For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேதத்தின் படி பாதத்தில் இப்படி மசாஜ் செய்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்யுமாம் தெரியுமா?

ஆயுர்வேதம் பல நூற்றாண்டுகளாக நம் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நம் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

|

ஆயுர்வேதம் பல நூற்றாண்டுகளாக நம் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நம் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நமது பாதங்கள் நம் உடலின் முக்கியமான மர்மப் புள்ளிகள், நரம்பு முனைகள் மற்றும் இரத்த நுண்குழாய்கள் இணையும் இடமாகும்.

Why Third Wave of Covid Is Dangerous for Child?

ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவம் போன்ற முழுமையான அறிவியலானது பாதங்களை ஆரோக்கிய வாழ்வின்முக்கிய அங்கமாக கருதுகிறது. பாதங்களில் சரியான முறையில் மசாஜ் செய்வது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குமென்று ஆயுர்வேத நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் பார்வையை அதிகரிக்கிறது

கண் பார்வையை அதிகரிக்கிறது

நம் பாதங்கள் நம் கண்களுடன் தொடர்புடைய நான்கு முக்கியப் புள்ளிகளை வைத்திருக்கின்றன. கால்களை தவறாமல் மசாஜ் செய்வது உங்கள் கண்பார்வை மேம்படுத்தவும், பார்வையை மேம்படுத்தவும், நம் கண் பாதிப்பை குணப்படுத்தவும் உதவுகிறது.

வாதா தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது

வாதா தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது

கால்கள் பல நரம்பு முனைகளையும் இரத்த நுண்குழாய்களையும் வைத்திருக்கின்றன, அவை வாதாவின் இயக்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. கால்களை மசாஜ் செய்வது வாதாவை சரியான திசையில் வழிநடத்த உதவுகிறது.

உடலை சமநிலைப்படுத்துகிறது

உடலை சமநிலைப்படுத்துகிறது

நமது பாதங்கள் பூமியுடன் இணைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆகும். அவற்றைக் கவனித்து மசாஜ் செய்வது நமது உடலை சமநிலைப்படுத்த உதவுகிறது.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

ஒரு நல்ல பாத மசாஜ் நமது சோர்வடைந்த பாதங்களைத் தளர்த்துவது மட்டுமின்றி, அழுத்தமான மனதையும் குணப்படுத்தும். ஒரு நல்ல பாத மசாஜ் உங்களை மாத்திரையை விட வேகமாக படுக்க வைக்கும்.

நல்ல பாத ஆரோக்கியம்

நல்ல பாத ஆரோக்கியம்

அனைத்திற்கும் மேலாக, இது பாதத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கால்களின் மூட்டுகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு போன்ற சுழற்சி பிரச்சனைகள் உள்ள நிலைமைகளில் உதவுகிறது.

பாத மசாஜ் எப்படி செய்வது?

பாத மசாஜ் எப்படி செய்வது?

  • சிறிது வெதுவெதுப்பான எண்ணெயை எடுத்து, உங்கள் பாதங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். கால்விரல்களிலிருந்து தொடங்கி கீழே நகரவும்.
  • இதற்கு எள், பிராமி போன்ற சூடான எண்ணெய்களைப் பயன்படுத்தவும். ஆறாத காயங்கள், வெட்டுக்கள், கீறல்கள் அல்லது கடுமையான தொற்று இருக்கும் போது மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Benefits of Foot Massage in Tamil

Find out the amazing benefits of food massage as per Ayurveda.
Story first published: Friday, January 13, 2023, 16:41 [IST]
Desktop Bottom Promotion