For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் என்ன ஜூஸ் குடிக்கணும் தெரியுமா?

கொளுத்தும் கோடைக்காலத்தில் சீசன் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் கொண்டு பானம் தயாரித்துக் குடித்து வந்தால், அது உங்கள் நாவிற்கு சுவையை அளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

|

இத்தனை நாட்கள் அவசர வாழ்க்கையை வாழ்ந்து வந்த நாம், கொரோனா வைரஸ் பரவலால் கடந்த சில நாட்களாக எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தை நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்வதன் மூலம், பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவும் நம் வீட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சில சூப்பர் பொருட்களைக் கொண்டே எளிதில் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Boost Immunity And Lose Weight With This Lemon-Mint-Ginger Detox Water

அதிலும் கொளுத்தும் கோடைக்காலத்தில் சீசன் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் கொண்டு பானம் தயாரித்துக் குடித்து வந்தால், அது உங்கள் நாவிற்கு சுவையை அளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்திருக்கும். உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அதனாலேயே பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அவ்வப்போது உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

MOST READ: ஜாக்கிரதை! இந்த அன்றாட பழக்கங்கள் புற்றுநோயை வரவழைக்கும்.. உடனே இப்பழக்கங்களை கைவிடுங்க..

இப்போது உடலை சுத்தம் செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும் அற்புத பானம் குறித்துக் காண்போம். இந்த பானமானது ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக்காய், அன்னாசி, இஞ்சி, புதினா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவது. சரி, இப்போது நச்சுக்களை வெளியேற்றும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வலிமையான நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் கலோரிகளும் குறைவு. அதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்த ஆரஞ்சு பழம், உடலினுள் உள்ள காயங்கள் அல்லது அழற்சியைப் போக்க உதவி புரியும். இப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்த அளவையும் நிலையாக பராமரிக்க உதவும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையிலும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக உள்ளது. இதை சரியான அளவில் ஒருவர் உட்கொண்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாகவும் மற்றும் இரத்த அழுத்த அளவு சீராகவும் இருக்கும். மேலும் எலுமிச்சை இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

சுவையான மற்றும் நல்ல மணத்தைக் கொண்ட அன்னாசிப்பழத்தில் தையமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேண்டோதெனிக் அமிலம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நிறைந்தது. வெள்ளரிக்காய் 95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது என்பது தெரியுமா? கலோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 100 கிராம் வெள்ளரியில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன.

புதினா

புதினா

நல்ல மணம் கொண்ட புதினா செரிமானத்தை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியான சுவாசத்திற்கும், சளியில் இருந்து விடுவிக்கவும், தலைவலி மற்றும் மூக்கடைப்பு அண்டாமல் இருக்கவும் உதவும். புதினாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இருமலால் ஏற்படும் எரிச்சலுணர்வில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

இஞ்சி

இஞ்சி

பாரம்பரிய மருத்துவத்தில் சளி, அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டது. இஞ்சி ஜின்ஜெராலை உள்ளடக்கியது. இது வலி நிவாரணி, மயக்க மருந்து, ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்டது. இதில் உள்ள மற்றொரு கூறான ஜிங்கிரோன் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஆரஞ்சு துண்டு - 10 கிராம்

* எலுமிச்சை துண்டு - 5 கிராம்

* அன்னாசி துண்டுகள் - 10 கிராம்

* வெள்ளரிக்காய் துண்டு - 10 கிராம்

* இஞ்சி துண்டு - 5 கிராம்

* புதினா இலைகள் - 2 கிராம்

* ஐஸ் கட்டிகள் - சிறிது

* தண்ணீர் - 200 மிலி

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் நீரில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் அந்நீரை வடிகட்ட வேண்டும். இப்போது உடலை சுத்தம் செய்யும் அற்புத பானம் குடிப்பதற்கு தயார்.!

குறிப்பு

குறிப்பு

* ஒருவேளை உங்களுக்கு தொண்டைப் புண் இருந்தால் மற்றும் சளி பிடித்துக் கொள்ளும் என்ற அச்சம் இருந்தால், ஐஸ் கட்டிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

* சில பொருட்கள் இல்லாவிட்டாலும், எஞ்சிய பொருட்களைக் கொண்டு தயாரித்துக் குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boost Immunity And Lose Weight With This Lemon-Mint-Ginger Detox Water

Lemon-Mint-Ginger Detox Water Recipe: Seasonal fruits, veggies and herbs are incredibly rich in a number of vitamins, antioxidants and minerals. You can have them separately or combine the goodness of some in one drink.
Desktop Bottom Promotion