ஆண்களே! விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்குறீங்களா? அப்ப கிராம்பை இப்படி சாப்பிடுங்க..

பல நூற்றாண்டுகுளாக பாரிம்பரிய மருத்துவத்தில் கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுவதாக சில சான்றுகளும் உள்ளன.

இன்று பெரும்பாலான ஆண்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையின் காரணமாக பலவிதமான பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், தற்போதைய ஜங்க் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. நிறைய ஆண்கள் தங்களின் பாலியல் பிரச்சனைகள் குறித்து பேச அதிக தயக்கம் கொள்கிறார்கள். ஆனால் ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கு நமது சமையலறையில் உள்ள கிராம்பு ஒரு நல்ல பலனைத் தரும் என்பது தெரியுமா?

Benefits Of Cloves For Male Sexual Health In Tamil

பல நூற்றாண்டுகுளாக பாரிம்பரிய மருத்துவத்தில் கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுவதாக சில சான்றுகளும் உள்ளன. இக்கட்டுரையில் கிராம்பு எப்படி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பில் உள்ள சத்துக்கள்

கிராம்பில் உள்ள சத்துக்கள்

மசாலா பொருட்களில் ஒன்றான கிராம்பு அன்றாட சமையலில் நல்ல மணத்திற்காக மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம்பில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகளைக் கொண்ட யூஜெனோல் என்ற பொருளும் உள்ளன.

சமீபத்திய ஆய்வுகளும் கிராம்பு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக கூறுகின்றன. இப்போது கிராம்பு ஆண்களுக்கு எந்த மாதிரியான பாலியல் நன்மைகளை வழங்குகிறது என்பதைக் காண்போம்.

பாலியல் செயல்பாடு மேம்படும்

பாலியல் செயல்பாடு மேம்படும்

விலங்குகளின் மீது மேற்கொண்ட பல்வேறு ஆய்வில், கிராம்பு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதோடு, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஒட்டுமொத்த பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, சர்க்கரை நோய் உள்ள ஒரு எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அந்த எலிக்கு கிராம்பைக் கொண்டு சிகிச்சை கொடுக்கும் போது, அதன் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, பாலியல் செயல்பாடு மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை அல்லது பிற பாலியல் குறைபாடுகளைக் கொண்ட ஆண்கள் கிராம்புகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம் நன்மை கிடைப்பதாக தெரிகிறது. இருப்பினும், மனிதர்களிடம் இந்த கிராம்பின் விளைவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவையாக உள்ளது.

பாலுணர்ச்சி அதிகரிக்கும்

பாலுணர்ச்சி அதிகரிக்கும்

பாலுணர்ச்சியை அதிகரிக்க கிராம்பு உதவி புரிகிறது. ஆய்வு ஒன்றில், தொடர்ந்து 8 வாரங்களுக்கு கிராம்பு சப்ளிமெண்ட்டுகளை எடுத்த ஆண்களின் பாலுணர்ச்சி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாலுணர்ச்சி குறைவாக இருக்கும் ஆண்கள் கிராம்பை எடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

விறைப்புத்தன்மை பிரச்சனை குறையும்

விறைப்புத்தன்மை பிரச்சனை குறையும்

பெரும்பாலான ஆண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. கிராம்பில் உள்ள பொருட்கள், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்வதோடு, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு காரணமான பெருந்தமனி தடிப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே இயற்கை வழியில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு காண நினைத்தால், அன்றாட உணவில் கிராம்பை சேர்த்து வாருங்கள்.

முன்கூட்டிய விந்து வெளியேற்றத்தை தடுக்கும்

முன்கூட்டிய விந்து வெளியேற்றத்தை தடுக்கும்

சில ஆண்களுக்கு சீக்கிரமே விந்து வெளியேறிவிடும். இதுவும் ஒரு வகையன பாலியல் பிரச்சனை தான். ஏனெனில் இந்த பிரச்சனை உள்ள ஆண்களால் தனது துணையை திருப்திபடுத்த முடியாது. இந்த பிரச்சனையைத் தடுக்க கிராம்பு எண்ணெய் உதவுதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் மேம்படும்

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் மேம்படும்

விந்தணு குறைபாடு கொண்ட ஆண்களுக்கு கிராம்பு ஒரு நல்ல உணவுப் பொருள். இந்த கிராம்பை ஆண்கள் தினமும் எடுக்கும் போது, அது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராம்புகளை எப்படி பயன்படுத்துவது?

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராம்புகளை எப்படி பயன்படுத்துவது?

ஆண்கள் தங்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், அதற்கு கிராம்பை ஒருசில வழிகளில் எடுக்கலாம். அதில் அவற்றை தினசரி உணவிலோ அல்லது சப்ளிமெண்ட்டுகளாகவோ எடுக்கலாம். இல்லாவிட்டால் கிராம்பு எண்ணெயை வேறொரு எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் மசாஜ் செய்யலாம். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

உணவுகளில் சேர்க்கலாம்

உணவுகளில் சேர்க்கலாம்

கிராம்பை உட்கொள்ள ஒரு சிறந்த வழி என்றால், அவற்றை தினசரி சமையலில் சேர்ப்பது தான். அது குழம்பு ஆகட்டும், ஸ்வீட் ஆகட்டும் அல்லது சூப் ஆகட்டும், எந்த வகையான உணவிலும் கிராம்பு சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், கிராம்பு கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

* கிராம்பு டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1-2 கிராம்புகளை சேர்த்து நன்கு 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அடுப்பை அணைத்துவிட்டு, அந்நீரை வடிகட்டி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயை பயன்படுத்த விரும்பினால், 1-2 டீஸ்பூன் கிராம்பு எண்ணெயடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை அந்தரங்க பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு: கிராம்பு என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கிராம்புகளை எடுக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது. ஏனெனில் சிலருக்கு இது பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கிய விஷயத்தில், நீங்களாக ஒரு முடிவு எடுப்பதை விட மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுப்பதே எப்போதும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion