For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை தேன் சாப்பிடுவது... உங்க கொலஸ்டாரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுமா? உதவாதா?

ஒருவரின் உணவில் கூடுதல் இனிப்புகளைச் சேர்ப்பதை விட, தேனை சேர்க்கலாம். குறிப்பாக பச்சையான, மோனோஃப்ளோரல் தேனை உங்கள் உணவில் சேருங்கள். இது சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்

|

பண்டைய காலம் முதல் இன்று வரை பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தேன். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் அறிந்த நம் முன்னோர்கள் தேனை நம் உணவுகளின் ஒரு ஒரு பகுதியாக சேர்த்து வைத்துள்ளன. இனிப்புக்கு சர்க்கரையை பயன்படுத்துவது பல்வேறு உடல்நல அபாயங்களோடு தொடர்புடையது. ஆம், சர்க்கரை உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. ஆதலால், சர்க்கரை பதிலாக ஆரோக்கியமான மாற்றாக தேனை பயன்படுத்த நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். பண்டைய காலம் முதல், மூல தேன் ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, மூல தேன் ஒரு பயனுள்ள காய சிகிச்சையாகவும் அறியப்படுகிறது.

can-raw-honey-lower-blood-sugar-and-cholesterol-in-tamil

இருப்பினும், இந்த ஆரோக்கிய நன்மைகளில் பெரும்பாலானவை பச்சையாகவோ அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்படாத தேனுடன் மட்டுமே உள்ளன. மளிகைக் கடைகளில் கிடைக்கும் தேன் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்காது. ஆதலால், சுத்தமான மூலத் தேனை பார்த்து வாங்குங்கள். பச்சை தேன் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுமா? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Raw Honey Lower Blood Sugar And Cholesterol in tamil?

Here we are talking about the Can Raw Honey Lower Blood Sugar And Cholesterol in tamil?
Story first published: Monday, December 5, 2022, 19:40 [IST]
Desktop Bottom Promotion