Latest Updates
-
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ!
ஆண்களே! உங்க விந்தணுக்களை அதிகரிக்கவும் பாலியல் ஆசையை தூண்டவும் இஞ்சியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
இஞ்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. விந்தணுக்களின் செறிவு, இயக்கம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் இஞ்சி விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தலாம்.
பண்டைய காலம் முதல் இன்று வரை இஞ்சி பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கி வருகிறது. உங்கள் வயிற்று பிரச்சனை முதல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை இஞ்சி உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்கிறது. அதனால்தான் இஞ்சியை நம் உணவில் காலம்காலமாக சேர்த்துவருகிறோம். நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் இஞ்சியை பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் மருத்துவ குணங்கள்தான். பல ஆண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவத் துறைகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி, உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம். பாரம்பரிய மருத்துவத்தில், இது நீண்ட காலமாக பாலியல் தூண்டுதல் மற்றும் லிபிடோவை மேம்படுத்த உதவும் இயற்கை தூண்டுதலாக பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் பெரும்பாலான ஆண்கள் பாலியல் வாழ்க்கையில் ஆர்வத்தை இழந்து வருகிறார்கள். அவர்களின் பாலியல் ஆசையை அதிகரிக்க இஞ்சி உதவுமா? ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை இஞ்சி மேம்படுத்த உதவுமா? மேலும் என்னென்ன பாலியல் நன்மைகளை இஞ்சி ஆண்களுக்கு வழங்குகிறது? என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

இஞ்சி உங்கள் செக்ஸ் டிரைவை மேம்படுத்துமா?
இஞ்சி உங்கள் பாலியல் உந்துதலை மேம்படுத்துவதற்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதேநேரம் சில ஆய்வுகளில், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் கருவுறுதல் மற்றும் பாலியல் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் திறனுக்காக இஞ்சி நீண்ட காலமாக அறியப்படுகிறது. மேலும், இஞ்சி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!

விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கும்
இஞ்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. விந்தணுக்களின் செறிவு, இயக்கம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் இஞ்சி விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தலாம். மேலும், இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இஞ்சி இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் சிறந்த இரத்த ஓட்டத்தை ஆதரிக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அதனால் இது உங்கள் பாலியல் தூண்டுதலை அதிகரிக்க உதவும்.

இஞ்சி ஆண் லிபிடோவை அதிகரிக்குமா?
இஞ்சி ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஒரு பிரபலமான சிகிச்சையாகும். வயதான ஆண்கள், தங்கள் உணவுகளில் இஞ்சியை சேர்ப்பதனால், அவர்களின் பாலியல் ஆசை தூண்டப்படும். இதன் விளைவாக, இது உறுப்புகள் மற்றும் திசுக்களில் இருந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது விறைப்புத்தன்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அறிக்கையின் படி, இஞ்சி லுடினைசிங் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஆண்களின் பாலியல் தூண்டுதலை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுக்கிறது.

ஆராய்ச்சி கூறுவது
ஆராய்ச்சியின் படி, 100 mg/kg/ இஞ்சி விந்தணுவின் இயக்கம், நம்பகத்தன்மை மற்றும் செறிவு ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்துகிறது. இஞ்சி. எல்-சிட்ரூல்லைன் மற்றும் முய்ரா புவாமா ஆகியவற்றின் கலவையானது முதுமை தொடர்பான விறைப்புத்தன்மையுடன் தொடர்புடைய செயல்பாட்டு காரணிகளின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன, அவை ஆண்களின் மூட்டுகள், மூளை மற்றும் லிபிடோ ஆகியவற்றிற்கு நன்மை பயக்கும்.

எவ்வாறு பயன்படுத்துவது?
உங்கள் செக்ஸ் தூண்டுதலை அதிகரிக்க இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? சூடான இஞ்சி தேநீர், காய்கறி மற்றும் கறி, சாஸ்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்ற உங்கள் உணவில் இஞ்சியை சேர்ப்பதன் மூலம் பாலியல் உந்துதலுக்கான இஞ்சியின் பலன்களை நீங்கள் அறுவடை செய்யலாம்.

இறுதிக் குறிப்பு
உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கலாம். இஞ்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இஞ்சியின் அதிகப்படியான நுகர்வு நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, துர்நாற்றம் மற்றும் பொதுவான வயிற்று அசௌகரியம் போன்ற லேசான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுக்கு அதிகமான இஞ்சியை எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications