Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?
ப்ராக்கோலி நல்ல சுவையானது மட்டுமின்றி, பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இப்போது ப்ராக்கோலியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன. அதில் கடந்த சில ஆண்டுகளாக ப்ராக்கோலியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில் ப்ராக்கோலி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளார்கள். ஆனால் எந்த மாதிரியான நன்மைகளை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. எனவே காலிஃப்ளவர் போன்று காணப்படும் ப்ராக்கோலியில் உள்ள சத்துக்கள் மற்றும் ப்ராக்கோலி சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைப் பற்றி இப்போது காண்போம்.

பச்சை இலை காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன், ஜிங்க், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள், க்யூயர்சிடின் மற்றும் க்ளுக்கோசைடுகள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ப்ராக்கோலியை சமைத்து சாப்பிடுவதைத் தவிர, பச்சையாக சாலட் வடிவிலும் சாப்பிடலாம். ப்ராக்கோலி நல்ல சுவையானது மட்டுமின்றி, பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இப்போது ப்ராக்கோலியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
ப்ராக்கோலியை சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றில், முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் ப்ராக்கோலியை உண்பது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுத்தது. இதற்கு அதில் உள்ள சல்ஃபோராபேன் என்ற கெமிக்கல் தான் காரணம். எனவே இந்த சுவையான காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
ப்ராக்கோலியில் காணப்படும் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். குறிப்பாக இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக உடல் வலுவாக இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுங்கள்.

எடை இழப்பு
உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு ப்ராக்கோலி மிகச்சிறந்த காய்கறி. ஏனெனில் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதுவும் குளிர்காலத்தில் ப்ராக்கோலி சூப் குடித்து வந்தால், உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

கல்லீரலுக்கு நல்லது
உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், அடிக்கடி உணவில் ப்ராக்கோலியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள் மற்றும் ஹெபடோப்ரோடெக்டிவ் கல்லீரலுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ப்ராக்கோலியை சூப், சாலட் என்று பிடித்த வடிவில் அடிக்கடி சாப்பிடுங்கள்.

எலும்புகளுக்கு நல்லது
உடலில் கால்சியம் போதுமான அளவில் இல்லாத போது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், ப்ராக்கோலியை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மை பயக்கும். ஏனெனில் ப்ராக்கோலியில் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications