For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பரவி வரும் தவறான கருத்துக்கள் மற்றும் கட்டுக்கதைகள்!

கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும், இருமலின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற சில வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கிய போதும் மற்றும் சில கட்டுக்கதைகள் சிகிச்சை அல்லது தடுப்

|

உலகில் அண்டார்டிகா தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அமெரிக்காவில், பயணம் எதுவும் மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இல்லாமல் இருந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இத்தாலி மற்றும் தென்கொரியா கொரோனா பாதித்த பல வழக்குகளை பார்த்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

Coronavirus: WHO Dispels A Few Myths And Misconceptions

இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. விஞ்ஞானிகள் இந்த பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்க ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் இந்த வைரஸ் பரவுவது குறித்த தவறான கருத்துக்களை களைந்து வருகின்றனர்.

MOST READ:கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும், இருமலின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற சில வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கிய போதும் மற்றும் சில கட்டுக்கதைகள் சிகிச்சை அல்லது தடுப்பு முறை என்ற பேரில் சுற்றி வருகின்றன.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

உலக சுகாதார நிறுவனம் இத்தகைய கட்டுக்கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை நாம் இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம். இவற்றைப் பற்றி அறிந்து கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1

கட்டுக்கதை 1

உப்பு நீர் பயன்படுத்துவது கொரோனாவை தடுக்கும்.

உண்மை:

உப்பு நீர் கொண்டு மூக்கை கழுவுவதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சாதாரண சளி ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற இந்த வழிமுறை உதவலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் மேலும் கூறியுள்ளது. ஆனால் சுவாச தொற்று பரவாமல் தடுக்க இந்த உத்தி உதவுவதில்லை என்பது மட்டும் உறுதி.

கட்டுக்கதை 2

கட்டுக்கதை 2

ஆன்டி-பயாட்டிக் மருந்துகள் சிறந்த தீர்வைத் தரும்.

உண்மை:

கிருமி தொற்று பாதிப்பைப் போக்க ஆன்டி-பயாட்டிக் மருந்துகள் உதவும். ஆனால் இந்த வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது இதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

கட்டுக்கதை 3

கட்டுக்கதை 3

ஹாண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால் வைரஸ் கொல்லப்படுகிறது.

உண்மை:

ஹாண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால் தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளைக் கழுவது சிறந்த முறையாகும். ஆல்கஹால் அடிப்படை கொண்ட மருந்துகள் ஓரளவிற்கு நன்மை அளிக்கும்.

கட்டுக்கதை 4

கட்டுக்கதை 4

பூண்டு உட்கொள்வதால் தொற்று பாதிப்பு தடுக்கப்படும்.

உண்மை:

பூண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் மறுக்கவில்லை. ஆனால் பூண்டு உட்கொள்வதால் தொற்று பாதிப்பு தடுக்கப்படுகிறது என்பது உண்மை அல்ல. ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கொரோனா வைரஸ் குறித்த அபாயம் தடுக்கப்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: WHO Dispels A Few Myths And Misconceptions

Here are some myths and misconceptions about coronavirus. Read on...
Desktop Bottom Promotion