For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி தலைச்சுத்துதா? எதுக்குன்னே தெரியலையா? அப்ப இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...

தலைச்சுற்றல் என்பது ஒரு நோய் அல்ல. உண்மையில், இது பல்வேறு உடல் கோளாறுகளின் அறிகுறியாகும். உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுமாயின், அதற்கு கவலைப்பட வேண்டாம். இதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.

|

தலைச்சுற்றல் என்பது ஒருவித மயக்க உணர்வுடன், உடல் பலவீனத்தால், நிலைதடுமாறும் ஒரு நிலையாகும். சிலருக்கு தலைச்சுற்றலுடன் குமட்டலும் ஏற்படலாம். தலைச்சுற்றல் என்பது ஒரு நோய் அல்ல. உண்மையில், இது பல்வேறு உடல் கோளாறுகளின் அறிகுறியாகும். உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுமாயின், அதற்கு கவலைப்பட வேண்டாம். இதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. அதுவும் எப்போதாவது தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அடிக்கடி மீண்டும் மீண்டும் கடுமையான மற்றும் விவரிக்க முடியாத அளவில் தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Causes Of Dizziness That Need Immediate Medical Attention

தலைச்சுற்றல் பல உடல்நல பிரச்சனைகளின் அறிகுறியாக இருப்பதால், ஒருவருக்கு தலைச்சுற்றல் எப்போதிருந்து ஏற்படுகிறது மற்றும் அத்துடன் சந்திக்கும் வேறு அறிகுறிகளைக் கொண்டு, அதற்கான காரணத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைச்சுற்றலுக்கான காரணங்கள்

தலைச்சுற்றலுக்கான காரணங்கள்

ஒருவருக்கு ஏற்படும் தலைச்சுற்றலுக்கு உள் காதில் ஏற்படும் தொந்தரவு, இயக்க நோய் மற்றும் மருந்துகளின் விளைவுகள் உட்பட பல காரணங்கள் உள்ளன. மேலும் தலைச்சுற்றல் மோசமான இரத்த ஓட்டம், தொற்றுகள் அல்லது காயங்கள் போன்ற அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகளையும் குறிக்கலாம். இப்போது உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் தலைச்சுற்றலுக்கான நான்கு காரணங்களைக் காண்போம்.

மெனியர்ஸ் நோய்

மெனியர்ஸ் நோய்

இந்த நோயானது உள் காதில் அதிகப்படியான திரவத்தை உருவாக்கும். இப்பிரச்சனை இருக்கும் போது, பல மணிநேரங்கள் தலைச்சுற்றலை அனுபவிக்க வாய்ப்புள்ளது. மேலும் இப்பிரச்சனையுடன் செவிப்புலன் இழப்பு, காதுகளில் ஒலித்தல் மற்றும் காது அடைப்பு போன்ற பிற அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும்.

மோசமான இரத்த ஓட்டம்

மோசமான இரத்த ஓட்டம்

கார்டியோமயோபதி, மாரடைப்பு, இதய அரித்மியா மற்றும் நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் போன்ற நிலைகள் தலைசுற்றலை ஏற்படுத்தும். ஏனெனில் இது மூளை அல்லது உள் காதுகளில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாமையால் ஏற்படுவதாக இருக்கலாம்.

நரம்பியல் கோளாறுகள்

நரம்பியல் கோளாறுகள்

பர்கின்சன் நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் நிலையற்றத் தன்மை அல்லது அதிகம் தடுமாறக்கூடும். எனவே உங்களுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் இருப்பின், சற்றும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இரத்த சோகை அல்லது குறைவான இரும்புச்சத்து அளவு

இரத்த சோகை அல்லது குறைவான இரும்புச்சத்து அளவு

தலைச்சுற்றல் அல்லது மயக்கம் என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையின் அறிகுறிகளில் ஒன்றாகும். இத்தகைய பிரச்சனையைக் கொண்டவர்கள் தலைச்சுற்றலுடன், உடல் சோர்வு, பலவீனம் மற்றும் வெளிரிய சருமத்தை அனுபவிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Dizziness That Need Immediate Medical Attention

Here we listed some causes of dizziness that need immediate medical attention. Read on...
Story first published: Tuesday, September 14, 2021, 11:50 [IST]
Desktop Bottom Promotion