Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீர் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து ஒரு டம்ளர் சுடுநீர் குடித்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பழங்களுள் வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் இன்று பலர் உடல் பருமனால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைக்க பல வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடல் பருமனாலேயே பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த உடல் பருமனைக் குறைக்க வாழைப்பழமும், சுடுநீரும் உதவும் என்பது தெரியுமா?

ஒருவரது ஆரோக்கியத்தை காலையில் எழுந்ததும் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கொண்டே சொல்ல முடியும். அதிலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து ஒரு டம்ளர் சுடுநீர் குடித்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதுவரை வாழைப்பழம் மற்றும் பாலின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்பீர்கள். ஆனால் இக்கட்டுரையில் வாழைப்பழம் மற்றும் சுடுநீரில் நன்மைகளைப் பற்றி காணப் போகிறோம். வாழைப்பழம்-பால் உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் வாழைப்பழத்தை சுடுநீருடன் எடுக்கும் போது, உடல் எடை மற்றும் தொப்பை குறையுமாம். இப்போது காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நன்மை #1
காலையில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கும் போது, உடலில் இருந்து நச்சுக்கள் நீங்குவதோடு, உடலின் மெட்டபாலிசமும் மேம்படும். ஒருவரது மெட்டபாலிசம் சிறப்பான அளவில் இருந்தால், கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, உடல் பருமனும் குறையும்.

நன்மை #2
நீங்கள் மிகவும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியானால் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, உடல் பலவீனம் நீங்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

நன்மை #3
ஒருவர் காலையில் எழுந்ததும் வாழைப்பழம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால், உடலில் சோடியத்தின் அளவு சமநிலையில் பராமரிக்கப்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவி, அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

நன்மை #4
சுடுநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றத் தூண்டும் மற்றும் வாழைப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இவை இரண்டும் சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

நன்மை #5
நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டு சுடுநீர் குடியுங்கள். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் மற்றும் அனைத்து உணவுகளும் நன்கு செரிமானமாகச் செய்யும். அதோடு அசிடிட்டி மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications