக்க சிறந்த வழி, பசுமை பட்டாசுகள். அத்தகைய பட்டாசுக்ள இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த பட்டாசுகள் காற்றில் உள்ள துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைக்கின்றன.

குறிப்பு 4
பட்டாசு புகையால் ஏற்படும் மூச்சுத்திணறல் போன்றவற்றைத் தவிர்க்க, உங்கள் வீட்டின் கதவுகளை அடைத்து ஏசி பயன்படுத்துங்கள். இது மாசடைந்த காற்றை சுத்திகரித்து உள்ளே அனுமதிக்கும்.

குறிப்பு 5
மக்கள் அதிகமாக பட்டாசு வெடிக்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். அப்படியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லுங்கள். அதுவும் நுரையீரலில் புகை நுழைவதைத் தடுக்கும் மாசு எதிர்ப்பு முக கவசங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

குறிப்பு 6
இந்தியாவின் பெரிய நகரங்களில் மோசமான காற்றின் தரம் இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் காற்று சுத்திகரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சாதனங்கள் உட்புற காற்றில் உள்ள மாசுகள், நச்சுகள் மற்றும் ஒவ்வாமைகளை நீக்குகின்றன.

குறிப்பு 7
உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் சுவாசக் கோளாறு இருந்தால், உங்கள் அவசர கால மருந்துகள், நெபுலைசர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை கையில் தயார் நிலையில் வைத்திருக்கவும். மேலும், உங்கள் மருந்துகளை தவறாமல் நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு 8
ஆஸ்துமா அல்லது சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எப்பொழுதும் இன்ஹேலரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். கூடுதலாக, அவர்கள் நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீருடன் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பு 9
தீபாவளி தினத்தன்று உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின் போது ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டியிருக்கும். அன்றைய தினம் மாசடைந்த காற்று அதிகம் இருக்கும் என்பதால் நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கிய குறிப்பு
ஒருவேளை உங்களுக்கு தொடர் இருமல், மூச்சுத்திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications