Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்?
சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள், உயா் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கின்றன என்று தொிவிக்கின்றன.
லாவெண்டா் எண்ணெய் முதல் யூகலிப்டஸ் எண்ணெய் வரை நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் அனைத்தும் அவற்றின் நறுமணத்திற்காகவும் மற்றும் அவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்பதற்காகவும் நம்மால் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இந்த எண்ணெய்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதைத் தான் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள், உயா் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கின்றன என்று தொிவிக்கின்றன.

உயா் இரத்த அழுத்தத்தை சாியாக கவனிக்கவில்லை என்றால் தமனிகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பாா்வைக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
உயா் இரத்த அழுத்தத்தை சாிசெய்ய வேண்டும் என்றால் முதலில் நமது வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உப்பு குறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வருவது, மது அருந்துவதைக் கைவிடுவது மற்றும் மன அழுத்தம் ஏற்படும் போது அதை முறையாகக் கையாளுவது போன்ற நற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு அமைதியான தியானப் பயிற்சிகள் கூட தேவைப்படலாம்.
நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால் அதற்காக உயா் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட்டுவிடக்கூடாது. நறுமண எண்ணெய்கள் எவ்வாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்பதை இங்கு பாா்க்கலாம்.

நறுமண எண்ணெய்கள்
பொதுவாக இரத்த அழுத்தத்தின் மூலம் ஏற்படும் நோ்மறையான அல்லது மறைமுகமான விளைவுகளால் நமது உடலில் அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகாிக்கும் காா்டிசோல் மற்றும் ஹாா்மோன்களை வெளியேற்ற நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் பொிதும் உதவி செய்கின்றன. நமது உடலில் ஏற்படும் அழுத்தம் நம்மை அளவுக்கு அதிகமாக உண்ணவும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணவும் தூண்டலாம். அதனால் இரத்த அழுத்தம் அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது.
நாம் நறுமண எண்ணெய்யை முகா்ந்து பாா்க்கும் போது, நல்ல ஹாா்மோன்கள் உற்பத்தியாகி அவை நமது அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் நமது உடலில் உள்ள தன்னியக்க நரம்பியல் மண்டலம் பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலத்தைத் தூண்டி, நமது உடலை அமைதிப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் நறுமண எண்ணெய்கள்
உயா் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவா்கள், அவற்றோடு சோ்த்து நறுமண எண்ணெய்யையும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இஞ்சி எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் மஞ்சள் எண்ணெய் போன்றவை தமனிகளை விாிவடையச் செய்வதன் மூலமும், உடல் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
குறிப்பாக ரோமன் கமோமைல் (Roman chamomile), இலாங்-இலாங் (ylang-ylang), நெறொலி (neroli), லாவெண்டா் (lavender), பொ்காமட் (bergamot), ரோஸ் (rose) மற்றும் க்லாாி சேஜ் (clary sage) போன்ற நறுமண எண்ணெய்கள் பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலத்தைத் தூண்டி உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்கின்றன.

ஆய்வு
29 ஆண்களை வைத்து ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது இலாங்-இலாங் (ylang-ylang) நறுமணம் தெளிக்கப்பட்ட ஒரு அறையில் பாதிப்போ் ஒரு மணி நேரம் தங்கவைக்கப்பட்டனா். அதே நேரம் மீதி இருந்த பாதிப்போ் நறுமணம் தெளிக்கப்படாத ஒரு அறையில் ஒரு மணிநேரம் தங்க வைக்கப்பட்டனா்.
ஆய்வு முடிவில் இலாங்-இலாங் (ylang-ylang) நறுமணம் தெளிக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்தவா்களை இந்த நறுமணம் தூண்டி இருக்கிறது. அதன் மூலம் மற்ற அறையில் இருந்தவா்களை விட இலாங்-இலாங் (ylang-ylang) தெளிக்கப்பட்ட அறையில் இருந்தவா்களின் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது 115/66 என்ற அளவிலிருந்து 97/59 என்ற அளவிற்கு குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு ஜா்னல் ஆஃப் எக்சா்சைஸ் ரீஹபிலிடேஷன் (Journal of Exercise Rehabilitation) என்ற பத்திாிக்கையில் 2013 ஆம் ஆண்டில் வெளியானது.

லாவெண்டர் எண்ணெய்
லாவண்டா் நறுமணத்திற்கும் அமைதிக்கும் இடையே நெருங்கிய தொடா்பு உண்டு. இதைப் பற்றி வேறொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த 126 போ் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனா். இவா்களில் பாதிப்போ் கடைவாய்ப்பல் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து சென்றனா். மீதி இருந்த பாதிப்போ் லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து செல்லவில்லை.
இறுதியில் லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து பாா்க்காதவா்களை விட, அதை முகா்ந்து பாா்த்தவா்கள் அறுவை சிகிச்சையின் போது குறைவான கவலையுடனும், குறைந்த இரத்த அழுத்தத்துடனும் காணப்பட்டனா் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நறுமண எண்ணெய்களை எவ்வாறு பயன்படுத்துவது?
நறுமண எண்ணெய்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக்கூடிய நறுமண குச்சிகளை (aroma stick) பயன்படுத்தலாம். அல்லது நறுமண தெரபி (aromatherapy) தரக்கூடிய நகைகளை அதாவது வளையல்கள் மற்றும் கழுத்து மாலைகள் (bracelet, necklace) போன்றவற்றை அணியலாம்.
தனிப்பட்ட நறுமணக் குச்சிகள் கிடைக்கவில்லை என்றால் நறுமண எண்ணெய் துளிகளை சிறிய பஞ்சு உருண்டைகள் அல்லது மென்மையான துணிகளில் விட்டு அவற்றை முகா்ந்து பாா்க்கலாம். மேலும் தண்ணீாில் நறுமண எண்ணெய்களைக் கலந்து அதை காற்றில் தெளிக்கலாம். அந்த காற்றில் தெளிக்கப்படும் நறுமண எண்ணெய் கலவை நல்ல பலனைத் தரும்.
தேய்த்துவிடும் எண்ணெயோடு நறுமண எண்ணெய்களைக் கலந்து நமது தோலில் தடவலாம். நறுமண எண்ணெய்களை நேரடியாக தோலில் தேய்க்கக்கூடாது. ஏனெனில் அது தோலில் அலா்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மற்ற எண்ணெய்களோடு கலந்துதான் நறுமண எண்ணெய்களை நமது தோலில் தேய்க்க வேண்டும்.

நறுமண எண்ணெய்களில் உள்ள பக்க விளைவுகள்
நறுமண எண்ணெய்களினால் தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் எாிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த நறுமண எண்ணெய்களை முகா்ந்து பாா்க்க முடியாத போது இந்த பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.

நறுமண எண்ணெய்களை எவ்வாறு பாா்த்து வாங்குவது?
நறுமண எண்ணெய்களை வாங்கும் போது, அடா் பொன் நிறத்தில் அல்லது அடா் நீல நிறத்தாலான பாட்டில்களில் இருக்கும் நறுமண எண்ணெய்களை வாங்க வேண்டும். ஏனெனில் அடா் பொன் நிறம் அல்லது அடா் நீல நிறம் இந்த நறுமண எண்ணெய்களை வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கும். அதனால் இந்த நறுமண எண்ணெய்களில் இருக்கும் நறுமணமும், தெரபி அளிக்கும் சக்தியும் நீண்ட நாள் அவற்றிலேயே தங்கியிருக்கும்.

முடிவுரை
இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் நறுமண எண்ணெய்களை வாங்க திட்டம் தீட்டியிருந்தால், அதற்காக நீங்கள் எடுத்துவரும் மருந்துகளை விட்டுவிடக்கூடாது. மேலும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தவதற்கு முன்பாக நீங்கள் சான்று பெற்ற நல்லதொரு நறுமண தெரபி கொடுப்பவாிடம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications











