Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
உங்களுக்கு கடுமையான கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
உடலில் எப்போது செரிமான நொதிகளின் ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, செரிமான நொதிகளானது கணையத்தையே தாக்க ஆரம்பிக்கிறதோ, அப்போது கணைய அழற்சி ஏற்படுகிறது.
கணைய அழற்சி என்பது கணைய சுவர்களில் ஏற்பட்டுள்ள அழற்சியாகும். உடலில் எப்போது செரிமான நொதிகளின் ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, செரிமான நொதிகளானது கணையத்தையே தாக்க ஆரம்பிக்கிறதோ, அப்போது இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை இருந்தால், அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும்.

நாள்பட்ட கணைய அழற்சி கணையத்தின் செயல்பாட்டைக் குறைக்கும். இதன் விளைவாக உடலில் சாதாரணமாக சுரக்கப்படும் செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி திறன் குறையும். கணையத்தின் செயல்திறன் குறைந்தால், அது சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் கழகத்தின் (என்ஐடிடிகே) படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,75,000 அமெரிக்கர்கள் கடுமையான கணைய அழற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கணையம் என்றால் என்ன?
கணையம் என்பது அடிவயிற்றில் ஆழமாக அமர்ந்திருக்கும் ஒரு தட்டையான சுரப்பி. இந்த முக்கிய உறுப்பு செரிமான மண்டலத்தின் மென்மையான செயல்பாட்டிற்குத் தேவையான பல்வேறு நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியுடன் தொடர்புடையது.

கணைய அழற்சியின் வகைகள்:
கணைய அழற்சியில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:
* கடுமையான கணைய அழற்சி
* நாள்பட்ட கணைய அழற்சி
கடுமையான கணைய அழற்சி குறுகிய காலத்தில் குணமாகக்கூடியது. பெரும்பாலும் கடுமையான கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் 5-10 நாட்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
அதுவே நாள்பட்ட கணைய அழற்சி பல ஆண்டுகளாக வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகளால் நீடித்திருக்கும்.
இப்போது நாம் காணவிருப்பது கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகளையும், காரணங்களையும் குறித்து தான்.

கடுமையான கணைய அழற்சி
கடுமையான கணைய அழற்சி என்பது திடீரென்று கணையத்திற்கு ஏற்படும் அழற்சியாகும். இதனால் சந்திக்கும் அசௌகரியமானது லேசானது முதல் மிதமானதாக இருக்கும். சரியான சிகிச்சையின் மூலம் பெரும்பாலும் இதை முற்றிலும் சரிசெய்ய முடியும். ஆனால் தீவிர நிலையில் கடுமையான கணைய அழற்சியினால் தொற்றுக்கள், கணைய சுரப்பியில் இரத்தக்கசிவு, கட்டி உருவாக்கம் மற்றும் தீவிரமான திசு பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக கணைய அழற்சி தீவிரமானால், அது மற்ற முக்கிய உறுப்புக்களான நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் போன்றவற்றிலும் பாதிப்பை உண்டாக்கும்.

கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள்:
* குமட்டல்
* வாந்தி
* உணவு உண்ட பின் அடிவயிறு வீங்கி காணப்படுவது
* மேல் அடிவயிற்றில் வலி
* காய்ச்சல்
* வேகமான நாடித்துடிப்பு
* அடிவயிற்று வலி முதுகு வரை பரவி இருப்பது

கடுமையான கணைய அழற்சிக்கான காரணங்கள்
பித்தக்கற்கள்
பெரும்பாலான கடுமையான கணைய அழற்சியானது, செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் செல்லும் பாதையில் பித்தக்கற்கள் இருந்தால், அவற்றின் ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, அதன் விளைவாக கணையத்தில் அழற்சி ஏற்படும்.

அதிக கொழுப்பு
இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொழுப்பு அதிகளவு இருந்தால், ப்ரீ ராடிக்கல்களின் தூண்டுதலால் கணைய செல்களில் பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான கணைய அழற்சி ஏற்படலாம்.

மதுப் பழக்கம்
யார் அதிகமாக ஆல்கஹால் குடிக்கிறாரோ, அவர்களுக்கு கடுமையான கணைய அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிகளவு மதுவை அருந்தும் போது, முதலில் அதிகமாக பாதிக்கப்படுவது கணையம் தான் என்பதை மறவாதீர்கள்.

ஆட்டோ இம்யூன் கணைய அழற்சி
இது மிகவும் அரிய வகை கணைய அழற்சி. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணையத்தைத் தாக்குவதால் ஏற்படும் நிலையாகும்.

விபத்துக்கள்
விபத்துக்களின் காரணமாக நேரடியாக அடிவயிற்றில் அடிப்பட்டு கணையத்தில் காயங்கள் ஏற்பட்டால், அதன் விளைவாகவும் கடுமையான கணைய அழற்சி ஏற்படலாம்.

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என்பது ஒரு நாள்பட்ட மரபணு நோயாகும். இது அசாதாரணமாக அடர்த்தியான மற்றும் பிசுபிசுப்பான சளி உற்பத்தியால், நுரையீரல் மற்றும் செரிமான அமைப்புகளின் பாதை சுவர்களில் தங்கி, குழாயை சுருக்குவதால் ஏற்படுவதாகும்.

மருந்துகள்
ஈஸ்ட்ரோஜென், கார்டிகோஸ்டெராய்டுகள் கொண்ட மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட ஆன்டி-பயாடிக்குகள், கணைய அழற்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.



Click it and Unblock the Notifications