Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
கொரோனா வைரஸ், இன்புளூயன்சா - இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காமல் இருப்பதால், இது மிகவும் பெரிய மற்றும் அச்சமளிக்கக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது.
கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இதுவரை 1,00,000-த்திற்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறப்பு விகிதம் 3000-ஐ தாண்டியுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காமல் இருப்பதால், இது மிகவும் பெரிய மற்றும் அச்சமளிக்கக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது. இதனால் பல கட்டுக்கதைகளும், தவறான கருத்துக்களும் மக்களிடையே பரவி, மக்களை குழப்புகிறது. அதில் முதன்மையான ஒன்று- இது இன்புளூயன்சா அல்லது கொரோனா வைரஸ்? என்பது தான்.

அறிகுறிகள்
வேகமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நோயின் அறிகுறிகள் சளி, இருமல் மற்றும் அதிகமான காய்ச்சலுடன் தொடங்குவது தான். இது இன்புளூயன்சா தொற்றுக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளது. தற்போது இன்புளூயன்சா வைரஸும் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது. எனவே ஒருவருக்கு இருப்பது இன்புளூயன்சா தொற்றா அல்லது கொரோனா வைரஸ் தொற்றா என்பதை சொல்வதே உண்மையிலேயே மிகவும் கடினம் தான்.

இரண்டும் ஒத்தவையா?
தொடக்கத்தில், கோவிட்-19 மற்றும் இன்புளூயன்சா இரண்டும் வைரஸ் மூலம் பரவும் நோய்த்தொற்றுக்கள் ஆகும். மேலும் இவை மனிதனிடமிருந்து மனிதன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகின்றன. பொதுவாக இருமல் மற்றும் சளி மூலம் மற்றவருக்கு பரவுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட்-19 மற்றும் இன்புளூயன்சா இரண்டும் தொற்று வைரஸ்கள். இவை சுவாச நோயை உண்டாக்குகின்றன. மேலும் குமட்டல், மூச்சுத் திணறல், மார்பு நெரிசல், அதிகப்படியான காய்ச்சல் மற்றும் தீவிர நிலையில் நிமோனியா போன்றவற்றை உண்டாக்கும்.

வித்தியாசம்
கொரோனா வைரஸ் மற்றும் இன்புளூயன்சா வைரஸ் ஒத்த அறிகுறிகளைக் காட்டினாலும், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. கோவிட்-19, 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நாவல். இதுவரை மனிதர்களிடம் காணப்படாத ஒரு வகை வைரஸ். இதோடு ஒப்பிடும் போது, இன்புளூயன்சா வைரஸால் ஏற்படும் காய்ச்சல் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் கூறுவது...
கொரோனா வைரஸானது, இன்புளூயன்சா மற்றும் ஒத்த வைரஸ்களை விட வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இன்புளூயன்சா அறிகுறிகள்
100.5 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தீவிர உடல் சோர்வு, கடுமையான தசை அல்லது உடல் வலிகள், வறட்டு இருமல் மற்றும் சளி உள்ளிட்டவை இன்புளூயன்சா அறிகுறிகள் அறிகுறிகளாகும். பல நேரங்களில் இவை மிகவும் தீவிரமானதாக இருக்கும்.

சோதனை ஒன்றே வழி
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளும் கீடுமையான சளி அல்லது காய்ச்சலைத் தான் கொண்டிருக்கும். எனவே கொரோனா வைரஸுக்கும், இன்புளூயன்சாவுக்கும் இடையிலான வித்தியாசத்தை உண்மையில் சொல்வது கடினமாக இருக்கும். சோதனைகள் மூலம் மட்டுமே கொரோனா வைரஸா அல்லது இன்புளூயன்சா தொற்றா என்பதை அடையாளம் காண முடியும்.

நாட்கள் வித்தியாசம்
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) படி, சளி மற்றும் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்கியிருந்தால், அந்த வைரஸ் பாதித்தவுடன் அதற்கான அறிகுறிகள் வெளிப்பட 2-3 நாட்கள் எடுக்கும். அதுவே கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், அதற்கான அறிகுறிகள் தென்பட 2-14 நாட்கள் எடுக்கும்.



Click it and Unblock the Notifications
