நம் முன்னோர்களுக்கு கொலஸ்ட்ரால், சுகர் வராம இருந்ததுக்கு, இந்த இலை தான் காரணம் தெரியுமா?

வெற்றிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழ்வதைக் காணலாம். சொல்லப்போனால் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால்போன்ற பிரச்சனைகள் இல்லாததற்கு இந்த வெற்றிலையும் ஓர் காரணம்

பழங்காலத்தில் நம் முன்னோர்களால் தினசரி உட்கொள்ளப்பட்டு வந்த ஒரு பொருள் தான் வெற்றிலை. இந்த வெற்றிலை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. அதனால் தான் இது ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றிலையில் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டீன் போன்றவற்றைத் தவிர, கால்சியமும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. வெற்றிலை நல்ல நறுமணமிக்கது என்பதால், இந்த வெற்றிலை கொடியை வீட்டில் ஒரு அலங்கார செடியாக வளர்க்கலாம்.

Benefits Of Betel Leaves In Tamil

தற்போது மக்களிடையே வெற்றிலை போடும் பழக்கம் குறைந்துவிட்டது என்றே கூற வேண்டும். ஆனால் வெற்றிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழ்வதைக் காணலாம். சொல்லப்போனால் முந்தைய காலத்தில் நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இல்லாததற்கு இந்த வெற்றிலையும் ஓர் காரணம் என்றே கூறலாம். இப்போது தினமும் வெற்றிலையை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சர்க்கரை கட்டுப்படும்

இரத்த சர்க்கரை கட்டுப்படும்

வெற்றிலையில் சர்க்கரை நோயாளிகளில் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. மேலும் வெற்றிலையில் உள்ள கூறுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவி புரிவதாக நம்பப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடுவது நல்லது.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

வெற்றிலையில் உள்ள யூஜெனால் கல்லீரலில் மற்றும் குடலில் கொழுப்புக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலின் கேடபாலிக் செயல்முறைக்கு உதவுகிறது. எனவே வெற்றிலை உட்கொள்ளும் போது, கொலஸ்ட்ரால் பிரச்சனை தடுக்கப்பட்டு, இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறைகிறது.

ஆஸ்துமாவை தடுக்கும்

ஆஸ்துமாவை தடுக்கும்

வெற்றிலையில் உள்ள ஆன்டி-ஹிஸ்டமைன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய் அழற்சியின் மூலம் காற்று தடையின்றி செல்வதை உறுதி செய்கிறது. இதனால் ஆஸ்துமா வருவதற்கான அபாயம் குறையும்.

புற்றுநோய்களை தடுக்கும்

புற்றுநோய்களை தடுக்கும்

வெற்றிலையை மென்று சாப்பிடுவது வாய் புற்றுநோயைத் தடுக்கும். ஏனெனில் இது எச்சிலில் உள்ள அஸ்கார்பிக் அமிலத்தின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால், 10-12 வெற்றிலைகளை நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் அதை இறக்கி வடிகட்டி, அத்துடன் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

தலைவலி குறையும்

தலைவலி குறையும்

நீங்கள் கடுமையான தலைவலியால் அவதிப்படும் போது, வீட்டில் உள்ள வெற்றிலையை அரைத்து நெற்றியில் தடவ நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் வெற்றிலையானது குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது உடனடி நிவாரம் கிடைக்கும்.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

வெற்றிலையானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. அதற்கு ஒரு வெற்றிலையை எடுத்து, அதில் 5 மிளகை வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இதனால் மிளகில் உள்ள பெப்பரின் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் செரிமான செயல்முறையை எளிதாக்கி, செரிமான பிரச்சனைகளை தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

காயங்கள் குணமாகும்

காயங்கள் குணமாகும்

உங்கள் கையில் வெட்டு காயங்கள் அல்லது கீழே விழுந்து காலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், வெற்றிலையை அரைத்து அவற்றை காயங்களின் மீது தடவும் போது, காயங்கள் விரைவில் குணமாகும். ஆயுர்வேதத்தில் கூட காயங்களை குணப்படுத்த வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெற்றிலையை மென்று சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ-ராடிக்கல்களை அழிக்கும். அதோடு, வெற்றிலை உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவி புரியும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, January 25, 2023, 11:46 [IST]
Desktop Bottom Promotion