Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..!
Heatwave Alert: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெப்பஅலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இப்படி கொளுத்தும் கோடை வெயில் நேரத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், உடல் முழுவதும் மூடிக் கொண்டு செல்லுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் நிறைய பேர் உடல் சூடு, நீரிழப்பு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கண் எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றால் சிரமப்படக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உணவுகள் பெரிதும் உதவி புரியும்.
இப்படி உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம், உடல் சூடு குறைவதோடு, உடலும் குளிர்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும். இதுக்குறித்து சித்த மருத்துவரான டாக்டர் ஜெயரூபா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் சூட்டைக் குறைக்க உதவும் 3 சிறந்த உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார். அந்த உணவுகள் பின்வருமாறு:
1. வெள்ளரிக்காய்
"வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இதில் கலோரிகளும் இல்லை. எனவே இதை உட்கொள்ளும் போது, அது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்" என்று டாக்டர் கூறினார். ஆகவே எளிய வழியில் உடல் சூட்டைக் குறைக்க நினைத்தால் வெள்ளரிக்காயை வாங்கி சாப்பிடுங்கள். அதுவும் அதை வெறுமனே சாப்பிட பிடிக்காவிட்டால், சாலட்டுகளுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.
2. இளநீர்
"இளநீர் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் உடலை நீரேற்றத்துடனுன் வைத்துக் கொள்ளவும் உதவும். முக்கியமாக இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக உள்ளன. இதனால் இது உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்" என்று டாக்டர் கூறினார். எனவே கொளுத்தும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைத்தால், தாகத்தைத் தணிக்க கண்ட கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் கார்பனேட்டட் பானங்களை வாங்கி குடிக்காமல், இளநீரை வாங்கி குடியுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும், உடல் சூடும் குறையும்.
3. நன்னாரி
"கோடையில் உடல் சூட்டைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பானம் தான் நன்னாரி சர்பத். இந்த நன்னாரி சர்பத் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கண் எரிச்சல் போன்றவற்றையும் தடுக்க உதவும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! கோடையில் உடல் சூட்டினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், சித்த மருத்துவர் கூறிய இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் உடல் சூடும் குறையும், உடலும் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
