Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க..
Heatwave Alert: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு உள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலம் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.

அதுவும் இந்த நாட்களில் வெப்பநிலையானது 45°C முதல் 52°C வரை உயரக்கூடும் என்பதால், நீரிழப்பு, வெப்ப சோர்வு மற்றும் வெப்ப வாதம் போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இனி அடுத்த ஒரு மாத காலத்திற்கு மக்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், முடிந்த வரை வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி மக்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள நீரை அதிகம் அருந்துவதோடு, ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற பானங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக தேவைப்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும். அதுவும் வெளியே செல்லும் போது காட்டன் துணிகளை அணிவதோடு, தலையையும் ஒரு காட்டன் துணியால் மூடிக் கொண்டு செல்லவும் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக இந்த கடுமையான வெப்ப அலை நாட்களில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்படியான காலகட்டத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும் ஒருசில குளிர்ச்சி பண்புகளைக் கொண்ட உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீழே உடல் சூட்டைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. இளநீர்
உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் இளநீர். இந்த இளநீரில் பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய உப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இது வியர்வை மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும் வெயில் காலங்களில் மதிய வேளையில் சந்திக்கும் உடல் சோர்வை தடுக்க உதவுகிறது.
2. வெள்ளரிக்காய்
கோடைக்காலத்தில் தான் வெள்ளரிக்காய் சீசன் தொடங்கும். இந்த வெள்ளரிக்காய் 90 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நினைத்தால், வெள்ளரிக்காயை அதிகம் உட்கொள்வது நல்லது. முக்கியமாக இதில் கலோரிகள் குறைவு என்பதால், கணக்கில்லாமல் சாப்பிடலாம். அதோடு இது செரிமானத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வெள்ளரிக்காயை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.
3. தர்பூசணி
மிகச்சிறந்த ஒரு ஜூஸியான கோடைக்கால பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியிலும் 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கொளுத்தும் கோடையில் இழந்த திரவங்களை மற்றும் எலக்ட்ரோலைட்டுக்களை எளிதில் மீட்டெடுக்க நினைத்தால் தர்சணியை உட்கொண்டாலே போதும். மேலும் தர்பூசணியில் லைகோபைன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்திருப்பதால், இதை அதிகம் உட்கொள்ளும் போது சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
4. புதினா
புதினா குளிர்ச்சிப் பண்பு நிறைந்த மூலிகை என்பதை அனைவரும் அறிவோம். இப்படிப்பட்ட புதினாவை தினசரி உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வரும் போது, உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் இந்த புதினா மூளையை ஏமாற்றி ஒருவரைக் குளிர்ச்சியாக உணர வைக்கும் திறன் கொண்டது. ஆகவே கோடையில் இதை சட்னி, ஜூஸ், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
5. தயிர்
தயிர் உடலை குளிர்ச்சியாக்குவது மட்டுமின்றி, புரோபயோடிக் நிறைந்த உணவுப் பொருள் என்பதை அனைவரும் அறிவோம். மேலும் கோடையில் பெரும்பாலானோரின் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளும் கூட. இந்த தயிரை கோடைக்காலத்தில் தினமும் உட்கொள்ளும் போது, அது செரிமானத்தை சீராக வைத்து குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



