For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Tuberculosis Day 2023: யாருக்கு நுரையீரல் காசநோய் வரும் அபாயம் உள்ளது? அதன் அறிகுறிகள் என்ன?

|

World Tuberculosis Day 2023: நம்மில் பலரும் டிபி என்னும் காசநோய் குறித்து அறிந்திருப்போம். இதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு நுரையீரல் சார்ந்த நோய் என்பதை அறிந்திருப்போம். ஆனால் இந்த நோய் நுரையீரலைக் கடந்து உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும் என்பது நம்மில் பல பேர் அறியாத ஒரு விஷயமாகும்.

டிபி என்னும் காசநோய் ஒரு பொதுவான பெயர். ஆனால் நுரையீரல் காசநோய் என்பது சற்று புதிய பெயராகவே உள்ளது. இது ஒரு பரவக்கூடிய கிருமி தொற்றாகும். இது நுரையீரலில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடியதாக உள்ளது. நுரையீரல் காசநோய் உருவாகக் காரணமாக இருக்கும் கிருமி மைக்கோபாக்டீரியம் ட்யூபர்க்ளோசிஸ் என்பதாகும். இந்த பாக்டீரியா, நுரையீரலை தாக்கும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. ஆனால் உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கிறது.

World Tuberculosis Day 2023: Can Pulmonary Tuberculosis Spread Beyond Lungs?

MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

காசநோய் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் வெளிப்படக்கூடிய நீர்த்துளிகள், காற்றின் வழியாக பரவுவதால் மற்றும் ஒரு ஆரோக்கியமான நபர் இந்த காற்றை சுவாசிப்பதால் அவருக்கும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உண்டாகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு இந்த தொற்று பரவும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Tuberculosis Day 2023: Can Pulmonary Tuberculosis Spread Beyond Lungs?

World Tuberculosis Day 2023: Can pulmonary tuberculosis spread beyond lungs? Read on...
Desktop Bottom Promotion