For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா?

நிறைய பேர் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

|

தற்போதைய பரபரப்பான உலகில் காலை வேளையில் சாப்பிட கூட நேரம் இல்லாமல் பலரும் அவசர அவசரமாக அலுவகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. காலை உணவைத் தவிர்த்து வந்தால், உடலில் பல பிரச்சனைகள் தலைத்தூக்க ஆரம்பித்துவிடும். உடல் ஆரோக்கியத்திற்காக பழங்களை பலர் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள்.

Can We Eat Banana On An Empty Stomach In Tamil

குறிப்பாக நிறைய பேர் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஏனெனில் இந்த பழத்தை ஒன்று சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கிறது. மேலும் இந்த பழத்தை அலுவலகத்திற்கு பயணம் செய்யும் போதே சாப்பிடலாம் மற்றும் இப்பழத்தை நீரில் கழுவி சாப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழத்தின் நன்மைகள்

வாழைப்பழத்தின் நன்மைகள்

பழங்களில் வாழைப்பழம் விலைக் குறைவில் கிடைக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம். இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடல் களைப்பைக் குறைகிறது. இது தவிர இது இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது, மன இறுக்கத்தைக் குறைக்கிறது, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

மேலும் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, இரத்த சோகையை சரிசெய்ய உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் இருக்கிறது. மொத்தத்தில் இது உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இருப்பினும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது?

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது?

பல்வேறு ஆதாரங்களின் படி, வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம் போன்ற பல்வேறு இன்றியமையாத சத்துக்கள் இருந்தாலும், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

* வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகளவில் இருப்பதால், இது உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் சோர்வடையச் செய்துவிடும்.

* வாழைப்பழங்கள் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை. எனவே வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது குடல் பிரச்சனைகளை உண்டாக்கும்.

* வாழைப்பழத்தில் அதிக மக்னீசியம் இருப்பதால், இது இரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, எப்போதுமே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி, எந்த ஒரு பழங்களையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் தற்போது இயற்கை முறையில் வளர்க்கப்படும் பழங்கள் கிடைப்பது அரிது. நிறைய பழங்கள் செயற்கையாகவே வளர்க்கப்படுகின்றன. எனவே காலை வேளையில் கெமிக்கல்கள் கலந்த பழங்களை உட்கொண்டால், நாம் நினைப்பதை விட மோசமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

முடிவு

முடிவு

நீங்கள் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பினால், அதை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது, வாழைப்பழத்தால் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதே வேளையில் வாழைப்பழத்தை சாப்பிட சிறந்த நேரம் காலை வேளை தான். எனவே காலையில் வாழைப்பழங்களை சாப்பிட விரும்புபவர்கள், அதை பால், உலர் பழங்கள் அல்லது பிற ஆரோக்கியமான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can We Eat Banana On An Empty Stomach In Tamil

Can we eat banana on an empty stomach or not? Read on to know more...
Story first published: Tuesday, December 20, 2022, 11:22 [IST]
Desktop Bottom Promotion