Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக திருமணமான ஆண்கள் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
நாம் அனைவருமே உலர் திராட்சையின் நன்மைகளைப் பற்றி படித்திருப்போம். திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை கருப்பு மற்றும் ப்ரௌன் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே ஒரே மாதிரியான நன்மைகளை வழங்கக்கூடியவை தான். இதில் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் நிறைந்திருப்பதோடு, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், அன்றாட உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

உலர் திராட்சையை நாம் வெறுமனே சாப்பிடலாம் அல்லது நீர்/பாலில் கூட ஊற வைத்து சாப்பிடலாம். ஆனால் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக திருமணமான ஆண்கள் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது ஆண்களின் கருவளத்தை மேம்படுத்தும். இப்போது ஒருவர் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.

செரிமானம் சீராக இருக்கும்
உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இதை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும். நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.

குடல் ஆரோக்கியம் மேம்படும்
குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு ஆரோக்கியமான குடல் தேவை. உலர் திராட்சையில் ப்ரீபயாடிக்குகள் மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. ஆய்வு ஒன்றில், பாலுடன் உலர் திராட்சையை எடுக்கும் போது, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்து குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதாக தெரிய வந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கும் உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக்கும்
தினமும் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இவற்றில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்களான டானின்கள் மற்றும் பீனால்கள் உள்ளன. ஆகவே இதய பிரச்சனைகள் வரக்கூடாது என்றால், பாலுடன் உலர்திராட்சையை சாப்பிடுங்கள்.

வாய் ஆரோக்கியம் மேம்படும்
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மற்றும் பால் பெரிதும் உதவுகிறது. எப்படியெனில் உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், பல் சொத்தைக்கு எதிராக பாதுகாக்க உதவும். மேலும் உலர் திராட்சையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாவர ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவி புரிகிறது. அதோடு பாலில் உள்ள கால்சியம் மற்றும் ஒலினோலிக் அமிலம் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆகவே உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கும்
ஆண்களிடையே உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்களின் வாழ்க்கைத் தரமும் மோசமாக உள்ளது. ஆய்வாளர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உலர் திராட்சையை சேர்த்து உட்கொள்வது, இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும்.

எலும்புகளை வலுவாக்கும்
பால் மற்றும் உலர் திராட்சையை ஒன்றாக உட்கொள்வது எலும்புகளை வலுவாக்க உதவும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் உலர் திராட்சையிலும் கால்சியம் உள்ளது. எனவே கால்சியம் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுக்கும் போது, எலும்புகள் வலிமையாகும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. எனவே நீங்கள் உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால் பாலில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.

விந்தணு இயக்கம் சிறப்பாக இருக்கும்
பொதுவாக ஆண்களில் காதல் வாழ்க்கையைப் பராமரிக்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உலர் திராட்சையைப் பற்றி கூற வேண்டுமானால், அது இன்னும் சிறப்பான பலனைத் தரும். ஆய்வின் படி, உலர் திராட்சை ஆண் கருவுறுதலை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், விந்தணு இயக்கத்தை அதிகரிக்கும் செயல்பாடும் அதில் தீவிரமாக காணப்படுகிறது. இருப்பினும், திருமணமான ஆண்கள் மட்டும் உலர் திராட்சையை பாலுடன் சாப்பிட வேண்டும் என்பதில்லை. இளைஞர்களும் தங்களின் வலிமையை அதிகரிக்க சாப்பிடலாம்.

பாலுடன் உலர் திராட்சையை எப்படி மற்றும் எப்போது சாப்பிடலாம்?
* 6-8 உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டவும். அதன் பின் உலர் திராட்சையை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து பாலை குடிக்கலாம்.
* ஒருவேளை உங்களுக்கு உலர் திராட்சையை தனியாக சாப்பிட பிடிக்காவிட்டால், பாலில் சேர்த்து மசித்து குடிக்கலாம்.
* உலர் திராட்சை பாலை இரவு நேரத்தில் அல்லது காலை வேளையில் குடிப்பது நல்லது. ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண வேண்டுமானால், தொடர்ந்து 5-7 நாட்கள் குடிக்க வேண்டும்.

குறிப்பு
உலர் திராட்சையில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நாளைக்கு பத்து உலர் திராட்சைக்கு மேல் சாப்பிட கொடுக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











