For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் புதிய 'நிமோனியா' - சீனா எச்சரிக்கை

கஜகஸ்தானில் இருக்கும் சீன தூதரகம் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 'அறியப்படாத நிமோனியா' பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

|

உலகமே கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட முயற்சித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் பலரும் கொரோனா வைரஸை அழிப்பதற்கு தங்களால் முடிந்த வரை தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் ஏற்கனவே இருக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசியால் கொரோனாவை விரட்ட முடியுமா என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை, இதற்கான சரியான விடை கிடைக்கவில்லை.

China Warns of ‘Unknown Pneumonia’ Deadlier Than COVID-19

இந்நிலையில் மக்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சமூக இடைவெளியுடனும், தனி மனித சுகாதாரத்தைப் பின்பற்றியும் தங்களைத் தாங்களே மாற்றி வாழ பழகி வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் ஒரு எச்சரிக்கையை வியாழக்கிழமை விடுத்துள்ளது.

MOST READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புபோனிக் பிளேக் - இது 50 மில்லியன் மக்களை கொன்றது என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறியப்படாத நிமோனியா

அறியப்படாத நிமோனியா

கஜகஸ்தானில் இருக்கும் சீன தூதரகம் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 'அறியப்படாத நிமோனியா' பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறியப்படாத நிமோனியாவால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் கொரோனா வைரஸை விட அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் சீன அதிகாரிகள் அங்குள்ள மக்களை விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில் கஜகஸ்தானில் உள்ள சுகாதாரத் துறைகள் நிமோனியா வைரஸ் கோவிட்-19 வைரஸ் உடன் தொடர்புடையதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த வைரஸை அடையாளம் காண முடியவில்லை.

MOST READ: கொரோனாவை அடுத்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய வைரஸ்!

புதிய நிமோனியாவின் பலி எண்ணிக்கை

புதிய நிமோனியாவின் பலி எண்ணிக்கை

இந்த அறியப்படாத நிமோனியாவால், இந்த வருடத்தின் ஆறு மாத காலத்தில் சுமார் 1,772 பேர் இறந்துள்ளனர். அதில் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 628 பேர் இறந்துள்ளனர். மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை மட்டும், சுமார் 32,000 நிமோனியா வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 451 இறப்புகளும் உள்ளன. ஒரு சீன குடிமகனும் இந்நோயால் பாதிக்கப்பட்டார்.

தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த புதிய நோயின் இறப்பு விகிதம் கொரோனா வைரஸை விட அதிகமாக உள்ளது. உள்ளூர் அறிக்கைகளை மேற்கோள் காட்டி தூதரக வலைத்தளம், அதிராவ் மற்றும் அக்டோப் மாகாணங்கள் மற்றும் ஷிம்கென்ட் நகரம் போன்றவற்றில் ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து நிமோனியா வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டன.

MOST READ: கொரோனாவின் வேறு புதிய 3 அபாய அறிகுறிகள்!

கொடிய நோய் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

கொடிய நோய் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

கஜகஸ்தானி அதிகாரிகளும், ஊடகங்களும், இது நிமோனியா என்று மட்டுமே கூறியுள்ளன. இதற்கிடையில் குளோபல் டைம்ஸ் கருத்துப்படி, கஸ்கஸ்தானின் சுகாதார அமைச்சர் புதன்கிழமை அன்று நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று கூறினார்.

அதோடு உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் துல்லியமான தகவல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என்றும் அமைச்சர் வெளிப்படையாக கூறினார். மேலும் வழக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவது அவசியமில்லை என்றாலும், பொதுமக்கள் நிலைமையை அறிந்து கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

MOST READ: இந்த கொரோனா அறிகுறிகளை சந்திப்பவர்களுக்கு முழு நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம்: ஜாக்கிரதை!

கோவிட்-19

கோவிட்-19

தற்போதைய சுகாதார நெருக்கடியால் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான அறிகுறி எதுவும் காட்டவில்லை. மாறாக, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 545,481 இறப்புகள் உட்பட 11,874,226 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தான் உலக சுகாதார அமைப்பும் கூறுகிறது.

இந்தியாவிலும் கொரோனா வழக்குகள் படிப்படியாக ஆபத்தான அளவில் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்கள் தானாக முன்வந்து லாக்டவுனை அறிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரை 7,93,802 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. கொரோனாவால் சுமார் 21,604 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சக வலைத்தளத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: ஒருவருக்கு கொரோனா வந்துட்டா, இந்த பிரச்சனையை வாழ்நாள் முழுக்க சந்திக்க வாய்ப்பிருக்காம்...

முடிவு

முடிவு

உலகமே வைரஸ்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது உலகம் அழிந்து கொண்டிருக்கிறது எனும் எண்ணம் தான் பலரது மனதிலும் தோன்றும். இதுவரை கொரோனாவால் அழிந்து வந்த உலகம், அடுத்ததாக அறியப்படாத நிமோனியாவால் அழிய தயாராகிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து, தனிமனித சுகாதாரத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

China Warns of ‘Unknown Pneumonia’ Deadlier Than COVID-19

The Chinese Embassy in Kazakhstan on Thursday warned that an "unknown pneumonia" deadlier than the coronavirus was sweeping through the country.
Desktop Bottom Promotion