Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோர் நீரை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்ப்போம். ஆனால் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாம் அறிந்திராத பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
எப்படி நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் உட்கொண்டால், அந்த உணவின் முழு பலனையும் பெற முடியுமோ, அதேப் போல் தான் குடிக்கும் நீரையும் சரியான நேரத்தில் குடித்தால், நீரினால் கிடைக்கும் பலனைப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் நீர் மிகவும் இன்றியமையாதது. நம் உடலின் பெரும்பாலான பகுதி நீரால் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்ட நீரை ஒருவர் தினமும் போதுமான அளவில் குடிக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் நீரை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்ப்போம். ஏனெனில் இரவு நீர் குடித்தால், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும் என்பதால் தான். ஆனால் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாம் அறிந்திராத பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதய நோயின் அபாயம் குறையும்
இரவு தூங்கும் முன்பு தண்ணீர் குடிப்பது, இதயத்திற்கு மிகவும் நல்லது. எப்போதெல்லாம் இரவு தண்ணீர் குடிக்கிறோமோ, அப்போதெல்லாம் இதய நோயின் அபாயம் குறைகிறது. ஏனெனில் இது மென்மையான இரத்த ஓட்டத்திற்கு உதவி புரிந்து இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எப்போது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கிறதோ, அது மாரடைப்பு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்
மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது தூக்கத்தைக் கெடுக்கும். இரவு தூங்குவதற்கு முன் ஒருவர் தண்ணீர் குடிப்பதால், அது நாள் முழுவதும் எதிர்கொண்ட அழுத்தத்தைப் போக்குவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

தசைகள் வலுவாகும்
இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலில் புதிய செல்களை உருவாக்குவதோடு, தசைகளை வலிமையாக்கும். ஆகவே உங்கள் தசைகளை வலிமையாக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் தண்ணீர் குடியுங்கள்.

வயிறு சுத்தமாகும்
நீங்கள் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய நினைத்தால், அதற்கான ஒரு சிறப்பான வழி தண்ணீர் குடிப்பது. தண்ணீரைக் குடிக்கும் போது நமது வயிறு சுத்தமாவதுடன், செரிமான மண்டலம் சிறப்பாக வேலை செய்யும். அதுவும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற்றப்படும்.

உடல் களைப்பு நீங்கும்
பொதுவாக தண்ணீர் குடித்தால் உடல் அசதி நீங்கும். அதுவும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் உழைத்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். பகலில் நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால், அப்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையாமல் சீரான அளவில் இருக்கும் மற்றும் உடலியக்கமும் எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக இருக்கும்.
தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி உட்கார்ந்து, மெதுவாக குடிப்பது தான். ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் மிகவும் குளிர்ந்த நீரை விட அறை வெப்பநிலையில் உள்ள நீரைக் குடிப்பது தான் நல்லது.
இரவு படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவி புரிந்து, இரவில் மற்றும் அதிகாலையில் மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
