For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் குண்டா இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்கு... ஜாக்கிரதை...!

எடை அதிகரிப்பு ஒரு முக்கியமான பிரச்சனையாகும். ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உடல்நிலை பல காரணங்களால் மோசமடைகிறது மற்றும் அவற்றில் மிக முக்கியமானது கூடுதல் எடை.

|

எடை அதிகரிப்பு ஒரு முக்கியமான பிரச்சனையாகும். ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உடல்நிலை பல காரணங்களால் மோசமடைகிறது மற்றும் அவற்றில் மிக முக்கியமானது கூடுதல் எடை. எடை அதிகரிப்பு ஒரு அச்சுறுத்தலாகும், ஏனெனில் இது ஒரு நபரின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். எனவே, பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் எப்போதும் எடையை முதலில் கட்டுக்குள் கொண்டு வர அறிவுறுத்துகிறார்கள்.

Common Diseases Associated With Weight Gain in Tamil

எடை அதிகரிப்புடன் தொடர்புடைய பல நோய்கள் உள்ளன மற்றும் நோய்களுக்கும் எடை அதிகரிப்பு நிலைக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், இதனால் எடை நிர்வாகத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது ஆரோக்கியத்தை மோசமடையாமல் காப்பாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைப் 2 நீரிழிவு நோய்

டைப் 2 நீரிழிவு நோய்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 10 பேரில் 8 பேர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்கள் என்று அமெரிக்க தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிறுவனம் கூறுகிறது, மேலும் நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தால், உங்கள் உடல் எடையில் 5 முதல் 7 சதவீதம் வரை குறைக்க வேண்டம் என்று பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் வழக்கமான உடல் உழைப்பு டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

அதிக எடை மற்றும் உயர் இரத்த அழுத்தம் இடையே உள்ள தொடர்பு ஆராய்ச்சியாளர்களிடையே ஆர்வமுள்ள பகுதியாகும். இரத்த அழுத்தம் மற்றும் எடை இடையே நேரடி தொடர்பு உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எப்பொழுதும் முதலில் உடல் எடையை குறைக்கவும், அவர்களின் தினசரி வழக்கத்தில் உடல் பயிற்சியை சேர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MOST READ: சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா? சர்க்கரை நோய் பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்...!

இதயப் பிரச்சினைகள்

இதயப் பிரச்சினைகள்

உடல் பருமன் மற்ற இருதய ஆபத்து காரணிகளிலிருந்து சுயாதீனமாக இருதய நோய் மற்றும் இருதய நோயால் ஏற்படும் இறப்புக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி ஆய்வுகள் கூறுகின்றன. உடல் பருமன் கார்டியோவாஸ்குலர் நோய் அபாயத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், ஹீமோடைனமிக்ஸை பாதிக்கும் மற்றும் இதய அமைப்பை மாற்றக்கூடிய உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியது என்று ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. அதிக எடை மற்ற ஆபத்து காரணிகள் இல்லாவிட்டாலும் கூட இதய நோய்க்கான வலுவான காரணியாக இருக்கும்.

மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியல் மற்றும் பிற புற்றுநோய்கள்

மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியல் மற்றும் பிற புற்றுநோய்கள்

ஆய்வின்படி, மார்பக புற்றுநோய் (மாதவிடாய் நின்ற பின்), பெருங்குடல்-மலக்குடல், எண்டோமெட்ரியம், கருப்பை, கணையம், சிறுநீரகம், பித்தப்பை, இரைப்பை இதயம், கல்லீரல், உணவுக்குழாய் (அடினோகார்சினோமா), மெனிங்கியோமா, தைராய்டு மற்றும் மல்டிபிள் மைலோமா ஆகியவை அதிக எடையுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளன.

கொழுப்பு கல்லீரல் நோய்

கொழுப்பு கல்லீரல் நோய்

பெயரிலேயே உள்ளது போல, கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு அதன் இயல்பான அளவை தாண்டும் போது ஏற்படுவது. பொதுவாக கல்லீரலில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அளவு உங்கள் கல்லீரலின் எடையில் 5 முதல் 10% ஆக அதிகரிக்கும் போது, ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் ஏற்படுகிறது. ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் ஏற்பட பொதுவான காரணமாக இருந்தாலும், உடல் பருமன் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு காரணமாக உள்ளது.

MOST READ: இந்த 6 ராசி ஆண்கள் ரொமான்டிக்காக காதலிப்பதில் மன்னர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

எடை இழப்பு நேரடியாக தூக்கத்தில் மூச்சுத்திணறலுடன் தொடர்புடையது, இது ஒரு நபரின் சாதாரண தூக்க முறை தூக்கத்தின் சுழற்சியில் தொந்தரவு செய்யப்படும் ஒரு நிலை. இந்த நிலையில், ஒருவருக்கு 8 மணி நேரம் தூங்கினாலும் போதுமான தூக்கம் வராது. போதுமான தூக்கமின்மை எடையை அதிகரிக்கிறது, இதனால் தூக்கத்திற்கும் எடைக்கும் இடையிலான தொடர்பின் சுழற்சியை நிறைவு செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Diseases Associated With Weight Gain in Tamil

Read to know weight gain leads to which serious health issues.
Story first published: Wednesday, May 11, 2022, 11:48 [IST]
Desktop Bottom Promotion