Latest Updates
-
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
தற்போது பெரும்பாலானோரின் வீட்டில் குக்கர் சாதம் தான் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையிலேயே குக்கர் சாதம் நல்லதா அல்லது கெட்டதா?
இந்தியாவின் மிகவும் முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இந்தியர்களால் அரிசி சாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியாது. இந்த அரிசி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலவாறு சமைத்து உண்ணப்படுகின்றன. பாரம்பரியமாக அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, அரிசி வெந்ததும் அதிகப்படியான நீரை வடிகட்டிவிட்டு சாப்பிடுவார்கள். நம் முன்னோர்கள் எல்லாம் அரிசியை அப்படி தான் சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் காலத்திற்கு ஏற்ப மக்களும் மாற தொடங்கியுள்ளனர். தற்போது நமது வீட்டு வேலைகளை எளிதாகும் வகையில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அரிசியை எளிதில் மற்றும் விரைவில் சமைக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் குக்கர்.

தற்போது பெரும்பாலானோரின் வீட்டில் குக்கர் சாதம் தான் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையிலேயே குக்கர் சாதம் நல்லதா அல்லது கெட்டதா? இக்கட்டுரையில் குக்கர் சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா, கெட்டதா என்பதைக் காண்போம்.

குக்கர் சாதம் Vs வடித்த சாதம் - இவற்றில் எது நல்லது?
புள்ளிவிவரங்களின் படி, குக்கரில் அரிசியை சமைக்கும் போது, அரிசியின் அமைப்பு காரணமாக குக்கர் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். மறுபுறம் பாரம்பரியமாக சமைத்து சாப்பிடும் வடித்த சாதம் மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் உள்ள ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்து நீக்கப்படுவதால், இதில் கொழுப்புக்கள் குறைவு. ஸ்டார்ச் தான் ஒருவரது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணம். நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சத்துக்களும் குறைவான அளவிலேயே உள்ளன.

குக்கர் சாதத்தின் ஆரோக்கிய நன்மைகள்
குக்கர் சாதத்தை சாப்பிடுவதால் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. அந்த நன்மைகள் பின்வருமாறு:
* குக்கர் சாதம் செரிமானத்திற்கு நல்லது.
* குக்கரில் அரிசியை சமைக்கும் போது புரோட்டீன், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
* அதிக அழுத்தத்தில் சாதத்தை சமைக்கும் போது, அரிசியில் உள்ள பூஞ்சை மற்றும் பிற பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

முடிவு
புள்ளி விவரங்களின் படி, வடித்த சாதத்தைக் காட்டிலும், குக்கர் சாதம் அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது. அதற்காக வடித்த சாதம் குறைவான நன்மைகளை வழங்குகிறது என்று கூற முடியாது. அதுவும் குக்கர் சாதத்திற்கு இணையான நன்மைகளை வழங்குகிறது. ஆனால் என்ன சர்க்கரை நோயாளிகள் குக்கரை சாதத்திற்கு பதிலாக வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது. அதேப் போல் உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களும் வடித்த சாதம் சாப்பிடுவதே நல்லது. சரி, நீங்கள் உங்கள் வீட்டில் எந்த மாதிரியான சாதம் சாப்பிடுவீர்கள் என்பதை எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications