Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடலை குணப்படுத்தவும் உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
ஆயுர்வேதத்தின் படி, குடல் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உடல் அக்னியை சமநிலையில் வைப்பது மிகவும் அவசியம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டல ஆரோக்கியம் போன்றவற்றில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நம்மை சுற்றி இருப்பவர்களில் அதிகமானோர் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுடன் இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். ஒருவேளை நீங்களும் இந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் கவலை வேண்டாம். ஆயுர்வேத வழிகளால் இந்த பாதிப்பைப் போக்க முடியும்.

ஆயுர்வேதம் என்பது பண்டைய கால இந்திய மருத்துவ சிகிச்சை முறையாகும். இது இயற்கையானது, பாதுகாப்பானது மற்றும் சிறப்பானது. ஆயுர்வேதத்தின் படி, குடல் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உடல் அக்னியை சமநிலையில் வைப்பது மிகவும் அவசியம்.
அக்னி அல்லது நெருப்பு என்பது மனித உடலின் எல்லாவித செரிமான மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். எனவே உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த, அக்னியை சமநிலையில் வைப்பது அவசியமாகும். இங்கே நான்கு வகையான அக்னி மற்றும் உணவு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு உடல் அக்னியை சமநிலையில் வைக்கலாம்.

சம அக்னி
சம அக்னி என்பது சமநிலையில் உள்ள அக்னியை குறிக்கும். இந்த வகையை சேர்ந்த மனிதர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இவர்களது நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடல் கோளாறுகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இவர்களால் எந்த ஒரு உணவு வகையையும் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் உட்கொள்ள முடியும். செரிமான பிரச்சனைகள் இன்றி மகிழ்ச்சியாக எந்த உணவையும் உட்கொள்வார்கள். இவர்களுக்கு வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதில்லை. உணவு பழக்கத்தில் மாற்றம் , அல்லது கால நிலை மாற்றம் காரணமாக இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

விஷ அக்னி
ஒழுங்கற்ற செரிமான நிலையைக் குறிப்பது விஷ அக்னி. வாத தோஷம் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். ஒழுங்கற்ற குடல் செயல்பாடு, வாய்வு, வயிறு உப்புசம், வறண்ட சருமம் , எதுக்களிப்பு போன்ற பாதிப்புகளால் இவர்கள் சங்கடம் கொள்ள நேரும். இவர்களின் மனநிலை, உணர்ச்சி, பசி போன்றவை ஒரு நிமிடத்தில் மாறக்கூடும். விஷ அக்னியை சாந்தப்படுத்த தெளிவான உணவுகளான சூப், நெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

தீக்க்ஷனா அக்னி
பித்தத்துடன் தொடர்புடையது தீக்ஷனா அக்னி. பித்தத்தின் லேசான அல்லது கூர்மையான தன்மைகள் இந்த அக்னிக்கு ஆதரவாக இருந்தாலும் , சில நேரங்களில் ஊக்குவித்து அதீத செரிமானத்தை உண்டாக்கலாம். இதனை ஹைப்பர் மெட்டபாலிசம் என்று வரையறுப்பார்கள். இந்த வகை மனிதர்கள் நெஞ்செரிச்சல், அமில சுரப்பு, எதுக்களித்தல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தீக்ஷண அக்னியை சாந்தப்படுத்த வெந்தயம் அல்லது புதினா டீ பருகலாம்.

மந்த அக்னி
கபத்துடன் தொடர்புடைய நிலையை மந்த அக்னி என்று குறிப்பார்கள். மிகவும் தாமதமான செரிமானத்தை மந்த அக்னி வெளிப்படுத்துகிறது. மந்த அக்கினி உள்ளவர்களின் செரிமானம் மிகவும் தாமதமாகவும், சோர்வாகவும் இருக்கும். இதனால் அவர்கள் மிகவும் சோம்பலாக, சோர்வாக, சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள். இதனால் இவர்களின் எடை அதிகரிக்கக்கூடும். மந்த அக்னியை சமநிலைப்படுத்த ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். மேலும் காரமான உணவுகள் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அக்னியை சமநிலைப்படுத்த வேறு சில வழிகள்:
* காய்கறிகள் உட்கொள்ளலை அதிகரிக்கலாம். காரம் மற்றும் எண்ணெய் உணவுளை தவிர்க்க வேண்டும் .
* இரவில் 7-8 மணி நேரம் உறங்குவது அவசியம்.
* உணர்ச்சிபூர்வமாக அதிகம் சாப்பிடுவது, ஜங்க் உணவுகள் உட்கொள்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம்.
* அதிக உடல் செயல்பாடுகளுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
* தினமும் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.



Click it and Unblock the Notifications











