For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...

|

இன்று எங்கு பார்த்தாலும் கொரோனா குறித்த பேச்சாகத் தான் உள்ளது. இதற்கு கொரோனாவினால் நாம் இதுவரை இழந்த உயிர்களும், இன்னும் அதற்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததும் தான் காரணம். உலகெங்கிலும் பரவியுள்ள இந்த கொடிய வைரஸால் இதுவரை 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைக் குறி வைக்கும் வைரஸாகும். இந்த வைரஸ் ஒருவரது நுரையீரலில் நுழைந்துவிட்டால், அது ஒட்டுமொத்த நுரையீரலையுமே அரித்துவிடக்கூடியது. பொதுவாக ஒருவருக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அப்படித் தான் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றும்.

MOST READ: இந்த காரணத்திற்காக தான் அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியிருக்காரு போல...

தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், ஒவ்வொருவரும் அந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவான அறிகுறிகள்

பொதுவான அறிகுறிகள்

புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் மற்றும் காய்ச்சல், மூக்கு ஒழுகல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகளை சந்திக்கக்கூடும். கடுமையான சந்தர்பங்களில், நோயாளிகள் வைரல் நிமோனியா மற்றும் சுவாச செயலிழப்பை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் நோயாளிகள் தசை பலவீனம் மற்றும் தலைவலி போன்ற நரம்பியல் அறிகுறிகளையும் சந்திக்கலாம்.

புதிய அறிகுறி

புதிய அறிகுறி

தற்போது அமெரிக்காவின் நரம்பியல் நிபுணர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகளுள் சில சமயங்களில் என்செபலோபதி, அட்டாக்ஸியா மற்றும் பல நரம்பியல் அறிகுறிகளும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் பல நோயாளிகள் கடுமையான சோர்வு, ட்ரைஜீமினல் நியூரால்ஜியா, முழுமையான அல்லது கடுமையான அனோஸ்மியா மற்றும் மயால்ஜியாவையும் தெரிவிக்கின்றனராம்.

மத்திய நரம்பு மண்டலத்தை குறி வைக்கும் கொரோனா

மத்திய நரம்பு மண்டலத்தை குறி வைக்கும் கொரோனா

மருத்துவ வைராலஜி ஜர்னலில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ்கள் எப்போதுமே சுவாசக் குழாயுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், அவை நரம்பியல் நோய்களைத் தூண்டும் மத்திய நரம்பு மண்டலத்திலும் படையெடுக்கக்கூடும் என்பதையும் அதிகரிக்கும் சான்றுகள் காட்டுகின்றன'. மேலும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட பல இளைஞர்கள் சில நேரங்களில் COVID-19 க்கு ஏன் அடிபடுகிறார்கள் என்ற கேள்விக்கு வேண்டுமானால், இது பதிலளிக்கலாம்.

முந்தைய ஆய்வுகள்

முந்தைய ஆய்வுகள்

முந்தைய பல ஆய்வுகள், கொரோனா வைரஸ்கள் மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமித்து மூளையில் உள்ள நரம்பு செல்களில் சேதத்தை ஏற்படுத்துவதாக காட்டுகின்றன. 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மூளை செல்களுக்குள் வைரஸ் துகள்களைக் கண்டறிந்தன. இதில் மூளை செல்கள் தான் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இந்த வைரஸ்கள் எவ்வாறு மூளைக்குள் நுழைகிறது என்பது குறித்து நிபுணர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. வேண்டுமெனில், அது சுவாச அமைப்பு மூலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இப்போது கொரோனாவின் சில நரம்பியல் அறிகுறிகளைக் காண்போம்.

மயால்ஜியா/தசை வலி

மயால்ஜியா/தசை வலி

இது அடிப்படையாக ஒரு தசை வலி ஆகும். கொரோனா ஒருவரைத் தாக்கியிருந்தால், உடலின் எந்த பகுதியிலும் தசைகள் சிவந்து இருத்தல் மற்றும் வீக்கம் ஏற்படலாம். இது கொரோனாவின் பொதுவான அறிகுறியாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், மூட்டு வலி மற்றும் தசைநாண்களின் வலி பற்றியும் புகாரளிக்கலாம்.

என்செபலோபதி

என்செபலோபதி

கொரோனாவின் அரிய அறிகுறிகளுள் ஒன்று யதார்த்தத்தில் மாறுபட்ட உணர்வு மற்றும் குழப்பம், சோம்பல் மற்றும் சில நேரங்களில் கோமா ஆகியவை. இது கடுமையான நெக்ரோடைசிங் ஹெமோர்ஹாகிக் என்செபலோபதி காரணமாக இருக்கலாம், இது தான் யதார்த்தமான உணர்வுகளில் மாற்றத்தைத் தூண்டுகிறது. 2020 மார்ச் 31 அன்று, டெட்ராய்டில் உள்ள ஹென்றி ஃபோர்டு ஹெல்த் சிஸ்டத்தில் சிகிச்சை பெற்ற 58 வயது பெண் ஒருவர் கோவிட் -19 உடன் இணைக்கப்பட்ட என்செபலிடிஸின் முதல் வழக்காக ஆனார்.

குய்லின்-பார் நோய்க்குறி

குய்லின்-பார் நோய்க்குறி

சீனாவில், 61 வயதான ஒரு பெண் குய்லின்-பார் நோய்க்குறி என்ற ஆட்டோ இம்யூன் நியூரோபதி நிலை அறிகுறிகளுடன் வந்தார். இந்த நிலையின் அறிகுறிகளில் காலில் பலவீனம் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவை அடங்கும். இந்த பெண்ணுக்கு காய்ச்சல், இருமல், மார்பு வலி என்று எதுவும் இல்லை. ஆனால் அப்பெண்ணுக்கு தசை பலவீனம் மற்றும் டிஸ்டல் அரேஃப்ளெக்ஸியா இருந்தது, அது காலப்போக்கில் மோசமாகிவிட்டது. வறண்ட இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனாவின் பொதுவான சில அறிகுறிகளும் நாளடைவில் அவருக்கு ஏற்பட்டது.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

கொரோனாவில் நரம்பியல் அறிகுறிகள் அரிதானவை என்று நிபுணர்கள் கிட்டத்தட்ட ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் இந்த அறிகுறிகள் நோயாளிகளிடையே தெரிய வரும். ஆனால் அது தெரியவில்லை. எனவே மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், இதுப்போன்ற அறிகுறிகளிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் நோயாளிகள் வாசனை இழப்பு மற்றும் சுவை தெரியாமல் இருப்பது போன்ற பிற அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம். இன்னும் தீவிர நிலையில் வலிப்பு, முதுகெலும்பு நோய் மற்றும் மூளைத் தண்டுவட நோய் போன்ற அறிகுறிகளும் தெரிய வரலாம்.

மேரிலாந்தின் பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசனின் சில நிபுணர்கள், ‘மூளைத் தண்டு செயலிழப்பு கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுவாச இயக்கி இழக்க நேரிடும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

COVID-19 Symptoms May Also Include Confusion And Altered Sense Of Reality

COVID-19 symptoms may sometimes also include neurologic signs like encephalopathy and myalgia. Read on to know more about these uncommon signs.
Story first published: Thursday, April 9, 2020, 17:58 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more